சுயி மக்கள்
சுயி மக்கள் (Sui people) என்பவர்கள் சீனாவில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர். இவர்கள் பெரும்பாலும் சீனாவின் குயிசூ மாகாணத்தில் வாழ்கின்றனர்.
வரலாறு
தொகுசுயி மக்கள் ஆன் அரசமரபு காலத்திற்கு முன்பு தெற்கு சீனாவில் வசித்த பழங்கால பாய்யூ மக்களிடமிருந்து வழிவந்தவர்கள் ஆவர். "சுயி" என்ற பெயர் மிங் அரசமரபு காலத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வார்த்தைக்கு சீன மொழியில் "நீர்" என்று பொருள்படும்.
மக்கள்தொகையியல்
தொகுஇன்று சுயி மக்களில் 93% (ஏறத்தாழ மூன்றரை இலட்சம்) சீனாவின் குய்சோவில் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சாண்டு சுயி தன்னாட்சி மாகாணத்தில் வாழ்கின்றனர்.[1] தெற்கே குவாங்சியில் உள்ள ரோங்ஷூய் மாகாணத்தில் உள்ள யிங்டாங் கிராமத்தைச் சுற்றி ஏறத்தாழ பத்தாயிரம் சுயி மக்கள் வாழ்கின்றனர். ஓரு சில சுயி மக்கள் யுனான் மாகாணத்தில் வாழ்கின்றனர். கூடுதலாக, வட வியட்நாமின் துயான் குவாங் மாகாணத்தில் உள்ள ஹங் குவாங் மாவட்டத்தில் 120 சுயி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு சாண்டு சுயி மாகாணத்தை விட்டு வெளியேறிய சுயி மக்களின் வழித்தோன்றல்களாக உள்ளனர்.
மொழி
தொகுபெரும்பாலான சுயி மக்கள் காம்-சுய் மொழிகளின் ஒரு பகுதியான க்ரா-டாய் மொழியைப் பேசுகிறார்கள்.
சமூகம்
தொகுசுயி மக்களின் குடும்பங்கள் பல்வேறு குலங்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய வீடுகள் பொதுவாக பிர் அல்லது பைன் மரத்தால் செய்யப்படுகின்றன. இருப்பினும் இன்றைய காலத்தில் வீடுகள் செங்கற்களால் கட்டப்படுகின்றன.
உணவு
தொகுசுயி மக்களின் முக்கிய உணவுகளில் அரிசி மற்றும் சோளம், கோதுமை, பார்லி, தினை போன்ற தானியங்கள் மற்றும் வற்றாளை கிழங்கு ஆகியவை அடங்கும். அரிசி ஒரு மூங்கில் அல்லது மூடிய பாத்திரத்தில் குறைந்த தீயில் வேகவைக்கப்படுகிறது. மீன் ஒரு முக்கிய உணவாகும்.
மதம்
தொகுசுயி மக்கள் பலதெய்வ மற்றும் மூதாதையர் வழிபாட்டைப் பின்பற்றுகிறார்கள். பாரம்பரியமாக நோய்வாய்ப்பட்ட அல்லது இறக்கும் நிலையில் உள்ளவர்களின் வீடுகளில் பிரார்த்தனை மற்றும் தியாகங்களைச் செய்ய ஷாமன்கள் பணியமர்த்தப்பட்டனர். சுயி மதத்தில் 900 க்கும் மேற்பட்ட பேய்கள் மற்றும் கடவுள்கள் உள்ளனர்.
திருவிழாக்கள்
தொகுதுவான் திருவிழா: இந்த அறுவடைத் திருவிழா சீனப் புத்தாண்டைப் போன்றது. இது செப்டம்பர் (சுயி புத்தாண்டு தொடக்கம்) முதல் நவம்பர் வரை (சுயி நாட்காட்டியின் இரண்டாவது மாதம்) கொண்டாடப்படும். சுயி புத்தாண்டு திருவிழாவின் போது கால்நடை இறைச்சி உண்ணப்படுவதில்லை. புத்தாண்டு தினத்தன்று குதிரைப் பந்தயம் மற்றும் பிற விழாக்கள் நடத்தப்படுகின்றன. வெவ்வேறு பகுதிகளில் உள்ள சுயி மக்கள் வெவ்வேறு நேரங்களில் துவானைக் கொண்டாடுவதால், இந்த திருவிழா இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும்.
மாவோ திருவிழா: இந்த நான்கு நாள் திருவிழா துவான் பண்டிகையைக் கொண்டாடாதவர்களால் கொண்டாடப்படுகிறது. சுயி நாட்காட்டியின் பத்தாவது மாதத்தில் நெல் நாற்றுகளை நடவு செய்த பிறகு இது கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் போது பாடகர்கள் பாரம்பரிய சுயி காதல் பாடல்களைப் பாடுகிறார்கள். பாரம்பரியத்தின்படி திருமணமான பெண்கள் பாடகர் குழுவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. வசந்த விழா: இந்த திருவிழா குறிப்பாக பன்னான், ஷுமேய், யாங்காங், சௌகின் மற்றும் யாங்கான் ஆகிய பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்த கிராமங்கள் துவான் அல்லது மாவோ பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "全国唯一的水族自治县——三都宣告脱贫-新华网". www.gz.xinhuanet.com. Archived from the original on August 9, 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.