சுரவரம் பிரதாப ரெட்டி

சாகித்திய அகாதமி விருது பெற்ற தெலுங்கு எழுத்தாளர்

சுரவரம் பிரதாப ரெட்டி (Suravaram Pratapa reddy) (1896-1953) இவர் இந்தியாவின் ஐதராபாத் மாநிலத்திலிருந்து (இப்போது தெலங்காணா) வந்த ஒரு சமூக வரலாற்றாசிரியர் ஆவார்.

சுரவரம் பிரதாப ரெட்டி

வாழ்க்கைதொகு

முந்தைய ஐதராபாத் மாநிலத்தின் கத்வால் மாவட்டத்தில் உள்ள போரவெல்லி கிராமத்தில் 1896 மே 28 அன்று பிரதாப ரெட்டி பிறந்தார். [1] இவரது தாய் ரங்கம்மா, தந்தை நாராயணாரெட்டி. இவர்களின் சொந்த கிராமம் மகாபூப்நகர் மாவட்டத்தில் இட்டிகலபாடு என்பதாகும். பிரதாப ரெட்டி தனது முதன்மை கல்வியை கர்நூலிலுள்ள உள்ள தனது மாமா ராமகிருட்டிணா ரெட்டியின் இல்லத்தில் தங்கி முடித்தார். வெல்லால சங்கர சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ் சமசுகிருத இலக்கியங்களையும் இலக்கணத்தையும் பயின்றார். பின்னர் ஐதராபாத்தின் நிஜாம் கல்லூரிக் கல்வியை முடித்தார். பின்னர் சென்னை மாகாணக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்று, பின்னர்சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.  

தொழில்தொகு

தெலுங்கு மக்களின் சமூக வரலாறு எழுதப்பட்ட ஆந்திரா சாங்கிகா சரித்திரா, இது 1949 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் பல பதிப்புகள் வெளியிடப்பட்டது. சிறந்த தேசிய புத்தக விருதை ( கேந்திர சாகித்திய அகாதமி புரஸ்காரம் ) வென்ற முதல் தெலுங்கு மொழி புத்தகமாகும். 1970 களில் இருந்து இது இந்திய நிர்வாக சேவை மற்றும் இந்திய காவல்துறை சேவை தேர்வுகள் மற்றும் ஆந்திர பிரதேச காவல் பணி போன்ற ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட உரையாகும்.  

பிரதாப ரெட்டி சமசுகிருதம், தெலுங்கு, உருது மற்றும் ஆங்கில மொழிகளில் அறிஞராக இருந்தார். இவருக்கு தெலுங்கானா தெலுங்கு மீது மிகுந்த அபிமானம் இருந்தது. இவர் தனது ஆராய்ச்சி கட்டுரைகள், புதினங்கள், கவிதை, கதை எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் ஆகியவற்றிக்கு பிரபலமானவர். இவர், “பிரித்தன் ஆந்துலரு பிரவுன்வந்த்ரம் (ஆங்கிலம்-தெலுங்கு) மாட்லாடிட்டே மேமு தாரக்கியந்திரம் (உருது-தெலுங்கு) மாட்லாத்தாமு. (பிரிட்டிஷ் ஆந்திராஸ் தெங்லிஷ் (தெலுங்கு-ஆங்கிலம்) பேசுகிறது, நாங்கள் துர்டு (தெலுங்கு-உருது) பேசுகிறோம் என்று கூறினார். "  

இலக்கியப் பணிதொகு

ஐதராபாத் மாநிலத்தில் உள்ள கோல்கொண்டா பத்ரிகா என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், நிறுவனராகவும் இருந்தார். இவரது பல கட்டுரைகள் சுஜாதா, ஷோபா, பாரதி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன.   1920-1948 காலகட்டத்தில் தெலுங்கானாவில் சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்தின் தீவிர பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்திற்காக சுரவரம் பிரதாப ரெட்டி அறியப்பட்டார். இந்த இயக்கம் நிஜாம் எதேச்சதிகாரத்தை மீறி, மக்களின் விடுதலைக்காக உழைத்தது. இது நிஜாம் ஐதராபாத் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினருக்கும் குறிப்பாக தெலுங்கானாவின் தெலுங்கு மக்களுக்கும் பாரபட்சம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பாடுபட்டது. 1930 ஆம் ஆண்டில் ஜோகிபேட்டையில் நடைபெற்ற மக்களின் பிரபலமான போர்க்குணம் கொண்ட அமைப்பான நிஜாம் ஆந்திர மகாசபாவின் முதல் தலைவராக இருந்தார்.  இவர் அனைத்து தெலுங்கு மக்களின் ஒற்றுமை பற்றிய கருத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். மேலும் விசாலந்திராவின் கருத்து மற்றும் கோரிக்கையின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

ஆந்திரோதயம்தொகு

தெலுங்கானா ஆந்திரோதயம் என்ற புத்தகம் 1920 முதல் 1948 வரையிலான காலப்பகுதியில் தெலுங்கானாவில் நடந்த கலாச்சார, மொழியியல் மற்றும் அரசியல் போராட்டங்களின் மிகவும் விலைமதிப்பற்ற மற்றும் பயனுள்ள வரலாற்றுத் தொகுப்பாகும்; முக்கியமாக 1930 முதல் ஆந்திர மகாசபாவின் பதாகையின் கீழ் - ஆந்திரயத்தில் ஸ்ரீ பிரதாப் ரெட்டியின் பங்களிப்பு பற்றிய பல குறிப்புகள் இதில் உள்ளன. ஆந்திர மாநிலத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை இவர் வரவேற்றார், ஆனால் அதைப் பார்க்க இவர் வாழவில்லை, 1953 ஆகஸ்ட் 25 ஆம் தேதி காலாவதியான அவரது விசாலந்திராவை (ஆந்திரா) பார்க்க இவர் வாழவில்லை.  

குறிப்புகள்தொகு