சுமிதா தாண்டி

சுமிதா தாண்டி (Smita Tandi) (பிறப்பு: 1992) சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள ஒரு இந்தியக் காவலர் ஆவார். மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு உதவ இவர் ஒரு நிதியை அமைத்தார். இவரது மனிதாபிமான முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக 2016இல் நாரி சக்தி விருதைப் பெற்றார்.

சுமிதா தாண்டடி
Smita Tandi, Chattisgarh NSP (cropped).jpg
2016இல் நாரி சக்தி விருது பெறும் சுமிதா
தேசியம் இந்தியா
பணிகாவலர்
பணியகம்இந்தியக் காவல் பணி
அறியப்படுவதுமுகநூல் செயல்பாட்டாளர்

தொழில்தொகு

இவர் காவல் துறையில் காவலராகப் பணிபுரிகிறார். [1] 2013ஆம் ஆண்டில் காவல்துறையில் பணிபுரிந்த இவரது தந்தை நோய்வாய்ப்பட்டபோது, இவரது குடும்பத்தினரால் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் இறந்தார். அவரது நினைவாக, மருத்துவ சிகிச்சையை அணுக முடியாதவர்களுக்காக "ஜீவன்தீப்" என்ற நிதியை அமைத்தார். [2] 2015ஆம் ஆண்டில் இந்த நிதியை மேம்படுத்துவதற்காக இவர் ஒரு முகநூல் கணக்கை ஆரம்பித்தார். இருபது மாதங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட 7.2 லட்சம் பேர் இவரைப் பின்தொடர்பவர்களாக இருந்தனர். [3] இவர், உதவிக்கான வேண்டுகோளைப் பெறும்யைத் தெரிந்து கொண்டு அதைப் பற்றி முகநூலில் இடுகையிட்டு நிதிக்காக முறையீடு செய்கிறார்.

இவரது மனிதாபிமான முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக 2016இல் இந்திய அரசு நாரி சக்தி விருதை வழங்கியது [4] இவரது செயல்பாட்டைப் பற்றி இவரது உயர் அதிகாரிகள் கேள்விப்பட்ட பிறகு, இவர் பிலாய் பெண்கள் உதவி மையத்தில் சமூக ஊடகப் புகார்களைக் கையாளும் பிரிவுக்கு பணியமர்த்தப்பட்டார். [1]

சொந்த வாழ்க்கைதொகு

1992களில் பிறந்த இவர், இந்திய மாநிலமான சத்தீசுகரிலுள்ள துர்க் என்ற நகரத்தில் வசிக்கிறார். [1] இவர் கைப்பந்தாட்டத்தில் சத்தீசுகரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். [1]2018 ஆம் ஆண்டில், பிலாசுப்பூர் மற்றும் பாடப்பாரா இடையே தொடர்வண்டியில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலைப் பற்றி புகார் அளித்தார். இவரைத் தாக்கியவர் இரயில்வே பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டார். [5]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமிதா_தாண்டி&oldid=3591669" இருந்து மீள்விக்கப்பட்டது