சுபோனி அம்த்சோ
சுபோனி அம்த்சோ (Zuboni Hümtsoe) (1990 - நவம்பர் 13, 2017) நாகாலாந்தில் ஆடைகளையும், கைவினைப் பொருட்களையும் விற்பனை செய்யும் PreciousMeLove என்ற இணையவழி வலைத்தளத்தைத் தொடங்கிய ஒரு நாகா பெண்ணாவார். இவருக்கு 2016இல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.
சுபோனி அம்த்சோ | |
---|---|
பிறப்பு | 1990 நாகாலாந்து |
இறப்பு | நவம்பர் 13, 2017 திமாப்பூர், நாகாலாந்து |
இறப்பிற்கான காரணம் | தற்கொலை |
மற்ற பெயர்கள் | "மோதி கேர்ள்" |
கல்வி | தில்லி பல்கலைக்கழகம் |
பணியகம் | தொழில்முனைவோர் |
அறியப்படுவது | PreciousMeLove என்ற இணைய வணிகத்த்தை நிறுவியவர் |
2017 நவம்பர் 13 அன்று, நாகாலாந்தின் திமாபூரில் உள்ள தனது வீட்டில் அம்த்சோ இறந்து கிடந்தார். இவரது மரணம் தற்கொலை என்று தீர்மானிக்கப்பட்டது. இவரது வணிகங்கள் திமாபூரில் இவரது சகோதரி லோசானோவால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
வாழ்க்கை
தொகு1990 இல் <[1] நாகாலாந்தில் பிறந்த இவர், தில்லி பல்கலைக்கழகத்திற்கு படிக்கச் சென்றார். மேலும் இவர் விமான பணிப்பெண்ணான தனது சகோதரி லோசானோ அம்த்சோவால் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு ஆடைகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டார். இவர்களால் மலிவாக ஆடைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிந்தது. ஆனால் வாடிக்கையாளர்களால் எதிர்பார்க்கப்படும் அளவுகளின் அளவை இவர்களால் சமாளிக்க முடியவில்லை. [2]
ஆடை விற்பனை நிலையம்
தொகு2011இல் தொடங்கிய PreciousMeLove நிறுனத்திற்கு இவர் பொறுப்பேற்று நடத்தி வந்தார். இதற்கான நிதி 3500 ரூபாய் கல்லூரி மானியத்திலிருந்து வந்தது. இது தனது தந்தையின் மரணத்தால் உருவாக்கப்பட்ட ஒரு லட்சியத்தால் இயக்கப்படுகிறது என்று இவர் கூறினார். [3]
திமாபூரில் அமைந்துள்ள நிறுவனம் அனைத்து பெண் குழுவினராலும் வழிநடத்தப்பட்டது. [1] தனது PreciousMeLove "மேட் இன் நாகாலாந்து" என இருக்க இவர் விரும்பினார். [4]
பிரதமரின் வருகை
தொகுபிரதமர் நரேந்திர மோதி இவர் தனது பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்த இடத்திற்குச் சென்றபோது இவரது தயாரிப்புகளைப் பார்க்காமல் சென்றுவிட்டார். இவர் அவரை பின்தொடர்ந்து வற்புறுத்தி தனது பொருட்களை பார்வையிட வைத்தார். இதன் பின்னர், இவர் "மோடி கேர்ள்" என்று கவனிக்கப்பட்டார். [4]
விருது
தொகு2017ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாள் அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இவருக்கு புது தில்லியில் நாரி சக்தி விருது வழங்கினார். <[5]
இறப்பு
தொகுஇவர் 13 நவம்பர் 2017 அன்று தனது வீட்டில் இறந்து கிடந்தார். [4] இது ஒரு தற்கொலை என்று முடிவு செய்யப்பட்டது. [1] நாகாலாந்து அரசாங்கத்தின் பெண்கள் வள மேம்பாட்டுத் துறை இந்த இரு சகோதரிகளின் வணிகத்திற்காக நன்றி தெரிவித்தது. PreciousMeLove (பி.எம்.எல்) மற்றும் நுங்ஷிபா கைவினைப்பொருட்கள் என இரண்டு வணிகங்கள் உள்ளன. பி.எம்.எல் பெண்களின் ஆடைகளையும், நுங்ஷிபா கைவினைப்பொருட்களையும் உருவாக்குகிறது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "A year after Nagaland entrepreneur's suicide, what lessons have we learnt?". TNT-The NorthEast Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-11-14. Archived from the original on 2019-02-15. பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
- ↑ 2.0 2.1 "Made in Nagaland". thevoiceoffashion.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
- ↑ "Investment of Rs 3,500 is now a successful first Naga Online Fashion Brand". BookOfAchievers (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
- ↑ 4.0 4.1 4.2 "#PreciousMeLove: Zuboni Humtsoe dies at 28". Eastern Mirror (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-11-14. பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
- ↑ "Nari Shakti Awardees | Ministry of Women & Child Development | GoI". wcd.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-06.