சுப்பண்ணா ஆர். ஏகுண்டி

சுப்பண்ணா ஆர். எகுண்டி (Subbanna R. Ekkundi) (1923-1995) இவர் சாகித்ய அகாடமி விருது, தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் சோவியத் ஒன்றிய விருதைப் பெற்ற்றுள்ளார்.

சுப்பண்ணா இரங்கநாத் ஏகுண்டி
பிறப்புசுப்பண்ணா இரங்கநாத் ஏகுண்டி
(1923-01-20)20 சனவரி 1923
இரானேபெண்ணூர், ஆவேரி மாவட்டம், கருநாடகம்
இறப்பு20 ஆகத்து 1995(1995-08-20) (அகவை 72)
பெங்களூர், கர்நாடகா
தொழில்உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்
தேசியம்இந்தியன்
காலம்1945-1995
வகைகன்னடம் கவிதை
கருப்பொருள்பல்வகை கருப்பொருள்கள்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது,
தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் சோவியத் நாடு விருது.
துணைவர்இந்திரா ஏகுண்டி

ஆரம்பக் கல்வி

தொகு

ஏகுண்டி 1923 ஆம் ஆண்டில் ஆவேரி மாவட்டத்தில் இரானேபென்னூரில் பிறந்தார். இவரது தந்தை இரங்கநாத் மற்றும் தாய் இராஜக்கா. சாங்லியில் உள்ள வில்லிங்டன் கல்லூரியில் இலக்கிய மாணவர். வில்லிங்டனில், வி.கே.கோகக் மற்றும் ஆர்.எஸ்.முகலி ஆகியோர் ஏக்குண்டியின் பேராசிரியர்களாக இருந்தனர். கனஅள்ளியைச் சேர்ந்த ஏகுண்டி மற்றும் கங்காதர் வி சித்தல் ஆகியோர் வில்லிங்டனில் வகுப்பு தோழர்களாக இருந்தனர். 1944 ஆம் ஆண்டில், இளங்கலை இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு சுப்பண்ணா ஏகுண்டி, பாங்கிகோட்லாவின் ஆனந்தாசரமம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து 1977 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார்.

இலக்கியம்

தொகு

1992 ஆம் ஆண்டில், கன்னடத்தில் பாக்குலாடா ஹூவுகலு என்ற இவரது சிறந்த கவிதைப் படைப்பிற்காக சாகித்ய அகாடமி மற்றும் கர்நாடக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் இந்தோ-சீனா போரின் போது எழுதப்பட்ட இவரது கவிதை இலதக் இராலி நேபா இராலி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது அரசியல் அனுதாபங்கள் பொதுவுடமைக் கட்சியுடன் இருந்தன. ஓய்வு பெற்ற பிறகு, இவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. பல கவிதைகள் மற்றும் சிறுகதை படைப்புகளை எழுதியுள்ளார்.[1] இந்திய இலக்கியத்தின் கலைக்களஞ்சியத்தில் உள்ள ஒரு இடுகையால் இவரது படைப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.[2] அரசியலைத் தவிர, இவரது கவிதை முதன்மையாக பாரம்பரிய இந்திய புராண மற்றும் மத கருப்பொருள்களுடன் தொடர்புடையது. இந்து தத்துவஞானிகளான ஆதிசங்கரருக்கும் மந்தனா மிஸ்ரருக்கும் இடையிலான பிரபலமான விவாதத்தைப் பற்றி இவரது உபய பாரதியில் விவரித்துள்ளார்.

விருதுகள்

தொகு

1970 ஆம் ஆண்டில், சோவியத் நாட்டின் விருது வழங்கப்பட்டது. அம்பியில் உள்ள கன்னட பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வறிக்கையை முடித்தார். இவரது முழுமையான கவிதைகளின் தொகுப்பு 2008 ஆம் ஆண்டில் பெல்லாக்கி இந்து என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டது.[3]

குறிப்புகள்

தொகு
  1. K. M. George (1992). Modern Indian Literature, an Anthology. சாகித்திய அகாதமி. p. 678. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7201-324-8.
  2. Amaresh Datta (1988). Encyclopaedia of Indian literature vol. 2. சாகித்திய அகாதமி. p. 1142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1194-7.
  3. [1] பரணிடப்பட்டது 2008-09-15 at the வந்தவழி இயந்திரம், Article In The Hindu newspaper.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பண்ணா_ஆர்._ஏகுண்டி&oldid=3747738" இலிருந்து மீள்விக்கப்பட்டது