சுமாத்திர யானை

சுமாத்திர யானை
Sumatra elephant Ragunan Zoo 3.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: பொரொபொசிடியா
குடும்பம்: எலிபன்டிடே
பேரினம்: எலிபாஸ்
இனம்: ஆசிய யானை
துணையினம்: எலிபாஸ் மக்சிமஸ் சுமாட்ரனஸ்
மூவுறுப்புப் பெயர்
எலிபாஸ் மக்சிமஸ் சுமாட்ரனஸ்[2]
Coenraad Jacob Temminck, 1847


சுமாத்திர யானை (Sumatran elephant:Elephas maximus sumatranus) என்பது ஆசிய யானை இனத்தின் மூன்று உப இனங்களில் ஒன்றாகும். இதன் விஞ்ஞானப் பெயர் எலிபாஸ் மக்சிமஸ் சுமாத்திரஸ் என்பதாகும். இந்த யானை இனமானது இந்தோனேசியா மற்றும் சுமாத்திரா ஆகிய பிரதேசங்களுக்கு உரித்தானதாகும். 2011 ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் சுமாத்திர யானை இனம் மிக அருகிய இனமாக பிரகடனப்படுத்தப்பட்டது. வாழ்விடத்திற்கான பற்றாக்குறை, களவாடப்படல், இடப்பற்றாக்குறை ஆகிய காரணங்களினால் இவை அருகி வருகின்றன. இவற்றின் 69 வீதமான வாழிடங்கள் 25 வருடங்களில் அழிக்கப்பட்டுள்ளன.

பண்புகள்தொகு

இவ்வகை யானைகளில் ஆண் யானைகள் பெண் யானைகளை விடப் பெரியதாக இருக்கின்றன. இவை ஆப்பிரிக்க யானைகளையும் விட சிறியவை ஆகும். சுமாத்திர பெண் யானைகளிற்கு தந்தங்கள் கட்டையாகவோ அல்லது இல்லாமலோ இருக்கின்றன.[3] இவற்றின் சராசரி உயரம் 2 தொடக்கம் 3.2 மீற்றர்கள் ஆகும். அத்துடன் இவற்றின் சராசரி எடை 2 தொடக்கம் 4 தொன்கள் ஆகும். இலங்கை, இந்திய யானைகளை விடவும் இவற்றின் தோலின் நிறம் மிகவும் மெல்லியனவாக அமைந்துள்ளன.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமாத்திர_யானை&oldid=2192614" இருந்து மீள்விக்கப்பட்டது