சுமித்ரா குகா
விதுஷி சுமித்ரா குகா என்பவா் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பாரம்பரிய இசைப் பாடகர், கர்நாடக மற்றும் இந்துஸ்தானி பள்ளிகளில் பாரம்பரிய இசையில் நிபுணத்துவம் பெற்றவர்.[1] நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ இந்திய அரசு 2010 ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்தது.[2]
விதுஷி சுமித்ரா குகா | |
---|---|
இந்தியக் குடியரசு நாளன்று பாரீசில் இசைப் பயணத்தின போது சுமித்ரா குகா | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுமித்ரா ராஜூ |
பிறப்பு | 21 சனவாி |
பிறப்பிடம் | ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை, உலக இசை, கிரானா காரனா |
தொழில்(கள்) | இந்துஸ்தானி பாரம்பாிய இசைப் பாடகர் |
இசைத்துறையில் | 1972 முதல் தற்போது வரை |
இணைந்த செயற்பாடுகள் | Gondwana Dawn, OMKARA 2, Musical Journey towards Rising India |
இணையதளம் | www |
ஆரம்ப வாழ்க்கை
தொகுசுமித்ரா குகா ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.[3] உள்ளூரில் நன்கு அறியப்பட்ட பாடகியான திருமதி. ராஜ்யலட்சுமி ராஜு மற்றும் சித்தூர் மாவட்டத்தின் திருமலை ரெட்டிபல்லேவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை ஆட்சியா் ஆர். ஜி. நாராயண ராஜு. ஆகியோருக்கு மகளாகப் பிறந்த அவரது சகோதரி புகழ்பெற்ற கர்நாடக பாடகர் மற்றும் 15 ஆம் நூற்றாண்டின் புனித இசையமைப்பாளரான அண்ணாமாச்சார்யாவின் சங்கீர்த்தனைப் பாடகரான திருமதி. ஷோபா ராஜு [4] ஆவார். அவரது பேரன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கவிஞர் ஸ்ரேயாஷ் சர்க்கார் ஆவார் . சுமித்ரா குகா சிறு வயதிலேயே இசை மீது நாட்டம் கொண்டிருந்தார். இசை தொடா்பான தனது முதல் முதல் அடிப்படைகளை தனது தாயிடமிருந்து கற்றுக்கொண்டார்.[5][6] இசையில் அவரது முறையான பயிற்சி தனது பதினொரு வயதில் கர்நாடக பாரம்பரிய இசையின் புகழ்பெற்ற இசை குருவான எஸ்.ஆர்.ஜனகிராமனிடமிருந்து தொடங்கியது.[1][7] ஆந்திராவின் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த அவர், தொழிலின் மாண்பு காரணமாக மருத்துவராக விரும்பினார். அவரது தந்தை, நேபாளத்திற்கு மாற்றலாகிச் சென்றதால் சாந்திநிகேதன் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தில் சேர பரிந்துரைத்தார்.[8] அவர் தனது கல்லூரிக் கல்வியை அங்கு தொடர்ந்தார், தத்துவவியலில் பட்டதாரி படிப்பை முடித்த பின்னர். 1964 ஆம் ஆண்டில் இந்துஸ்தானி இசையைக் கற்கத் தொடங்கிய அவர், பண்டிட் ஏ.கனன் மற்றும் கிராணா கரனாவின் விதுஷி மலபிகா கானன் ஆகியோரின் கீழ் தனது இசை படிப்பைத் தொடர்ந்தார், பின்னர் உஸ்தாத் படே குலாம் அலி கான் ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றவரும் பாட்டியாலா கரானாவின் இசையில் புகழ்பெற்றவருமான சுஷில் குமார் போஸிடமிருந்து சில வழிகாட்டுதல்களைப் பெற்றார். இப்பயிற்சிகள் அனைத்தும் கல்கத்தாவின் கலாச்சார ரீதியாக வளமான சூழலில் நிகழ்ந்தது.
சுமித்ரா தனது 19 வயதில் ஒரு வங்காளி குடும்பத்தில் [8] திருமணம் முடித்த பிறகும் தனது படிப்பைத் தொடர்ந்தார், 1972 இல் அகில இந்திய வானொலியின் பி-தர கலைஞரானார்.[7] அதே ஆண்டு, திருப்பதியில் உள்ள திருமலை கோவிலில் தனது இசை நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். அகில இந்திய வானொலியில் , 1982, 85, 89 மற்றும் 90 ஆகிய ஆண்டுகளில் நான்கு சங்கிலித் தொடர் இசை நிகழ்ச்சிகளிலும், பல வானொலி சங்க சம்மேளனங்களிலும், அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனுக்கான தேசிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 1995 ஆம் ஆண்டு இறுதிக்குள், அவருக்கு விதுஷி பட்டம் கிடைத்தது.[1][6] அதே ஆண்டில் அவர் அகில இந்திய வானொலியின் சிறந்த தரக் கலைஞரானார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
தொகுதிருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் பெறப்பட்ட தங்கப் பதக்கங்களிலிருந்து தொடங்கி 1972 இல் பத்ராச்சலத்தில் அகில இந்திய வாகிகர் உட்சவம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட விருது வரை சுமித்ரா பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.[5][6] மேற்கு வங்க பத்திரிகையாளர்கள் சங்கம் 1991 ஆம் ஆண்டில் அவருக்கு சிறந்த பாடகர் விருதை வழங்கியது, ஒரு வருடம் கழித்து, 1995 இல் விதுஷி என்ற பட்டத்தையும் பெற்றார்.
2010 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கான பட்டியலில் இந்திய அரசு அவரைச் சேர்த்திருந்தது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "University of Massachusetts" (PDF). University of Massachusetts. 2014. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ "The Hindu". The Hindu. 5 September 2013. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
- ↑ "Profile". Sumitraguha.in. 2014. பார்க்கப்பட்ட நாள் 16 November 2014.
- ↑ 5.0 5.1 "Maharishi Gandharva". Maharishi Gandharva. 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
- ↑ 6.0 6.1 6.2 "Lokvani". Lokvani. 2014. பார்க்கப்பட்ட நாள் 16 November 2014.
- ↑ 7.0 7.1 "Under Score Records". Under Score Records. 2014. பார்க்கப்பட்ட நாள் 16 November 2014.
- ↑ 8.0 8.1 "The Hindu". The Hindu. 7 May 2009.