சுனில் குமார் (கபடி)

இந்திய கபடி வீரர்

சுனில் குமார் (Sunil Kumar (kabaddi)) ஓர் இந்திய தொழில்முறை கபடி வீரர் ஆவார், 1997 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அவர் புரோ கபடி கூட்டிணைவுப் போட்டிகளில் (பிகேஎல்) பாதுகாப்பு வீரராக விளையாடுகிறார். [1] 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இளையோர் தேசிய போட்டிகளை வென்ற பிறகு, பிகேஎல் பருவத்திற்காக [2] பாட்னா பைரேட்சு அணிக்காக எடுக்கப்பட்டார். பின்னர் இவர் செய்ப்பூர் பிங்க் பாந்தர்சு அணிக்கு மாற்றப்பட்டார். [3] [4] 2023 ஆம் ஆண்டில் சுனில் குமார் 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக போட்டியிட்டார்; [5] [6] இறுதிப் போட்டியில் ஈரானை 33-29 என்ற கணக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தோற்கடித்து தங்கம் வென்றது. [7] [8]

சுனில் குமார்
Sunil Kumar
தனிநபர் தகவல்
பிறப்பு12 மே 1997 (1997-05-12) (அகவை 27)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுசடுகுடு

1997 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று சுனில் குமார் பிறந்தார் [9] இவர் அரியானாவின் சோனிபத்து மாவட்டத்தில் உள்ள பைன்சுவால் கலன் கிராமத்தில் ஒரு விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அறியப்படுகிறார். [2] பர்வேசு பைன்சுவால் உட்பட இவரது உறவினர்கள் பலர் கபடி விளையாடினர். இவர்களால் ஈர்க்கப்பட்டு, 11 வயதில் சுனில் குமார் கபடி விளையாட்டில் இறங்கினார். பல்கலைக்கழக விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்டார் பயிற்சியாளர் செய்விர் சர்மாவால் அடையாளம் காணப்பட்டார், பின்னர் அகமதாபாத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sunil Kumar profile" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  2. 2.0 2.1 2.2 "Sunil Kumar Bio & Stats | Gujarat Fortunegiants | Pro Kabaddi League" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-07."Sunil Kumar Bio & Stats | Gujarat Fortunegiants | Pro Kabaddi League". Kabaddi Adda. Retrieved 7 October 2023.
  3. "Sunil Kumar Profile, Age, Career Stats, Biography, Pro Kabaddi 2019 Season 7 Team". பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  4. "Sunil Kumar Career, Age, Stats, Biography | Sunil Kumar Profile" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  5. "Full list of Indian athletes for Asian Games 2023" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  6. "We will win gold medal: Kabaddi legends on Indian teams' Asian Games prospects". https://timesofindia.indiatimes.com/sports/asian-games-2023/india-asian-games/we-will-win-gold-medal-kabaddi-legends-on-indian-teams-asian-games-prospects/articleshow/104167221.cms?from=mdr. 
  7. "Asian Games 2023, Day 14 Live Updates: India win men's kabaddi Gold after controversial finish" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  8. "India win men's kabaddi gold after controversial final against Iran involving one hour stoppage" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  9. "Sunil Kumar Biography (Kabaddi - Gujarat Fortune Giants): Early Life, Career, Pro Kabaddi League, Family, Wife, Kids, Awards, Achievements, Records, Social Media | The Sports Tattoo" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-12-02. பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_குமார்_(கபடி)&oldid=3861803" இலிருந்து மீள்விக்கப்பட்டது