சுரேஷ் சம்பந்தம்

சுரேஷ் சம்பந்தம் ஆரஞ்சுஸ்கேப்(ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிஸ்ஃபுலோ-ன்(ஆங்கிலம்: Kissflow) முதன்மை செயல் அதிகாரி ஆவார்[1][2][3]. புதுச்சேரியில் பிறந்து தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் வளர்ந்த இவர் ஒரு முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆவார்.

சுரேஷ் சம்பந்தம்
Suresh Sambandam.jpg
திரு. சுரேஷ் சம்பந்தம் - 2020 ஆண்டு
பிறப்புபுதுச்சேரி
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
பணிமுதன்மை செயல் அதிகாரி(CEO), ஆரஞ்சுஸ்கேப்.
பணியகம்ஆரஞ்சுஸ்கேப்
அறியப்படுவதுஆரஞ்சுஸ்கேப்(OrangeScape), கிஸ்ஃபுலோ(kissflow)

கல்வி மற்றும் தொழில் வாழ்க்கைதொகு

சுரேஷ் சம்பந்தம் புதுச்சேரியில் பிறந்து தமிழ்நாட்டின் கடலூர் எனும் மூன்றாம் நிலை நகரில்(Tier-III city) வளர்ந்தார். ஒரு தன்னாக்க தொழில் முனைவோர் ஆன இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை கடலூர் புனித ஜோசப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு முடித்தவுடன் தன் 17-ம் வயதில் தன் தந்தையாரின் நிலம், மனை, சொத்து விற்பனை தொழிலில் ஈடுபட்டார். பின்னர் 1993-ம் ஆண்டு தொலைதூரக் கல்வி முறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றார்[1].

சுரேஷ் சம்பந்தம் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களான ஹெவ்லட்-பேக்கர்ட்(HP) மற்றும் செலக்டிகா(selectica) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். ஹெவ்லட்-பேக்கர்ட்(HP) நிறுவனத்தில் மென்பொருள் பகுப்பாய்வாளராகப் 1997-ம் வருடம் பணியில் சேர்ந்த இவர் அங்கு 2000-ம் ஆண்டு வரை பணியில் இருந்தார். பின்னர் செலக்டிகா(selectica) நிறுவனத்தில் குழுத்தலைவராக காப்பீட்டுத்துறை தொடர்பான மென்பொருள் உருவாக்கத்தில் தன் சொந்த நிறுவனமான ஆரஞ்சுஸ்கேப்-ஐ தொடங்கும் வரை பணியாற்றினார்.

ஆரஞ்சுஸ்கேப்தொகு

சுரேஷ் சம்பந்தம் தன்னுடன் முந்தைய நிறுவனங்களில் பணிபுரிந்த மற்ற 4 குழுத்தலைவர்களுடன் இணைந்து 2003-ம் ஆண்டு ஆரஞ்சுஸ்கேப்-ஐ நிறுவினார். ஆரஞ்சுஸ்கேப் நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பணியிட தானாக்க மென்பொருள்(workplace automation platform), சாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a Service) எனப்படும் மென்பொருளை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. இந்நிறுவனம் இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தனது அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 2012-ம் ஆண்டு கூகிளின், கூகுள் மேகக்கணிம தளத்தை(Google Cloud Platform) அடிப்படையாகக்கொண்டு கிஸ்ஃபுலோ(ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டது. இது இந்நிறுவனத்தின் முதன்மையான மற்றும் இத்துறையின் முன்னோடி மென்பொருள் ஆகும்.

2012-ம் ஆண்டு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய ஆரம்ப நிலை முதலீட்டாளர்களிடமிருந்து(Angel investors) முதலீடாகப் பெற்றது[4].

