சுமிதா பாரதி

இந்திய நடிகை

சுமிதா பாரதி (Smita Bharti) என்பவர் ஒரு இந்திய சமூக ஆர்வலர், நாடக ஆசிரியர், இயக்குநர் ஆவார். அவர் சமூக, வகுப்பு மற்றும் வயது அடுக்குகளை உள்ளடக்கிய 20 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். கடினமான, சவாலான சூழ்நிலைகளில் உள்ள பெண்கள் மற்றும் இளம் பருவத்தினருடனும், உடல், மனவளர்ச்சிக் குறைந்த நபர்களுடனும், விசாரணை அமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுடனும். சிறைகளில், குடும்ப வன்முறை, பாலியல் அத்துமீறல், பாலியல் முறைகேடு, தகாப் பாலுறவு போன்ற சூழ்நிலைகளில் உயிர் பிழைத்தவர்களுடன் பயிற்சி, பட்டறைகள், நிகழ்ச்சிகள், பரப்புரைகள், ஆய்வுகள், வெளியீடுகள் மூலம், இவர் விரிவாகவும் தீவிரமாகவும் பணியாற்றுகிறார். நாட்டில் முறையான மாற்றத்தை உருவாக்கும் திறன் கொண்ட கொள்கை வடிவமைப்பாளர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுகிறார். [1]

சுமிதா பாரதி
2019 சமாகதி நிக்வில் ரக்ஷின் திட்டம் பற்றி சுமிதா பாரதி பேசுகிறார்
பிறப்பு2 ஆகத்து 1964 (1964-08-02) (அகவை 60)
பிலாய், சத்தீசுகர், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிசமூக செயற்பாட்டாளர், நாடக ஆசிரியர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்போது
அமைப்பு(கள்)சாக்சி

துவக்க கால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

பாரதி 1964 இல் சத்தீஸ்கரின் பிலாய்யில் நிர்மல் மற்றும் அக்யா ராம் சேத்திரபால் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை சிம்லா ஆக்லாந்து பள்ளியில் படித்தார். அங்கு இவர் தன் ஐந்து வயதில் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தபட்டார், சிம்லாவில் உள்ள கெய்ட்டி அரங்கில் வைக்கப்பட்டுள்ள நகைச்சுவை நாடகங்களைப் படித்தார். தனிமை விரும்பியான இவர் ஆர்வமுள்ள வாசகராக இருந்தார். புத்தகங்கள் இவருடைய கற்பனையைத் தூண்டியது, ஆறுதல் அளித்தது, உறவுகளை புரிந்து கொள்ளவும் உதவியது.

1982 இல், பாரதி தில்லிக்குச் சென்றார், அங்கு 1985 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் இலக்கியம் மற்றும் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். திருமணத்திற்குப் பிறகு தான் அனுபவித்த குடும்ப வன்முறைகளுக்குப் பிறகு தான் வழும் வழ்க்கை தனக்கான அடையாளம் அல்ல என்பதை உணர்ந்தார். அதன் பிறகு பாரதியின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. 1995 ஆம் ஆண்டில், அவர் இரண்டு குழந்தைகளுக்கு ஒற்றை பெற்றோராக ஒரு சிறந்த வாழ்க்கையை நோக்கி தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார்.

நடக அரங்கு

தொகு

2000 ஆம் ஆண்டு முதல், பாரதி கதைசொல்லல் கலையில் ஈடுபடுத்திக்கொண்டார். [2] பாரதி 20 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார், திரைப்படங்கள், காணொளி நிறுவல்கள், ஊடாடும் கண்காட்சிகள், ஒலிப் புத்தகங்கள் போன்ற திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். [3] இவர் சமஸ்கிருதி அருங்காட்சியகங்கள் மற்றும் ஏசியன் ஹெரிடேஜ் அறக்கட்டளையின் திட்ட ஆலோசகராக இருந்துள்ளார்.

2004 ஆம் ஆண்டில், விஸ்காம்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக தில்லியில் உள்ள திகார் சிறையில் பாரதி ஒரு திட்டத்தை வழிநடத்தினார். அதன் ஒரு பகுதியாக சிறைக் கைதிகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஒரு தனித்துவமான கூட்டுத் தயாரிப்பாக 2004 திசம்பரில் சிறையில் உருவாக்கபட்டது. இந்தத் திட்டம் ஜெயில்பேர்ட்ஸ் என்ற நாடகத்திற்கு வழிவகுத்தது. இது தவறான கணவனைக் கொன்றதற்காக 14 வருட சிறைத்தண்டனை முடித்து வெளிவரும் ஒரு பெண்ணின் பயணத்தை ஆராய்வதாக இருந்தது. [4]

2013 இல், இவர் ஜக் ஜக் ஜியோவை எழுதி இயக்கினார், இது சிறந்த நாடகத்திற்கான யு.என்.எப்.பி.ஏ. லாட்லி மீடியா விருதைப் பெற்றது. [5]

