சுங்கை பூலோ சிறைச்சாலை

சுங்கை பூலோ சிறைச்சாலை (ஆங்கிலம்: Sungai Buloh Prison; மலாய்: Penjara Sungai Buloh; சீனம்: 双溪毛糯监狱) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், செலாயாங் நகராட்சியில் உள்ள ஒரு சிறைச்சாலை ஆகும். இது மலேசியாவின் மிகப்பெரிய சிறை வளாகமாகும். மலேசிய சிறைத் துறை; மற்றும் மலேசிய உள்துறை அமைச்சு; ஆகியவற்றால் இந்தச் சிறைச்சாலை நிர்வகிக்கப்படுகிறது.

சுங்கை பூலோ சிறைச்சாலை
Sungai Buloh Prison
Penjara Sungai Buloh
சுங்கை பூலோ சிறைச்சாலை is located in மலேசியா
சுங்கை பூலோ சிறைச்சாலை
      சுங்கை பூலோ சிறைச்சாலை
இடம்கோலா சிலாங்கூர்-சுங்கை பூலோ சாலை, 47000 சுங்கை பூலோ, பெட்டாலிங் மாவட்டம், சிலாங்கூர், மலேசியா
அமைவு3°13′56″N 101°29′45″E / 3.232357°N 101.495900°E / 3.232357; 101.495900
நிலைசெயல்பாட்டில் உள்ளது
பாதுகாப்பு வரையறைஉயர் பாதுகாப்பு
திறக்கப்பட்ட ஆண்டுநவம்பர் 1996
நிருவாகம்மலேசிய சிறைத் துறை

மலேசிய சிறைத் துறையில், இந்தச் சிறைச்சாலையே ஒருங்கிணைந்த மின்னணு பாதுகாப்பு அமைப்புடன் கூடிய முதல் சிறைச்சாலை ஆகும்.[1]

இந்தச் சிறைச்சாலை RM 172 மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. சிறைச்சாலையின் கட்டுமானம் 1992-இல் தொடங்கப்பட்டு அக்டோபர் 1996-இல் நிறைவடைந்தது. பின்னர் நவம்பர் 1996-இல் திறக்கப்பட்டது. கோலாலம்பூரில் உள்ள புடு சிறைச்சாலைக்குப் பதிலாக, இந்தச் சிறைச்சாலை கட்டப்பட்டது. இந்தச் சிறையில் 3000 கைதிகளைச் சிறை வைக்கும் வசதி உள்ளது.[1]

பொது

தொகு

சுங்கை பூலோ சிறை வளாகத்தில் முதன்மைச் சிறைச்சாலை, நிர்வாகத் தொகுதி, தளவாடங்களின் இருப்புத் தொகுதி, வாகன அலுவலகம், காவல் நிலையம், பணியாளர்கள் குடியிருப்பு, பல்நோக்கு மண்டபம், பணியாளர்களுக்கான ஓய்வு மையம், பணியாளர்களுக்கான தொழுகை வளாகம் மற்றும் விளையாட்டுப் பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன.[2]

சிறைச்சாலையில் 5 மாடிகள் உள்ளன. ஒவ்வொரு மாடியின் உயரம் 21.5 மீ (71 அடி). அவற்றுள் கைதிகள் தங்கும் 28 குடியிருப்புக் கட்டிடங்கள் உள்ளன. 2023-ஆம் ஆண்டு சுலை 22-ஆம் தேதி இந்தச் சிறைச்சாலை அதன் மறுசீரமைப்பைத் தொடங்கியது. 2024 ஆம் ஆண்டின் மத்தியில் அதன் மறுசீரமைப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1][3][4]

இந்தச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம், மலேசியா டுடே வலைப்பதிவின் ஆசிரியர் ராஜா பெட்ரா கமருதீன்; அல்தான்தூயா சாரிபூ கொலைத் தொடர்பில் அப்துல் ரசாக் பகிண்டா போன்றோர் மிக முக்கியமானவர்களாக அறியப்படுகிறார்கள்.[5]

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 "The prison has a 5 floors with 28 quarters buildings. the height of the buildings is 21.5 m (71 ft). it has 560 quarters. the prison has a playground, a surau and halls". www.prison.gov.my. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
  2. "Penjara Sungai Buloh, 47000 Sungai Buloh, Selangor". www.prison.gov.my. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
  3. "Sungai Buloh Prison - Penjara Sungai Buloh in Malaysia". Global Detention Project. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
  4. "The Prime Minister urged the Home Ministry's chief secretary to ensure the repair works are carried out as soon as possible". Pejabat Perdana Menteri. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
  5. Freelancer, Anonymous (23 August 2022). "6 Things I learnt from spending 2 years in Penjara Sungai Buloh". பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கை_பூலோ_சிறைச்சாலை&oldid=3939209" இலிருந்து மீள்விக்கப்பட்டது