சுமன் அரிப்பிரியா
சுமன் அரிப்ரியா (SumanHaripriya) ஓர் இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
சுமன் அரிப்பிரியா | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர் அசாம் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 மே 2016 | |
தொகுதி | ஆசோ சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குவகாத்தி | 1 சூன் 1979
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | மணமாகாதவர் |
பெற்றோர் | இயிதன் சக்ரவர்த்தி, பிசோயா சக்ரவர்த்தி |
வேலை | அரசியல்வாதி, மக்கள் பிரதிநிதி, திரைப்பட இயக்குநர் |
வாழ்க்கைக்குறிப்பு
தொகுஅரிப்ரியா ஜூன் 1, 1979 ஆம் ஆண்டு சூன் மாதம் 1 ஆம் தேதியன்று கவுகாத்தியில் இயித்தன் சக்ரவர்த்தி மற்றும் பியோயா சக்ரவர்த்தி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தாயார், பியோயா சக்ரவர்த்தி, கௌகாத்தி தொகுதியிலிருந்து பாரதிய சனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வேற்ரிபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] புது தில்லியின் இயாமியா மில்லியா இசுலாமியா கல்லூரியில் சமூகவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார், நொய்டாவில் உள்ள ஆசிய திரைப்படம் &தொலைக்காட்சி அகாடமியில் படித்து திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் பட்டயம் பெற்றார். புது தில்லியின் பாரதிய வித்யா பவனில் வேத சோதிடப் பாடத்தில் பட்டம் பெற்றார்.[2]
திரை வாழ்க்கை
தொகுஅரிப்ரியா அசாமிய சினிமாவுடன் தொடர்பு கொண்டிருந்தார். சில அசாமிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[3] அவரது படமான கடம்தோல் கிருட்டிணா நாச்சே 53 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த அசாம் மொழி திரைப்படம் விருதைப் பெற்றுள்ளது.[4]
அரசியல்
தொகுஅரிப்ரியா பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் ஆயோவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
மக்கள் தொடர்பு
தொகுகொரோனா பேருந்தொற்றுக்கு எதிராக பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தை பயன்படுத்தலாம் என்று அரிப்ரியா பரிந்துரைத்தார். "மாட்டுச் சாணத்தில் பல நன்மைகள் உள்ளன. அது கொரோனா தீநுண்மியைக் கொல்லும் என்று தான் நினைப்பதாக தேரிவித்துள்ளார்.[6] மாட்டுச் சிறுநீரும் பயனுள்ளதாக இருக்கும். மாட்டுச் சாணம் மற்றும் மாட்டுச் சிறுநீரைக் கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assam Legislative Assembly - Member". Assam Legislative Assembly. Archived from the original on 3 April 2020. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
- ↑ "Electoral Affidavit of SumanHaripriya" (PDF). Assam State Election Commission (in ஆங்கிலம்). Guwahati. 19 March 2016. p. 10. Archived from the original (PDF) on 30 March 2020. பார்க்கப்பட்ட நாள் 4 April 2020.
- ↑ "KokadeutarGharjonwai /SumanHaripriya". https://www.mail-archive.com/assam@pikespeak.uccs.edu/msg02312. பார்த்த நாள்: 8 July 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "53rd National Film Awards announced". https://m.timesofindia.com/india/53rd-national-film-awards-announced/articleshow/2263261.cms. பார்த்த நாள்: 7 May 2021.
- ↑ "Exclusive: Cabinet Portfolio Names for BJP-led Govt in Assam". The Quint. 20 May 2016. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
- ↑ "India's coronavirus health myths fact-checked". BBC News. 19 March 2020. https://www.bbc.com/news/world-asia-india-51910099. பார்த்த நாள்: 20 March 2020.
- ↑ Nath, Hemanta Kumar (2 March 2020). "Cow urine, dung can treat coronavirus, says Assam BJP MLA" (in en). India Today. https://www.indiatoday.in/india/story/cow-urine-dung-can-treat-coronavirus-says-assam-bjp-mla-1651708-2020-03-02. பார்த்த நாள்: 21 March 2020.