சுங்தாங் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் தீட்தா ஆற்றின் துணையாறுகளான லேச்சன், லாச்சுங் சு ஆகியன இணையும் இடத்தில் அமைந்துள்ளது.[1] இது சிக்கிம் மாநலத் தலைநகரான கேங்டாக்கில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இங்கு இந்தியத் தரைப்படையின் தளம் ஒன்றும் உள்ளது.

சுங்தாங்
—  நகர்ப்புறம்  —
சுங்தாங்கின் தோற்றம், 1938
சுங்தாங்கின் தோற்றம், 1938
சுங்தாங்
அமைவிடம்: சுங்தாங், சிக்கிம் , இந்தியா
ஆள்கூறு 27°37′N 88°38′E / 27.62°N 88.63°E / 27.62; 88.63
நாடு  இந்தியா
மாநிலம் சிக்கிம்
மாவட்டம் வடக்கு சிக்கிம்
ஆளுநர் சீனிவாச பாட்டீல், லட்சுமன் ஆச்சார்யா
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், பிரேம் சிங் தமாங்
மக்களவைத் தொகுதி சுங்தாங்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,790 மீட்டர்கள் (5,870 அடி)

மக்கள்

தொகு

இவ்வூரின் பெரும்பான்மையான மக்கள் இலெப்ச்சா இனத்தவர் ஆவர். இவர்கள் புத்த மதத்தையோ கிறித்துவத்தையோ பின்பற்றுகின்றனர்.[1] இவ்வூர் பல விதமான விலங்குகளையும் செடிகளையும் கொண்டு உயிரினப் பல்வகைமை நிறைந்துள்ளது. 2001-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இவ்வூரின் மக்கட்தொகை 3,766 பேர் ஆவர். மக்களடர்த்தி ஒரு எக்டேருக்கு சராசரியாக மூன்று பேர் ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "North Skikkim". National Informatics Centre. Archived from the original on 21 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Choudhury, Maitreyee (2006). Sikkim: Geographical Perspectives. Mittal Publications. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-158-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்தாங்&oldid=3930035" இலிருந்து மீள்விக்கப்பட்டது