சுந்தர்பனி

சுந்தர்பனி (Sunderbani), வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் ஜம்மு வருவாய் கோட்டத்தில் உள்ள ரஜௌரி மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய சிறு நகரம் ஆகும். சுந்தர்பனி நகரம் மாவட்டத் தலைமையிடமான ரஜௌரி நகரத்திற்கு தென்கிழக்கே 70 கிலோ மீட்டர் தொலைவிலும்; சிறிநகருக்கு தென்கிழக்கே 247 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 633 மீட்டர் (2077 அடி) உயரத்தில் உள்ளது.

சுந்தர்பனி
பச்சை சமவெளி
சிறு நகரம்
சுந்தர்பனி is located in ஜம்மு காஷ்மீர்
சுந்தர்பனி
சுந்தர்பனி
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் சுந்தர்பனி நகரத்தின் அமைவிடம்
சுந்தர்பனி is located in இந்தியா
சுந்தர்பனி
சுந்தர்பனி
சுந்தர்பனி (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°02′N 74°29′E / 33.04°N 74.49°E / 33.04; 74.49
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்ரஜௌரி மாவட்டம்
பெயர்ச்சூட்டுசுந்தரம் (அழகு)
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சுந்தர்பனி நகராட்சி
ஏற்றம்
633 m (2,077 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,930
மொழிகள்
 • அலுவல் மொழிகாஷ்மீரி மொழி, தோக்ரி மொழி, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
185153

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 7 வார்டுகளும், 1,138 வீடுகளும் கொண்ட சுந்தர்பனி நகரத்தின் மக்கள் தொகை 6,930 ஆகும். அதில் ஆண்கள் 4,598 மற்றும் பெண்கள் 2,332 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 507 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 94.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 259 மற்றும் 44 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 90.38%, இசுலாமியர் 3.59%, சீக்கியர்கள் 5.4%, கிறித்தவர்கள் 0.56% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர். [1]

போக்குவரத்து

தொகு

சுந்தர்பனி நகரத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் ஜம்முதாவி சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 144A சுந்தர்பனி வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தர்பனி&oldid=3603683" இலிருந்து மீள்விக்கப்பட்டது