சுபோத் அதிகாரி
இந்திய அரசியல்வாதி
சுபோத் அதிகாரி (Subodh Adhikary) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில், பீசப்பூரில் இருந்து மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் மாவட்டப் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
சுபோத் அதிகாரி | |
---|---|
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 02-மே-2021 | |
முன்னையவர் | சுப்ரான்சு ராய் |
தொகுதி | பீசப்பூர் |
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மாவட்ட பொதுச்செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14-சூன்-2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21-சூலை-1972 (வயது 51) காலிசகர், மேற்கு வங்காளம், இந்தியா |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
துணைவர் | ரிங்கு அதிகாரி |
பிள்ளைகள் | சர்விக் அதிகாரி, சினேகா அதிகாரி |
வாழிடம்(s) | கர்னல்.கே.பி குப்தா சாலை, காலிசகர்,வடக்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம் |
முன்னாள் கல்லூரி | மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், மேற்கு வங்காளம் |
தொழில் | அரசியல்வாதி |
தொழில்
தொகுஅதிகாரி வடக்கு 24 பர்கானா மாவட்டம் கலிசாகரைச் சேர்ந்தவர். மேற்கு வங்காளத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டு இளங்கலை தேர்ச்சி பெற்றார். இவரது தந்தை பெயர் சந்தோசு அதிகாரி. [3] இவர் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பீசப்பூர் விதான் சபாவிலிருந்து போட்டியிட்டு, முகுல் ராயின் மகன் சுப்ரான்சு ராயை எதிர்த்து வெற்றி பெற்றார். [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Subodh Adhikary Election Results 2021: News, Votes, Results of West-bengal Assembly" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "West Bengal assembly election 2021: Full list of winners" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Subodh Adhikary(All India Trinamool Congress(AITC)):Constituency- BIJPUR(NORTH 24 PARGANAS) – Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Subodh Adhikary | West Bengal Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ "Trinamool tsunami washes away BJP in Barrackpore". பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.