சுக்ரியா பராக்சாய்
சுக்ரியா பராக்சாய் ( Shukria Barakzai ) ஓர் ஆப்கானித்தான் அரசியல்வாதியும், பத்திரிகையாளரும், ஓர் முக்கிய முஸ்லிம் பெண்ணியவாதியும் ஆவார் . இவர் நோர்வேக்கான ஆப்கானித்தானின் தூதராக இருந்தார்.[1] இவர் ஆண்டின் சர்வதேச ஆசிரியர் விருது பெற்றவர்.
சுக்ரியா பராக்சாய் | |
---|---|
மார்ச்சு 2011இல் சுக்ரியா பராக்சாய் | |
பிறப்பு | 1970 (அகவை 54–55) காபுல், ஆப்கானித்தான் |
தேசியம் | ஆப்கன் |
பணி | அரசியல்வாதி, தூதர் |
அறியப்படுவது | 2005இல் கீழ்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் ஆப்கானிஸ்தானின் காபுலில் 1970 இல் பிறந்தார். நாட்டின் முக்கிய இனக்குழுக்களான பஷ்தூன் மக்களிடையே "பராக்சாய்" என்பது ஒரு பொதுவான பெயராக உள்ளது. மேலும் 1830களிலிருந்து கடைசி மன்னர் தூக்கியெறியப்படும் வரை அதன் ஆட்சியாளர்களால் இப்பயர் பகிரப்பட்டது. இவர் ஆப்கானித்தானின் அதிகாரப்பூர்வ மொழிகளான பஷ்தூ, தாரி, ஆங்கிலம் ஆகியவற்றை பேசுகிறார். இவரது தந்தை வழி தாத்தா ஒரு சமையல்காரராக இருந்தார். அதே நேரத்தில் இவரது தாய்வழி தாத்தா மன்னர் சாகிர் கான் காலத்தில் ஆட்சிக் குழுவில் ஒருவராக இருந்தார்.
பராக்சாய், 1990களில் காபுல் பல்கலைக்கழகத்திற்கு பயிலச் சென்றார். ஆப்கானித்தான்அரசாங்கத்துக்கும் முஜாஹிதீன்களுக்கும் இடையே அதிகரித்து வந்த வன்முறையால் இவர் பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். செப்டம்பர் 1996இல் தலிபான்கள் காபுலைக் கைப்பற்றினர். அதற்குள், பல குடிமக்கள், குறிப்பாக படித்த நடுத்தர வர்க்கத்தினர், நாடுகடந்த வாழ்க்கைக்காக வெளியேறினர் .
பத்திரிகைப் பிரச்சாரம்
தொகுதாலிபான் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பராக்சாய் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். 2002 இல் ஐனா-இ-சான் ( மகளிர் கண்ணாடி ) என்ற தேசிய வாரப் பத்திரிகையை நிறுவினார். ஆப்கானித்தானில் தாய் சேய் இறப்பு விகிதம் அதிகளவில் இருந்த பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.[2] ( உலக சுகாதார அமைப்பு 2003இல் ஆப்கானித்தான் உலகிலேயே பிரசவத்தில் இறக்கும் பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பதாக கவலை தெரிவித்தது (10000 நேரடி பிறப்புகளுக்கு 1900 இறப்பு[3] ). சிறுவர் திருமணம், கட்டாயத் திருமணம், பெண்களுக்கு எதிரான வன்முறை இன்னும் பொதுவான மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளாக இருப்பதாக" பராக்சாய் கூறுகிறார். இவர் பெரிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறார். “என் கருத்துப்படி புரூக்கா அவ்வளவு முக்கியமல்ல. முக்கியமானது கல்வி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம்” என்கிறார்.[2] இவர் பெண்கள் மத்தியில் ஒற்றுமையையும் ஆண்கள் செய்ய வேண்டிய பங்கைப் பற்றியும் வலியுறுத்துகிறார்.[4]
தலிபான் ஆட்சியில் தடைசெய்யப்பட்ட செல்லிடத் தொலைபேசி போன்ற தொழில்நுட்பத்தை இவர் பாராட்டுகிறார், இளம் ஆப்கானியர்கள் நவீன உலகத்துடன் ஒருங்கிணைக்க உதவுகிறார். உதாரணமாக, ஒரு தொலைக்காட்சி திறமை நிகழ்ச்சி போட்டியில் பங்கேற்பாளருக்கு வாக்களிக்க குறுஞ்செய்தியைப் பயன்படுத்துவது ஜனநாயக வாக்களிப்பு எவ்வாறு செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கிறது. பத்திரிகை சுதந்திரம் இல்லாமையும் பத்திரிகையாளர்களுக்கு ஏற்படும் அபாயங்களை சுட்டிக்காட்டவும் இவர் தனது நிலையை பயன்படுத்துகிறார். எல்லைகளற்ற செய்தியாளர்களின் எண்ணிக்கையில் 173இல் ஆப்கானித்தானை 156 வது இடத்தில் பத்திரிக்கை சுதந்திரத்தில் பட்டியலிட்டுள்ளனர். மேலும் இத்துறையில் மாகாணங்களில் பணிபுரியும் பெண்களுக்கு நிலைமை மிகவும் கடினம் என்று கூறுகிறார்.
குடும்பம்
தொகுசுக்ரியா பராக்சாய்க்கு மூன்று மகள்கள் இரண்டு மகன்கள் என ஐந்து குழந்தைகள் உள்ளனர்
அங்கீகாரம்
தொகுஉலக பத்திரிக்கை விமர்சனம் (Worldpress.org) 2004 ஆம் ஆண்டில் இவரை ஆண்டின் சர்வதேச ஆசிரியராக தேர்வு செய்தது. [5] திசம்பர் 2005 இல், பிபிசி ரேடியோ 4இன் வுமன்ஸ் ஹவர் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஆண்டின் சிறந்த பெண்மணி என்ற பெயரைப் வழங்கியது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Ambassador H.E. Ambassador Shukria Barakzai". Embassy of the Islamic Republic of Afghanistan, Oslo, Norway. பார்க்கப்பட்ட நாள் 27 May 2018.
- ↑ 2.0 2.1 "Afghan Editor Works to Rebuild Country" பரணிடப்பட்டது 2009-08-11 at the வந்தவழி இயந்திரம் 30 July 2005 பெண்கள் மின் செய்தி
- ↑ "Annexes by country (A-F)" (PDF), The world health report 2005 - make every mother and child count, World Health Organization
- ↑ Ebadi, Shirin; Barakzai, Shukria; Bobanazarova, Oynihol (December 29, 2005). "Women & Power in Central Asia (Part 4): Roundtable On The Tajik, Afghan, and Iranian Experiences". RadioFreeEurope/RadioLiberty. பார்க்கப்பட்ட நாள் 1 June 2018.
- ↑ "International Editor of the Year Award". Worldpress.org. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
- ↑ Women of the Year: Shukria Barakzai, BBC Radio 4.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் சுக்ரியா பராக்சாய் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Worldpress list of resources: speeches, photos, interview
- Jenni Murray interviews Barakzai on Woman's Hour
- interview பரணிடப்பட்டது 2011-05-01 at the வந்தவழி இயந்திரம் in Asharq Al-Awsat
- Qadria Yazdanparast former member of Afghan Parliament
- Barakzai on breaking taboos - Interview in Digital Development Debates பரணிடப்பட்டது 2012-11-28 at the வந்தவழி இயந்திரம்