நாடகங்கள்

தொகு
  • Yellow Wallpaper (2000)
  • Rooh Ka Ghar: The Most Important Question (2001)
  • Suraksha (2001)
  • Bhanwar (2001)
  • Saatwan Darwaaza (2002)
  • One is Not Enough (Series of 10 Short Plays) (2003)
  • At Play (Multimedia Installation) British Council (2003)
  • It's Not a Play (2004)
  • Khel (2004)
  • Jailbirds (2005) [6]
  • 45'35'55 (2006) [7]
  • Nun & The Prostitute (2007)
  • Blind Date (2007)
  • As the Sun Sets (2008) [8]
  • Rubaru: Raj Kapoor in Russia (2009)
  • Walk Once More (2009)
  • Nana(2011)
  • Miss Blossom Callahan Patialewaali (2012) [9]
  • Uncoupled Couple (2013)
  • Jug Jug Jiyo (2013) [10]
  • Single Mingle (2015) [11]
  • Amavas Se Amaltas (2016) [12]
  • Agaaz (2017)
  • Gup Chup Gapp (2019) [13]
  • Ghat Ghat Mein Panchi Bolta Hai (2021) [14]

உறுப்பினர்

தொகு

வணிகரீதியான பாலியல் சுரண்டலுக்காக பெண்களையும், குழந்தைகளையும் கடத்துவதை எதிர்த்துப் போராடுவதற்கான இந்திய அரசின் மத்திய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பாரதி 2013 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அது தவிர, இவர் ரோட்டரி குளோபல் பீஸ் ஃபெலோ, கேகே பிர்லா அறக்கட்டளையின் ஃபெலோ மற்றும் விஸ்காம்பின் சிறப்பு உறுப்பினர். [15]

விருதுகள்

தொகு

2013 இல், பார்தி தனது ஜக் ஜக் ஜியோ நாடகத்திற்காக யு.என்.எப்.பி.ஏ. லாட்லி ஊடக விருதைப் பெற்றார். அதைத் தொடர்ந்து 2016 இல், சமூக மாற்றம் மற்றும் நீதிக்கான கர்மவீர் சக்ரா விருதையும் பெற்றார். 2021 இல், பாரதி SheThePeople வழங்கும் 40 ஓவர் 40 விருதையும் குளோபல் உமன் இன்ஸ்பிரேஷன் விருதையும் பெற்றார். [16]

மேற்கோள்கள்

தொகு
  1. "Smita Bharti". Naina Kapur Law.
  2. "Stage for Change". Indian Express. 2016. http://archive.indianexpress.com/news/stage-for-change/1157279/. 
  3. "A strong voice". 2015. http://www.thehindu.com/books/books-reviews/a-strong-voice-krishna-sobti/article7067911.ece. 
  4. Bharti, Smita (2004). Beyond Silences: Docu Theatre in Jail and Outside. WISCOMP. Archived from the original on 2021-05-01. பார்க்கப்பட்ட நாள் 2024-02-10.
  5. "'Voice of Century' award goes to Lata". 2015. http://www.thehindu.com/todays-paper/tp-national/voice-of-century-award-goes-to-lata/article7017313.ece. 
  6. "Jailbirds Listing".
  7. "Play Way Method". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/play-way-method/article4420417.ece. 
  8. "DelhiEvents Listing".
  9. "Tragi-Comic Play". IndiaPRwire. 2012. Archived from the original on 2016-10-11. பார்க்கப்பட்ட நாள் 2024-02-10.
  10. "Jug Jug Jiyo Review: Mumbai Theatre Guide". Mumbai Theatre Guide. 2013.
  11. "A Story Of 3 Best Friends: Singles, Each One Of Them, And Mingled". Times of India. 2016.
  12. "Opening show of 'Amavas Se Amaltas' a successful affair". Times of India. 2016. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/theatre/opening-show-of-amavas-se-amaltas-a-successful-affair/articleshow/55834673.cms?from=mdr. 
  13. "IAS officers' wives take the stage in the capital to support #StopChildSexualAbuse". Times of India. 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/events/delhi/ias-officers-wives-take-the-stage-in-the-capital-to-support-stopchildsexualabuse/articleshow/71852859.cms. 
  14. "GGMP Registration". Sakshi. 2021. Archived from the original on 2021-04-30. பார்க்கப்பட்ட நாள் 2024-02-10.
  15. Bharti, Smita (2004). Beyond Silences: Docu-Theatre in Jail and Outside. WISCOMP. Archived from the original on 18 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 September 2016. {{cite book}}: Check date values in: |archive-date= (help)
  16. Meet The Winners Of SheThePeople's 40 Over 40 Awards. SheThePeople. 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமிதா_பாரதி&oldid=4108436" இலிருந்து மீள்விக்கப்பட்டது