சுப்ரதோ பக்சி

இந்தியத் தொழில் முனைவோர்

சுப்ரதோ பக்சி (Subroto Bagchi) (பிறப்பு: 31 மே 1959) இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொழில் முனைவோர் ஆவார். அனைத்துலகத் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனை வழங்குதலுக்கும் செயல்படுத்துதலுக்குமான மைன்றீ என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

சுப்ரதோ பக்சி
Subroto Bagchi
பிறப்பு31 மே 1957 (1957-05-31) (அகவை 67)
பட்னாகர், பலாங்கீர், ஒடிசா
படித்த கல்வி நிறுவனங்கள்உத்கல் பல்கைலக்கழகம்
பணிதலைவர், ஒடிசா திறான் மேம்பட்டு ஆணையம்
பணியகம்ஒடிசா அரசு
பட்டம்மைன்றீயின் இயக்குநர் ( 16 ஜூலை 2019இல் ஓய்வு)
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவின் ஆளும் குழுவின் உறுப்பினர்.
வாழ்க்கைத்
துணை
சுஷ்மிதா பக்சி – ஒடிய எழுத்தாளர்
வலைத்தளம்
Subroto Bagchi Blogs

இளமை வாழ்க்கை

தொகு

ஒடிசாவின் பட்நாகரில் மக்கான் கோபால் பக்சி மற்றும் இலபோனியா பிரோவா ஆகியோருக்கு மகனாக சுப்ரதோ பக்சி பிறந்தார். இவர் உத்கல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார்.

தொழில்

தொகு

1976 ஆம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தின் தொழில்துறையில் எழுத்தராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு ஒரு வருடம் பணியாற்றிய பிறகு, 1977 ஆம் ஆண்டில் மேலாண்மை பயிற்சியாளராகச் சேர்ந்தார். 1981 ஆம் ஆண்டில், கணினி துறையில் நுழைந்தார். 1981 முதல் 1999 வரை பல கணினி நிறுவனங்களில் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாடுகள் போன்ற பல்வேறு பணிகளில் பணியாற்றினார்.விப்ரோவில் மிக நீண்ட காலம் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் விப்ரோவை விட்டு வெளியேறி லூசண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டில் 9 பிற இணை நிறுவனர்களுடன் இணைந்து மைன்றீயை நிறுவ லூசெண்டை விட்டு வெளியேறினார். மைன்றீ என்பது சுமார் 20000க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட 1 பில்லியன் டாலர் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இது இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

மைன்றி தொடங்கியபோது, சுப்ரத்தோ அதன் தலைமை இயக்க அலுவலராகத் தனது பணியைத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டில், இவர் அதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 1,2012 அன்று, தலைவர் பதவியை ஏற்றார். 2016 ஜனவரியில் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.[2] 2016 மே 1 அன்று, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அழைப்பின் பேரில், ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக ஆண்டுக்கு 1 ரூபாய் சம்பளத்தில் முழுநேரப் பொறுப்பை ஏற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Mindtree Q3 net profit up 7.2%; rejigs management". www.moneycontrol.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
  2. "Mindtree appoints Ravanan as CEO, Natarajan as executive chairman". 18 January 2016. http://timesofindia.indiatimes.com/tech/tech-news/Mindtree-appoints-Ravanan-as-CEO-Natarajan-as-executive-chairman/articleshow/50626215.cms. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்ரதோ_பக்சி&oldid=4145040" இலிருந்து மீள்விக்கப்பட்டது