சுபுண்டு
சுபுண்டு (ஆங்கிலம்:Xubuntu) (/zuːˈbuːntuː/ zoo-BOON-too) என்ற இயக்குதளம், சுதந்திர, திறநிலை மென்பொருள் இயக்குதளங்களில் ஒன்றாகும். இது உபுண்டு என்ற இயக்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது எக்செப்சியி (XFCE) என்ற திரைப்புலச் சூழலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த இயக்கு தளம், குறைவான திறன் கொண்ட கணினிகளையும், குறைவான மின்னாற்றலை எடுத்துக்கொண்டு, திறம்பட, வேகமாக இயக்கும் ஆற்றல் உடையது ஆகும்.
சுபுண்டு | |
விருத்தியாளர் | கனோனிக்கல் நிறுவனம் |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
யுனிக்சு போன்றவை |
மூலநிரல் வடிவம் | கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்கள் |
முதல் வெளியீடு | 23 சூன் 2006 |
பிந்தைய நிலையான பதிப்பு | 13.10 (Saucy Salamander) / 17 அக்டோபர் 2013 |
கருனி வகை | ஒற்றைப்பாளக் கருனி (லினக்சு கருனி) |
இயல்பிருப்பு இடைமுகம் | Xfce |
அனுமதி | குனூ பொதுமக்கள் உரிமம் / பிறவும் |
தற்போதைய நிலை | உயிர்ப்பு |
வலைத்தளம் | சுபுண்டுவின் இணையப்பக்கம் |
திரைப்புலம்
தொகுஇருப்பினும், இயல்பிருப்பு நிலையில் சுபுண்டு[Xubuntu] திரைப்புல அமைவாகவே(session) இருக்கும். முழு 'எக்செப்சியி' திரைப்புல அமைவு வேண்டுமெனில், இருக்கும் திரைச்சூழலை விட்டு வெளியேறி(logout), படத்தில் காட்டியபடி, தெரிவுப்பட்டியலில் தேர்ந்தெடுத்து, மீண்டும் உட்புகுந்தால், முழுமையான 'எக்செப்சியி' திரைப்புலச் சூழலுக்கு வந்து கணினியை பயன்படுத்தலாம். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாதெனில், இயல்பான சுபுண்டு கணித்திரைப்புலச் சூழலில் நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள்கள் அனைத்தும் பட்டியலில் இணைக்கப் பட்டிருக்காது. 'எக்செப்சியி' சூழலில், நமக்குப் பயனாகும் அனைத்து மென்பொருள்களும் பட்டியலாகப் பார்க்கலாம். மேலும், ஒப்பிட்டளவில் 'எக்செப்சியி' சூழல், குறைந்த அளவு மின்சாரத்தையே, தனது இயக்கத்திற்கு எடுத்துக் கொள்கிறது. அதனால், மடிக்கணினிகளுக்கு மிகவும் ஏற்றதாகும்.
இதிலுள்ள நிறுவப்பட்டுள்ள செயலிகளின், இயக்க ஆழிகளை (GUI_buttons) உருவாக்குதல் எளிது. அங்ஙனம் உருவாக்கப்பட்ட ஆழிகளை, திரைப்புலத்தில் வேண்டிய இடத்தில், ஒரு இயக்கப் பட்டையில் (panel of launchers)அமைத்தலும் எளிதான செயலாகும். அவ்வாறு ஒரு பயனர், தான் அடிக்கடிப் பயன்படுத்தும் ஆழிகளை, தனக்கேற்ற இடத்தில், ஏற்ற அளவில், அமைத்துள்ள திரைப்புலத்தைப் படத்தில் காணலாம்.
திரைப்புல ஊடகங்கள்
தொகு-
திரைப்புலப் பட்டியல்
-
சுபுண்டு திரைப்புலச் சூழல்
-
செயலிப் பட்டியல்
-
'எக்செப்சியி' திரைப்புலம்
-
செயலிப்பட்டியல்
-
தேவைக்கேற்ப மாற்றப்பட்ட திரைப்புலம்
-
தானியக்க அறிவுப்புகள்
சுபுண்டு வெளியீடுகள்
தொகுமுதற்பதிப்பு2006 ஆம் ஆண்டு வெளியானது.[1] உபுண்டு வெளியீடுகளில் பின்பற்றப்படும் அதே பெயரிடல் முறைமை பின்பற்றப்படுகிறது.[2] பிறகு ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு வருடத்தின் 4வது,10வது மாதங்களில், இது வழமையாக வெளியாகிறது.
