சுஜாதா அத்தநாயக்க
கலாசூரி விசாரதா கலாநிதி முதுன்கொடுவ முனசிங்க ஆராச்சிகே சுஜாதா பெரேரா (பிறப்பு 12 மே 1942: சுஜாதா அத்தநாயக்க ), பேச்சுவழக்கில் சுஜாதா அத்தநாயக்க என்று அழைக்கப்படும், ஓர் இலங்கை பாடகர் ஆவார்.[1] இவர் இலங்கைத் திரைப்படத்துறை மற்றும் தமிழகத் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு முக்கிய பின்னணி பாடகி ஆவார். சிங்கள இசையின் முன்னணிப் பெண்மணியாகக் கருதப்படும் இவர், ஏழு தசாப்தங்களுக்கும் மேலான வாழ்க்கையில் 115-க்கும் மேற்பட்ட இசைத்தட்டுகளை வெளியிட்ட இலங்கைப் பாடகி என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவர் இலங்கையின் முதல் பெண் இசை அமைப்பாளரும் ஆவார்.[2] சுஜாதா கிட்டத்தட்ட 400 சிங்களத் திரைப்படங்கள் மற்றும் 20 இலங்கை-இந்தியத் தமிழ் திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக பங்களித்துள்ளார். 6000க்கும் மேற்பட்ட சிங்களப் பாடல்களையும், 9 வெவ்வேறு மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.[3]
முனைவர் சுஜாதா அத்தநாயக்க | |
---|---|
தாய்மொழியில் பெயர் | ආචාර්ය සුජාතා අත්තනායක |
பிறப்பு | முதுன்கொடுவ முனசிங்க ஆராச்சிகே சுஜாதா பெரேரா 12 மே 1942 களனி, இலங்கை |
கல்வி | வெதமுல்ல மகா வித்தியாலயா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் பத்கன்டே இசை நிறுவனம்]] |
பணி | பாடகி, விரிவுரையாளர், கல்வி அமைச்சகத்தின் இயக்குநர் |
வாழ்க்கைத் துணை | நவரத்னே அத்தநாயக்க |
பிள்ளைகள் | 3 |
விருதுகள் | நுண்கலை யில் முனைவர் பட்டம் (கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் 2019) |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு, சித்தார், கைம்முரசு, வயலின், கித்தார், ஆர்மோனியம் |
இசைத்துறையில் | 1950–தற்போது வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
சொந்த வாழ்க்கை
தொகுசுஜாதா 1942 மே 12 அன்று களனியில் ஐந்து உடன்பிறப்புகளில் மூன்றாவதாகப் பிறந்தார். இவரது தந்தை முதுன்கொடுவ முனசிங்க ஆராச்சிகே தர்மதாச பெரேரா காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஆவார். இவரது தாயார் கெர்ட்ரூட் மார்கரெட் வோல்போஃப் என்கிற விமலா காந்தா ஓர் நடிகையும் மற்றும் பாடகியும் ஆவார். [4] 1947 ஆம் ஆண்டு களனி வெதமுல்ல மகா வித்தியாலயத்தில் கல்வியை ஆரம்பித்தார்.[5] இவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவரது சகோதரி ரஞ்சனி பெரேரா ஒரு புகழ்பெற்ற நடன ஆசிரியர். மேலும், இவரது இளைய சகோதரர் சுசில் பெரேரா ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகரும் மற்றும் இசைக்கலைஞரும் ஆவார்.[6]
சுஜாதா நவரத்ன அத்தநாயக்க என்பவரை நவரத்னவை மாநில இசைக் கல்லூரியில் சந்தித்து திருமணம் செய்து கொண்டார்.[7] இத்தம்பதிக்கு ஹெலி சஜீவா, சானகா, சமின் என மூன்று மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கேப்டன் சனக சஞ்சீவா 1992 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி இரண்டாம் ஈழப் போரின் போது பூனேரியில் காலமானார்.[6] அவரது மரணத்திற்குப் பிறகு, சுஜாதா பாடுவதை விட்டுவிட்டு வெள்ளைச் சேலைகளை அணியத் தொடங்கினார். [8] [9]
தனது மகனின் மரணத்திற்குப் பிறகு, இவர் [10] ரசிகர்களின் வேண்டுகோளுக்காக, 2012 இல் ஜீவன விழா மேதா என்ற தலைப்பில் தொடர்ச்சியான வெற்றிகரமான இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இவர் 6000க்கும் மேற்பட்ட சிங்களப் பாடல்களையும் 1000 தமிழ்ப் பாடல்களையும் பாடியுள்ளார்.[5][11]
2016 ஆம் ஆண்டில், சுஜாதா இலங்கை காவல்துறையின் கருத்தாக்கப் பாடலுக்கான இசையை இயக்கினார். பின்னர் இலங்கை சிறப்பு அதிரடிப்படையின் கருத்தாக்கப் பாடலையும் இயற்றினார். [5]
விருதுகளும் பாராட்டுகளும்
தொகு1965 ஆம் ஆண்டில், யாத கிய தவாசா திரைப்படத்தில் துகா ஏகா ஏகா பேரலிலா பாடலுக்காக அந்த ஆண்டின் சிறந்த பாடகிக்கான சுவர்ண சங்க விருது இவருக்கு வழங்கப்பட்டது.[5] 1966 ஆம் ஆண்டு சரசவியா திரைப்பட விழாவில் பரசத்துமால் படத்தில் பரவுனு மல் வாலா பாடலுக்காக விருதை வென்றார். இலங்கை முஸ்லிம் கலைஞர் முன்னணி என்ற அமைப்பு இவருக்கு “பான் மை கோகிலம்” விருது வழங்கியது. [10] 2021 ஆம் ஆண்டில், இலங்கைத் திரைப்படங்களின் ஆரம்ப தசாப்தங்களில் இலங்கைத் திரைபடங்களுக்கும் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய 21 கலைஞர்களுக்கு நடைபெற்ற விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[12]
2019 ஆம் ஆண்டில், நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த மகனைப் பரிசாகப் பெற்ற வீரத் தாயாக சுஜாதா அத்தநாயக்கா கௌரவிக்கப்பட்டார். [13] அதே ஆண்டில், இவருக்கு கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.[14][11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sujatha Attanayaka filmography". Sinhala Cinema Database. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ "Sujatha Aththanayaka - සුජාතා අත්තනායක bio". Everlasting ගී radio. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ "Sujatha the genius female musician in the annals of our history". sundaytimes. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ "Sujatha Attanayake enters the song". Lankadeepa. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "Jeewana Vila Meda concert in Nelum Pokuna". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ 6.0 6.1 "Come to Anuradhapura and be comforted". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ "Awards were given away". Dinamina. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ "Twenty years after Mahinda Rajapaksa's request Sujatha Attanayake sings a song". aperata. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ "Chat with Sujatha Aththanayaka". Hiru FM. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ 10.0 10.1 "Cultured human voice that dominated music scene". Sunday Observer. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ 11.0 11.1 "Sujatha blends academic and skilled expertise to deliver Aesthetic delight". lankanewsweb. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ "An award for pioneering artists in cinema". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
- ↑ "The country where it was born is born and died". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ "Sujatha Attanayake honored with doctorate". mirrorarts. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.