உதயரவிச்சந்திரிக்கா
(சுத்த தன்யாசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உதயரவிச்சந்திரிக்கா இராகம் கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும். இந்த இராகத்தை சுத்த தன்யாசி என்றும் அழைப்பர்.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ க2 ம1 ப நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 ப ம1 க2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரன காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
தொகு- ரிசபம், தைவதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது உபாங்க இராகம் ஆகும்.
- இவ்விராகத்தின் காந்தார, மத்திம, பஞ்சம, நிசாத மூர்ச்சனைகளே முறையே மோகனம், மத்தியமாவதி, இந்தோளம், சுத்தசாவேரி ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன.
உருப்படிகள்
தொகுவகை | உருப்படி | தாளம் | கலைஞர் |
---|---|---|---|
வர்ணம் | சிறீ ராஜமாதங்கி | ஆதி | முத்தையா பாகவதர் |
கீர்த்தனை | எந்த நேர்ச்சினா | ஆதி | தியாகராஜர் |
கிருதி | சுப்பிரமன்யேன ரக்ஷிதோஹம் | ஆதி | முத்துசுவாமி தீட்சிதர் |
கிருதி | ஹிமகிரி தனயே | ஆதி | முத்தையா பாகவதர் |
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
- டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996