சுதா சிவ்புரி

சுதா சிவ்புரி (Sudha Shivpuri) (14 சூலை 1937 - 20 மே 2015) ஓர் இந்திய நடிகையான இவர், கியுங்கி சாஸ் பி கபி பாஹு தி (2000–2008) என்ற இந்தித் தொலைக்காட்சித் தொடரில் "பா" என்ற பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்.[1][2]

சுதா சிவ்புரி
பிறப்பு(1937-07-14)14 சூலை 1937
இந்தோர், இந்தூர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு20 மே 2015(2015-05-20) (அகவை 77)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள்மீத்து அம்பா
செயற்பாட்டுக்
காலம்
1964 – 2015
வாழ்க்கைத்
துணை
ஓம் சிவ்புரி
(தி. 1968; இற. 1990)
பிள்ளைகள்ரிது சிவ்புரி
வினீத் சிவ்புரி

ஆரம்பகால வாழ்க்கையும் தொழிலும்

தொகு

ராஜஸ்தானில் வளர்ந்த சுதா சிவ்புரி பள்ளியில் எட்டாம் வகுப்பில் இருந்தபோதே தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இவர், 1963ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியில் முன்னாள் மாணவர் ஆவார். அங்கே மாணவராகச் சேர்ந்த ஓம் சிவ்புரியை 1968இல் திருமணம் செய்து கொண்டார்.[3] பின்னர், தில்லி நாடகங்களில் தொடர்ந்து பணியாற்றினர். இவர் தனது கண்வருடன் சேர்ந்து முக்கியமான நாடகக் குழுவான "திஷந்தர்" என்பதை புதுதில்லியில் நிறுவினார்.[4] இந்நிறுவனம் ஆதே ஆதுரே, துக்ளக், விஜய் டெண்டுல்கரின் காமோஷ் உட்பட பல முக்கியமான சமகால நாடகங்களை உருவாக்கியது. அதாலத் ஜாரி ஹை என்ற நாடகத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நாடங்கள் அனைத்தையும் இவரது கணவர் ஓம் சிவ்புரி இயக்கியிருந்தார்.

திரைப்படங்கள்

தொகு

1974 ஆம் ஆண்டில், தனது கணவர் பாலிவுட் படங்களில் நடிக்க சில வாய்ப்புகளை பெற்றதால் இவரும் அவருடன் மும்பைக்கு மாறினார்.[5]

1977 ஆம் ஆண்டில் பாசு சாட்டர்ஜியின் சுவாமி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர், இன்சாஃப் கா தாராசு, ஹமாரி பாஹு அல்கா, "ஹம் தோனோ (1985)", சவான் கோ அனே டோ, சன் மேரி லைலா, தி பர்னிங் ரயில், விதாதா மற்றும் மாயா மெம்சாப் (1993) போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். 2003 ஆம் ஆண்டில் அமிரிதா பிரீதமின் புகழ்பெற்ற "பார்ட்டீசியன்" என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட பிஞ்சர் என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்தார்.

நாடகத் தொடர்

தொகு

அதன்பிறகு இவர் படங்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு தொலைக்காட்சிக்கு மாறினார். அங்கு இவர் ஆ பெயில் முஜே மார், ரஜ்னி (1985) போன்ற சில நாடகத் தொடர்களில் நடித்தார்.

1990 இல் தனது கணவர் இறந்த பிறகு, இவர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். மிஸ்ஸிங், ரிஷ்தே, சர்ஹாதீன் , பந்தன் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார். தொலைக்காட்சியில் இவரது பெரிய வெற்றி 2000ஆம் ஆண்டில், கியுங்கி சாஸ் பி கபி பாஹு தி என்ற தொடரில் வயதான மாமியாரான 'பா' வேடத்தில் நடிக்கும் போது வந்தது.

ஷீஷே கா கர், வக் கா தரியா, தமன், சந்தோஷி மா, யே கர், கசம் சே, கிஸ் தேஷ் மே ஹை மேரா தில் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இந்த அனைத்துத் தொடர்களையும்விட, இவரது 'பா' பாத்திரம் மிகவும் பிரபலமானது. மேலும், இவர் பொதுவெளியில் 'பா' என்ற புதிய அடையாளத்தைப் பெற்றார்.

விருது

தொகு

நாடகங்களில் இவர் ஆற்றிய பணிக்காக 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக நிறுவனமான சங்கீத நாடக அகாதமி இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கியது.[6]

சொந்த வாழ்க்கை

தொகு

சுதா சிவ்பூரிக்கு இந்தித் திரைப்பட நடிகையான ரிது சிவ்புரி என்ற ஒரு மகளும், வினீத் சிவ்புரி என்ற ஒரு மகனும் உள்ளனர்.[7]

இறப்பு

தொகு

2014 ஆம் ஆண்டில் இவருக்கு இதய அடைப்பு ஏற்பட்டது, சில காலம் உடல்நலமில்லாமல் இருந்த [8] இவர் 20 மே 2015 அன்று மும்பையில் பல உறுப்பு செயலிழப்பால் இறந்தார்.[9]

விருது

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "'Baa' of 'Kyunki', Sudha Shivpuri, passes away". The Economic Times. 20 May 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.
  2. "Funeral of Sudha Shivpuri held at Oshiwara crematorium in Mumbai". news.biharprabha.com. 21 May 2015. http://news.biharprabha.com/2015/05/funeral-of-sudha-shivpuri-held-at-oshiwara-crematorium-in-mumbai/. பார்த்த நாள்: 21 May 2015. 
  3. "Sudha Shivpuri Biography In Hindi". newstrend.news. Newstrend. பார்க்கப்பட்ட நாள் 15 April 2020.
  4. "glamsham.com". mumbaitheatreguide.com.
  5. Anil Wanvari. "Indian Television Dot Com - "We don't bitch and backbite about each other. In many other serials artistes just do that"". indiantelevision.com.
  6. "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதமி Official website. Archived from the original on 30 May 2015.
  7. "You will be missed Baa: Actors mourn Sudha Shivpuri's death". India Today. 20 May 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.
  8. "Funeral of Sudha Shivpuri held at Oshiwara crematorium in Mumbai". news.biharprabha.com. 21 May 2015. http://news.biharprabha.com/2015/05/funeral-of-sudha-shivpuri-held-at-oshiwara-crematorium-in-mumbai/. பார்த்த நாள்: 21 May 2015. 
  9. "'Baa' of 'Kyunki', Sudha Shivpuri, passes away". The Economic Times. 20 May 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_சிவ்புரி&oldid=4175412" இலிருந்து மீள்விக்கப்பட்டது