சுப்பிறீம் சட்

சுப்பிறீம் சட் (SupremeSAT (Pvt) Ltd.) என்பது இலங்கையின் முதலாவதும், ஒரேயொரு செயற்கைக்கோள் இயக்கும் நிறுவனமும் ஆகும்.[2] இது சீனா அரசிற்குச் சொந்தமான செயற்கைக்கோள் உற்பத்தி செய்யும் நிறுவனமான சீனப் பெருஞ்சுவர் தொழிற்சாலை கூட்டு நிறுவனத்துடன் பங்கு நிறுவனமாகவுள்ளது.

சுப்பிறீம் சட்
SupremeSAT logo
நிறுவியதுஒக்டோபர் 25, 2011
தலைமையகம்கொழும்பு, இலங்கை
முதன்மை விண்வெளி நிலையம்சி சாங், சீனா
செலவுUS$ 20 மில்லியன்[1]
இணையதளம்www.supremesat.com

சுப்பிறீம் சட் தனது முதலாவது இலங்கை செயற்கைக்கோள் சுப்பிறீம் சட்-1 என்பதை சீனாவின் சி சாங் பகுதியில் இருந்து நவம்பர் 22 இலங்கை நேரப்படி 9.30 பி.ப. விண்ணிற்குச் செலுத்த உத்தேசிக்கப்பட்டது.[3][4] இது இலங்கை, சீன தேசியக் கொடிகளைத் தாங்கிச் செல்லத் தீர்மாணிக்கப்பட்டது. இந்நிறுவனம் உலகின் 27வது செயற்கைக்கோளை சொந்தமாகக் கொண்ட நிறுவனமானக் காணப்படுகின்றது.[5]

உசாத்துணை

தொகு
  1. "dailynews.lk". Archived from the original on 2012-10-26. பார்க்கப்பட்ட நாள் 2016-12-21.
  2. "SupremeSAT : About us". Archived from the original on 2012-10-28. பார்க்கப்பட்ட நாள் 2016-12-21.
  3. "Sri Lanka University & World Campus News – Sri Lanka First Satellite Launched-SupremeSAT". lankauniversity-news.
  4. "News & Events – SupremeSAT". supremesat.com. Archived from the original on 2012-10-21. பார்க்கப்பட்ட நாள் 2016-12-21.
  5. "Lanka steps into space today with first satellite". Archived from the original on 2012-11-28. பார்க்கப்பட்ட நாள் 2016-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பிறீம்_சட்&oldid=3555040" இலிருந்து மீள்விக்கப்பட்டது