சுந்தர் பிரசாத்

பண்டிட் சுந்தர் பிரசாத் (Sunder Prasad) (இறப்பு 29 மே 1970 [1] ) இவர் இந்திய பாரம்பரிய நடன வடிவமான கதக்கின் ஜெய்ப்பூர் கரானாவின் ஆசிரியராவார். இவர் தனது தந்தை பண்டிட் சுன்னிலால் மற்றும் ஜெய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த பிந்தாடின் மகாராஜ் ஆகியோரிடமிருந்து பயிற்சி பெற்றார்.

குடும்பம் தொகு

இவர், கதக்கின் ஜெய்ப்பூர் கரானாவின் (பள்ளி) நிபுணரான, சுன்னிலாலின் மகனும், பண்டிட் ஜெய்லால் மிஸ்ராவின் தம்பியுமாவார். [2]

தொழில் தொகு

1930 களில் பிரசாத் மும்பையில் கதக் மகாராஜ் பிந்தாடின் பள்ளியை நிறுவினார். மும்பை மற்றும் சென்னையில் சிறுது காலம் கழித்த பின்னர், இவர் 1958 இல் தில்லியில் குடியேறி பாரதீயக் கேந்திராவில் சேர்ந்தார் (பின்னர் கதக் கேந்திரா ஆனது ) [3] கதக் நடனத் துறையில் வாழ்நாள் முழுவதும் பங்களித்ததற்காக 1959 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியால் கௌரவிக்கப்பட்டார். [4]

இவரது தொழில் வாழ்க்கையில், இவர் ஜெய்ப்பூர் கரானாவின் நுணுக்கங்களை பல மாணவர்களுக்கு கற்பித்திருக்கிறார். முனைவர் பண்டிட் புரு தாதீச் கதக் அறிஞரும் மூத்த கதக் நிபுணருமான அவர்களில் குறிப்பிடத்தக்கவராவார். [5]

குறிப்புகள் தொகு

  1. "Gurus of Kathak Dance by Gauri Jog".
  2. "Home Page : Indian Music". Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2020-12-14.
  3. "Kathakkendra faculty". Archived from the original on 2016-11-16. பார்க்கப்பட்ட நாள் 2020-12-14.
  4. "Gurus of Kathak Dance by Gauri Jog".
  5. Kathak Syllabi. Bindu Prakashan. 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-900056-7-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தர்_பிரசாத்&oldid=3613011" இலிருந்து மீள்விக்கப்பட்டது