பொது வாழ்க்கைதொகு

சுரேஷ் சம்பந்தம் சாஸ் தொடர்பான சாஸ்பூமி(SaaSBoomi) எனப்படும் ஆசியாவின் பெரிய சாஸ் கலந்தாய்வு மாநாட்டின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார்[5]. மேலும் தொழில் முனைவு குறித்து இவர் பல தொழில் சார் மன்றங்களிலும், கல்லூரிகளிலும் 'சங்கே முழங்கு' உள்ளிட்ட தலைப்புகளில் தொடர்ந்து உரையாற்றிவருகிறார். ஃபோர்ப்ஸ்(Forbes), ஆந்த்ரப்புரூனர் இதழ்(Entrepreneur magazine), மீடியம்-இணையதளம்(Medium-website), ஆங்கில நாளிதழான தி இந்து உள்ளிட்டவற்றில் தொழில் சார்ந்த தலைப்புகளில் எழுதிவருகிறார்.

காப்புரிமங்கள்தொகு

சுரேஷ் சம்பந்தம் பின்ரும் 3 காப்புரிமங்களை தன் பெயரில் கொண்டுள்ளார் (தனியாகவோ அல்லது கூட்டாகவோ)

 • US8055995B2[6].
 • US7464185B2[7].
 • US20060200772A1[8].

புத்தகங்கள்தொகு

சுரேஷ் சம்பந்தம் பற்றி பின்வரும் 3 புத்தகங்களில் அதிகாரங்கள் உள்ளன

 • ஆங்கிலம் - Dreamchasers: Entrepreneurs from the South of the Vindhyas from vitastapublishing by Shobha Warrier [9].
 • ஆங்கிலம் - Surge: Tamil Nadu's Growth Story from Westland Ltd Sushila Ravindranath[10].
 • ஜீரோ டூ ஹீரோ விகடன் பதிப்பகத்திலிருந்து[11].

விருதுகள்தொகு

 • 2018: சிஐஐ(CII - Confederation of Indian Industries)-யிடமிருந்து '2018-ம் ஆண்டுக்கான தொழில் முனைவோர் விருது'[12]
 • 2018: கடலூரின் சிறந்த குடிமகன் உயர் சாதனையாளர் விருது Awarded the ‘Cuddalore Best Citizen High Achiever Award’
 • 2019: இன்டர்ஆப் 2019(Interop 2019) நிகழ்வில் சிறந்த இன்டர்ஆப் விருது(Best of Interop Awards) கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைத்தது[13]
 • 2019: ஆனந்த விகடன் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது[14]

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 N, Ramakrishnan (21 August 2012). "The inspiring story of a million-dollar company". Rediff.com. https://www.rediff.com/business/slide-show/slide-show-1-inspiring-story-of-a-million-dollar-company/20120821.htm. 
 2. Ravindranath, Sushila (19 February 2018). "Food Cafe: Banking on a steady revenue stream". The Financial Express. https://www.financialexpress.com/opinion/food-cafe-banking-on-a-steady-revenue-stream/1070962/. 
 3. Hariharan, Sindhu (11 June 2019). "Chennai-based startup Kissflow unveils unified digital workplace solution". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/business/india-business/chennai-based-startup-kissflow-unveils-unified-digital-workplace-solution/articleshow/69740521.cms. 
 4. Das, Nandana (5 May 2012). "OrangeScape Raises $1M Angel Funding From IAN". https://www.vccircle.com/orangescape-raises-1m-angel-funding-ian. 
 5. Kumar, Sajan (16 January 2019). "Chennai To host SaaS BooMi, Asia’s largest SaaS conference". The Financial Express. https://www.financialexpress.com/industry/chennai-to-host-saas-boomi-asias-largest-saas-conference/1444882/. 
 6. [1]
 7. [2]
 8. [3]
 9. [4]
 10. [5]
 11. [6]
 12. . https://ciiconnect.org/awards/#menu3. 
 13. Soni, Virendra (6 June 2019). "7 biggest announcements at Interop 2019". Daily Host News. https://www.dailyhostnews.com/7-biggest-announcements-at-interop-2019. 
 14. . https://awards.vikatan.com/nanayam-awards/details.php?data=2019-startup-chamipon-award. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_சம்பந்தம்&oldid=3621252" இருந்து மீள்விக்கப்பட்டது