சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்
சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம் (ஆங்கிலம்: Sungai Palas Tea Plantation, மலாய் மொழி: Ladang Teh Sungai Palas) என்பது மலேசியா, பகாங், கேமரன் மலை, பிரிஞ்சாங்கில் அமைந்துள்ள ஒரு தேயிலைத் தோட்டம் ஆகும். இதனை போ தேயிலை தோட்டம் என்று பரவலாக அழைப்பதும் உண்டு. 1929-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இத்தேயிலைத் தோட்டம் மலேசியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மை இடம் வகிக்கிறது.[1]
போ (BOH) தேயிலை நிறுவனத்திற்கு 8000 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.[2] சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டத்தில், 4 மில்லியன் கிலோ தேயிலை உறபத்தி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு கேமரன் மலையில் போ தேயிலை தோட்டம்; சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்; பேர்லி தேயிலை தோட்டம்; என மூன்று தேயிலைத் தோட்டங்களும், சிலாங்கூர் மாநிலத்தில் புக்கிட் சீடிங் எனும் இடத்தில் ஒரு தேயிலைத் தோட்டமும் உள்ளன.[3]
ஜான் அர்சிபால்ட் ரஸ்ஸல்
தொகுபாரத் தேயிலை தோட்டத்தைக் காட்டிலும், சுங்கை பாலாஸ் தோட்டத்திற்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை தருகின்றனர். அதற்கு காரணமும் உண்டு. மலேசியாவில் அதிகமானோர் போ தேயிலையையே அதிகமாக விரும்பி நுகர்கின்றனர்.[4]
சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம், பிரிஞ்சாங் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் கீ பண்ணைச் சந்தையில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இந்தத் தோட்டம் 1929-இல் ஜான் அர்சிபால்ட் ரஸ்ஸல் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 1890-இல் இவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது, தன் தந்தையாருடன் இங்கிலாந்தில் இருந்து மலாயாவுக்கு வந்தார்.[5]
மலேசியாவின் முதல் தேயிலை தோட்டம்
தொகு1913-இல் சிலாங்கூர், பத்து ஆராங்கில் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தைத் திறந்தார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சுரங்கத் தொழிலில் ஏற்பட்ட சில சறுக்கல்களினால் தேயிலை உற்பத்தி துறையில் அவருடைய கவனம் திசை மாறியது. அதுதான் அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய திருப்பு முனையாகும்.[6] 1932-இல் தன்னுடைய 50-ஆவது வயதில் காலமானார். அதன் பின்னர் அவருடைய மகன் திரிஸ்தான் பியூசாம்ப் ரஸ்ஸல் (82) என்பவர் போ நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்சமயம் திரிஸ்தானின் மகள் காரலின் போ நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி வகிக்கிறார்.[7]
மலேசியாவில் முதன்முதலாகத் திறக்கப்பட்ட தேயிலை தோட்டம், இந்த சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம். மலேசியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில் போ தேயிலை நிறுவனம் 70 விழுக்காடு தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது.[8]
மேற்கோள்
தொகு- ↑ The Boh Tea Plantations were started by John Archibald Russell, the son of a government official, in 1929.
- ↑ Boh Tea Plantation has a total of 8000 acres planted with tea.
- ↑ Boh owns four tea gardens in the country, namely Boh, Sg Palas and Fairlie in Cameron Highlands, and Bukit Cheeding in Selangor.
- ↑ Sungai Palas Tea Plantation is definitely more popular among tourists as compared to Bharat's Cameron Valley Tea Plantation.
- ↑ John Archibald Russell, who came from England to Malaya in the 1890.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Thus, BOH Plantations, the current market leader for tea, was born". Archived from the original on 2016-03-21. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
- ↑ Of his two children, Caroline, as the CEO of the company and a Malaysian citizen, is actively involved while John, who was instrumental in setting up the company’s tea plantation in Australia, is now a software designer living in the United States.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The plantation was opened in 1929 by J. A. Russell, a British concern. It was the first tea plantation opened in Malaysia, hence it comes to no surprise of its popularity". Archived from the original on 2015-04-12. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.