சுரேன் ராகவன்

இலங்கை வடக்கு மாகாண ஆளுநர்

சுரேன் ராகவன் (Suren Raghavan) இலங்கைத் தமிழ் கல்வியாளரும், இலங்கை, வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.

சுரேன் ராகவன்
6-வது வட மாகாண ஆளுநர்
பதவியில்
7 சனவரி 2019 – 20 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
முன்னவர் ரெஜினால்ட் குரே
பின்வந்தவர் பி. எஸ். எம். சார்லசு
தனிநபர் தகவல்
தேசியம் இலங்கைத் தமிழர்
படித்த கல்வி நிறுவனங்கள் கென்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து
தொழில் கல்வியாளர்

ராகவன் 2005 ஆம் ஆன்டில் கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல், பன்னாட்டு உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1][2] பின்னர் அவர் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகப் பணியாற்றி 2008 இல் கென்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக இணைந்து,[1][3] 2012 இல் முனைவரானார்.[2][4]

ராகவன் 2018 நவம்பரில் இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராகவும், அரசுத்தலைவரின் ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.[2][5] 2019 சனவரியில் இவர் வட மாகாண ஆளுநராக அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்டார்.[6][7] 2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகக் கேட்டுக் கொண்டதை அடுத்து சுரேன் இராகவன் 2019 நவம்பர் 20 இல் பதவி விலகினார்.[8][9]

படைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Suren Rāghavan". Oxford, U.K.: Oxford Centre for Buddhist Studies. பார்த்த நாள் 14 January 2019.
  2. 2.0 2.1 2.2 "First Tamil Governor, Dr. Suren Ragavan, appointed for North". Tamil Diplomat. 8 January 2019. http://tamildiplomat.com/first-tamil-governor-dr-suren-ragavan-appointed-north/. பார்த்த நாள்: 14 January 2019. 
  3. "Centre for Federal Studies: Members". Canterbury, U.K.: University of Kent. பார்த்த நாள் 14 January 2019.
  4. "Centre for Federal Studies: Research degrees". Canterbury, U.K.: University of Kent. பார்த்த நாள் 14 January 2019.
  5. "Suren Ragawan appointed Presidential Media Director!". Sri Lanka Mirror (Colombo, Sri Lanka). 25 November 2018. https://www.srilankamirror.com/news/news-in-brief/11668-suren-ragawan-appointed-presidential-media-director. பார்த்த நாள்: 14 January 2019. 
  6. "Three more governors appointed". The Daily Mirror (Colombo, Sri Lanka). 7 January 2019. http://www.dailymirror.lk/article/Three-more-governors-appointed-160768.html. பார்த்த நாள்: 14 January 2019. 
  7. "Keerthi Tennakoon appointed Governor Uva". தி ஐலண்டு (Colombo, Sri Lanka). 9 January 2019. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=197353. பார்த்த நாள்: 14 January 2019. 
  8. "Governors resign". தி ஐலண்டு (இலங்கை). 21 நவம்பர் 2019. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=214078. பார்த்த நாள்: 31 December 2019. 
  9. "Governors asked to resign". The Daily Mirror. 20 நவம்பர் 2019. http://www.dailymirror.lk/breaking_news/Governors-asked-to-resign/108-178175. பார்த்த நாள்: 31 December 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேன்_ராகவன்&oldid=2888310" இருந்து மீள்விக்கப்பட்டது