நிறம் | பொருள் |
---|---|
சிவப்பு | ஆதரவு நிறுத்தப்பட்டு வெளியீடு |
மஞ்சள் | ஆதரவுள்ள வெளியீடுகள் |
பச்சை | தற்போதைய பதிப்பு |
நீலம் | எதிர்கால வெளியீடு |
பதிப்பு | பதிப்பின் பெயர் | வெளியீட்டுத் தேதி | ஆதரவு காலம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
5.10 | Breezy Badger | 13 அக்டோபர் 2005 | 13 ஏப்ரல் 2007 | சுபுண்டு-மேசைக்கணினி பொதி மட்டும் கிடைக்கப்பெற்றது. |
6.06 | (LTS) | Dapper Drake | 1 சூன் 2006 | சூன் 2009 | முதல் சுபுண்டு நிறுவன வெளியீடு ( நீண்ட கால ஆதரவு(LTS)) |
6.10 | Edgy Eft | 26 அக்டோபர் 2006 | 25 ஏப்ரல் 2008 | |
7.04 | Feisty Fawn | 19 ஏப்ரல் 2007 | 19 அக்டோபர் 2008 | |
7.10 | Gutsy Gibbon | 18 அக்டோபர் 2007 | 18 ஏப்ரல் 2009 | |
8.04 | Hardy Heron | 24 ஏப்ரல் 2008 | ஏப்ரல் 2011 | நீண்ட கால ஆதரவு (LTS) |
8.10 | Intrepid Ibex | 30 அக்டோபர் 2008 | ஏப்ரல் 2010 | |
9.04 | Jaunty Jackalope | 23 ஏப்ரல் 2009 | அக்டோபர் 2010 | PowerPC உரிய இயக்குதளமும் கிடைக்கிறது [3][4] |
9.10 | Karmic Koala | 29 அக்டோபர் 2009 | ஏப்ரல் 2011 | |
10.04 (LTS) | Lucid Lynx | 29 ஏப்ரல் 2010 | ஏப்ரல் 2013 | நீண்ட கால ஆதரவு(LTS) |
10.10 | Maverick Meerkat | 10 அக்டோபர் 2010 | ஏப்ரல் 2012 | |
11.04 | Natty Narwhal | 28 ஏப்ரல் 2011 | அக்டோபர் 2012 | |
11.10 | Oneiric Ocelot | 13 அக்டோபர் 2011 | ஏப்ரல் 2013 | |
12.04 (LTS) | Precise Pangolin | 26 ஏப்ரல் 2012 | ஏப்ரல் 2015 | நீண்ட கால ஆதரவு(LTS) |
12.10 | Quantal Quetzal | 18 அக்டோபர் 2012 | ஏப்ரல் 2014 | |
13.04 | Raring Ringtail | 25 ஏப்ரல் 2013 | திசம்பர் 2013 | |
13.10 | Saucy Salamander | 17 அக்டோபர் 2013 | சூன் 2014 | |
14.04 (LTS) | Trusty Tahr | 17 ஏப்ரல் 2014 | TBA | நீண்ட கால ஆதரவு(LTS) |
வெளியீட்டு ஊடகங்கள்
தொகு-
6.06
-
6.10
-
7.10
-
8.10
-
9.04
-
10.04
-
11.04
-
13.10
-
14.04(LTS)
இயல்பிருப்பான செயலிகள்
தொகுஒரு சராசரி பயனாளருக்குப் பயன்படும் வகையில், பின்வரும் செயலிகள் இயல்பிருப்பாகக் கட்டமைக்கப் பட்டுள்ளன.[5][6]
ஜீபார்ட்டெடு வகிர்வுத் தொகுப்பான்
தொகுஜீபார்ட்டெடு வகிர்வுத் தொகுப்பான்(Gparted partition editor) : இது நிகழ்நிலை இயக்குதளமாகச் செயற்படும் போது மட்டும் இயல்பிருப்பாக இருக்கிறது. கணினியின் இயக்குதளத்தை நிறுவிய பிறகு, இத்தொகுப்பானை, உபுண்டு மென்பொருள் நடுவத்தில் இருந்தே நிறுவ வேண்டியுள்ளது. இச்செயலியைக் கொண்டு, நிறுவப்பட்ட கணினியின், முதன்மை நினைவகமான நிலைவட்டைப் பாதுகாப்பான முறையில் வகிர்ந்து(தேவைக்கேற்ப பிரித்தல்) கொள்ளலாம். பிற வகிர்வு தொகுப்பான்களை(எ.கா. fdisk) விட இது மிகவும் எளியதும், பாதுகாப்பானதாகும்.
சுபுண்டு வழி இயக்குதளங்கள்
தொகுசுபுண்டு இயக்குதளத்தை அடைப்படையாகக் கொண்டு, கனோனிக்கல் நிறுவனம் அல்லாத, வெளி உருவாக்குநர்கள், சற்று வேறுபட்ட இயக்குதளங்களை உருவாக்கியுள்ளனர். அவற்றுள் குறிப்பிடதக்கன வருமாறு;-
மேற்கோள்கள்
தொகு- ↑ சட்டில்ஒர்து, மார்கு (20 October 2004). "Ubuntu 4.10 announcement" (Mailing list). பார்க்கப்பட்ட நாள் 19 August 2008.
{{cite mailing list}}
: Unknown parameter|mailinglist=
ignored (help) - ↑ "DevelopmentCodeNames - Ubuntu Wiki". Wiki.ubuntu.com. பார்க்கப்பட்ட நாள் 19 October 2008.
- ↑ "Xubuntu 9.04 வெளியீட்டுக் குறிப்பு - Other Section on Ports". Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2014-04-06.
- ↑ "Get Xubuntu 9.04". Archived from the original on 2010-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-04-06.
- ↑ டெசுட்டோரவாட்ச்சு(DistroWatch) (October 2008). "Xubuntu". பார்க்கப்பட்ட நாள் 10 February 2009.
- ↑ கனோனிக்கல் நிறுவனம் (2008). "Glossary". Archived from the original on 27 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 February 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ PC/OS (February 2009). "Welcome to PC/OS". பார்க்கப்பட்ட நாள் 10 February 2009.
- ↑ PC User (March 2008). "March 2008 : Notebook Mega Test". பார்க்கப்பட்ட நாள் 10 February 2009.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "Voyager". Voyager.legtux.org. 2010-08-24. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.