சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)
சுந்தரி என்பது சன் தொலைக்காட்சியில் 22 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி குடும்ப நாடகத் தொடர் ஆகும்.[1] இது கன்னட மொழித் தொடரான 'சுந்தரி' என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.[2]
சுந்தரி | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
இயக்கம் | அழகர் |
நடிப்பு |
|
முகப்பிசை | ஆத்தங்கரை காற்றே பாடியவர் சுவேதா மோகன் |
பின்னணி இசை | சாம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ஒளிப்பதிவாளர் பாலசிப்ரமணியம் |
ஒளிப்பதிவு |
|
தொகுப்பு | |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சன் என்டர்டெயின்மெண்ட் மிரகள் மீடியா |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 22 சனவரி 2021 ஒளிபரப்பில் | –
Chronology | |
முன்னர் | அன்பே வா (21:00) ரோஜா (19:00) |
இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் மிரகள் மீடியா போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க, கேப்ரியெல்லா செல்லஸ்,[3] ஜிஷ்ணு மேனன்[4] மற்றும் ஸ்ரீகோபிகா நீலநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் தற்பொழுது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கதைசுருக்கம்
தொகுசுந்தரி என்ற கறுப்பு நிறம் கொண்ட கிராமத்து பெண், தனது தோல் நிறம், அவரது பாரம்பரிய தோற்றத்திற்கு எதிராக வரும் கேலி கிண்டல் மற்றும் அவமானங்களுக்கு எதிராக எப்படி போராடுகிறாள் என்பது கதை.
நடிகர்கள்
தொகுமுதன்மை கதாபாத்திரம்
தொகு- கேப்ரியெல்லா செல்லஸ்[5] - சுந்தரி
- ஜிஷ்ணு மேனன் - கார்த்திக்
- ஸ்ரீகோபிகா நீலநாத் - அனு
துணைக் கதாபாத்திரம்
தொகு- சந்தியா - ராதா (காவல் அதிகாரி)
- நிஹாரி → பிரமி வெங்கட் - மல்லிகா (அனுவின் தாய்)
- அரவிஷ் - கிருஷ்ணா (கார்திக்கின் நண்பன்)
- அருண்குமார் பத்மநாபன் - பழனி (சுந்தரியின் எதிரி)
- மனோகர் கிருஷ்னன் (1-57 / 73-) → சதீஷ் (58-72) - முருகன்
- மின்னல் தீபா - லட்சுமி (முருகனின் மனைவி)
- தீப்தி ராஜேந்திரா - மாலினி
- இந்துமதி மணிகண்டன் - வள்ளியம்மா (சுந்தரியின் தாய்)
- வரலக்ஷ்மி - காந்திமதி (சுந்தரியின் பாட்டி)
- எல். ராஜா - சங்கர்
- லட்சுமி வாசுதேவன் - செல்வி
- தாரணி சுரேஷ்குமார் - பெரியநாயகி
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
தொகுஇந்த தொடர் முதல் முதலில் 22 சனவரி 2021 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப் ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் நிறுத்தப்பட்டு மே 22 முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "New daily soap Sundari premieres from February 22". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
- ↑ "Kannada Show Sundari To have its Tamil remake very soon". www.auditionform.in (in ஆங்கிலம்).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Gabriella Sellus' Popular Pictures And Videos From Sun TV's 'Sundari' Serial". www.republicworld.com (in ஆங்கிலம்).
- ↑ "Jishnu Menon is excited about his new show Sundari". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
- ↑ "Popular Tik-Tok Star deubts with Sun Tv Serial". www.behindwoods.com (in ஆங்கிலம்).
வெளி இணைப்புகள்
தொகு- சுந்தரி அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சுந்தரி
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | சுந்தரி | அடுத்த நிகழ்ச்சி |
ரோஜா |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | சுந்தரி | அடுத்த நிகழ்ச்சி |
அன்பே வா | ரோஜா |