சுல்தான்கஞ்ச் புத்தர் சிலை

சுல்தான்கஞ்ச் புத்தர் சிலை (Sultanganj Buddha) குப்த மற்றும் பாலப் பேரரசுகளின் இடைநிலைக் காலத்தில் கிபி 500 - 700 இடைப்பட்ட காலத்தில்[1] நிறுவப்பட்ட ஆளுயரச் செப்புச் சிலையாகும். இச்செப்புச் சிலை 2.3 மீட்டர் உயரமும், 1 மீட்டர் அகலமும், 500 கிலோ எடையும் கொண்டது. இச்செப்புச் சிலை இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தானகஞ்ச் எனும் கிராமத்தில் 1861-இல் கண்டெடுக்கப்பட்டது [2]1861-இல் சுல்தான்கஞ்ச் கிராமத்தில் பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கிழக்கிந்திய இரயில்வே துறையினர் இருப்புப் பாதை அமைக்கும் போது இப்புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.[3]தற்போது இந்த புத்தர் செப்புச் சிலை ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுல்தான்கஞ்ச் புத்தரின் செப்புச் சிலை
ஆண்டுகிபி 500-700
ஆக்கப் பொருள்செப்பு
இயக்கம்குப்தர்-பாலர்களின் இடைநிலைக் காலம்
பரிமானங்கள்2.3 m × 1 m (91 அங் × 39 அங்)
இடம்பர்மிங்காம் அருகாட்சியகம் மற்றும் கலைக் கூடம், பர்மிங்காம்
1861-இல் சுல்தான்கஞ்ச் புத்தரின் செப்புச் சிலையின் புகைப்படம்
சுல்தான்கஞ்சில் கண்டெடுக்கப்பட்ட புத்தரின் கற்சிலை, பிரித்தானிய அருங்காட்சியகம்

படக்காட்சிகள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Birmingham Museum page
  2. https://www.bbc.co.uk/birmingham/content/articles/2006/05/10/sultanganj_buddha_feature.shtml
  3. Wingfield, Christopher (2010) Touching the Buddha: Encounters with a charismatic object. In Museum Materialities: Objects, Engagements, Interpretations, ed. Sandra H. Dudley, Routledge: London & New York, pp.53-70. http://www.routledge.com/books/details/9780415492188/

மேற்கோள்கள்

தொகு