சுவாத் பள்ளத்தாக்கு

(சுவாட் பள்ளத்தாக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுவாத் பள்ளத்தாக்கு (Swat vally) என்பது பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்ஹா மாகாணத்தில் உள்ள சுவாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகும். இது இந்துகுஷ் மலையில் உற்பத்தி ஆகும் சுவாட் நதியின் உயர் பள்ளத்தாக்கு பகுதி ஆகும். சுவாட் பள்ளத்தாக்கு அமைந்துள்ள சுவாட் மாவட்ட தலைநகரம்சைது ஷெரீப் ஆகும். இருப்பினும் முக்கிய நகரமாக மிங்கோரா உள்ளது.[1] சுவாட் பள்ளத்தாக்கின் மக்கள்தொகையில் பெரும்பகுதி பஷ்துன் பழங்குடி மக்கள் மற்றும் குஜ்ஜார் மற்றும் கோஹிஸ்தானி சமூகங்கள் உள்ளன. பஷ்தூ, கோஜ்ரி, தொர்வாலி மற்றும் கோகிஸ்தானி ஆகிய மொழிகள் இந்த பள்ளத்தாக்கு மக்களால் பேசப்படுகின்றன.

சுவாத் பள்ளத்தாக்கு

இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத்து யுசஃப்சாய் மாநில சுவாட்க்கு வருகை தந்த போது “கிழக்கின் சுவிச்சர்லாந்து” என்ற புனைபெயர் சூட்டப்பட்டது.[2]

சொற்பிறப்பியல்

தொகு

ஸ்வாஸ்து என்ற ஆற்றின் பெயர் ரிக்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. இச்சொல்லே சுவாட் ஆற்றின் பெயர் முன்னோடி ஆகும்.[3]

இயற்கை மற்றும் அமைவிடம்

தொகு

உயரமான மலைகள், பசும்புல்வெளிகள் மற்றும் தெளிந்த நீர் ஏரிகள் போன்ற இயற்கை அழகுடன் சுற்றுலா பயணிகளிடம் பிரபலமாக சுவாட் பள்ளத்தாக்கு உள்ளது. சுவாட் பள்ளத்தாக்கின் மேற்கில் சித்திரால், உயர் திர் , தாழ் திர் வடக்கில் கில்கித்-பலுசிஸ்தானும், கிழக்கு மற்றும் தென் கிழக்கில் கோகிஸ்தான், புனெர் மற்றும் சங்க்லாவும் எல்லைகளாக உள்ளன.

வரலாறு

தொகு

சுவாட் பள்ளத்தாக்கில் 2500 ஆண்டுகளுக்கு மேலாக நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட நகரங்களில் மக்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். கி மு 327 இல் பேரரசர் அலெக்சாந்தர் கிரேக்கத்திலிருந்து சுவத் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். கி மு இரண்டாம் நூற்றாண்டில் பௌத்தர்கள், சுவாட் பகுதியில் பௌத்த மடாலயங்களையும், சிற்பங்களையும், சின்னங்களையும் எழுப்பினர். பௌத்த கட்டிடக் கலை மற்றும் இலக்கியங்கள் வளர்ந்தது. சாகி இந்து மன்னர்களின் அரசில் சுவத் மாவட்டம் இருந்தது. பின்னர் இசுலாமிய ஷாகி அரச வம்ச மன்னர்களில் கட்டுப்பாட்டில் சென்றது.

புவியியல்

தொகு

சுவாட் பள்ளத்தாக்கு கைபர் பக்துன்ஹா மாநிலத்தின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. 35° வடக்கு அட்ச ரேகை, 72° மற்றும் 30° கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்திருக்கிறது. வானுயர்ந்த மலைகள் சூழப்பட்ட இந்த பள்ளத்தாக்குப் பகுதி இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

  1. மலைத்தொடர்கள்
  2. சமவெளிகள்

மலைத்தொடர்கள்

தொகு

மேலே குறிப்பிட்டது போல சுவாட் மலைத்தொடர்களிடையே அமைந்துள்ளது. இந்துகுஷ் மலைத்தொடரின் தொடர்ச்சியாக இம்மலைகள் உள்ளதால் சுவாட் பள்ளத்தாக்கின் பெரும் பகுதி பனி படர்ந்த உயர்மலைகளும், சிகரங்களும் காணப்படுகின்றன. மிகப்பெரிய இம்மலைத்தொடர்கள் தொடர்ச்சியற்று சில கிழக்கிலும், சில மேற்கிலும் காணப்பட்டாலும் பொதுவாக வடக்கு தெற்காக பரவிக்காணப்படுகின்றன.

சமவெளிகள்

தொகு
 
சுவாட் பள்ளத்தாக்கு
 
சுவாட் பள்ளத்தாக்கின் சமவெளிப்பகுதிகள்
 
சுவாட் சமவெளியின் இலையுதிர்கால தோற்றம்

சுவாட் சமவெளி மல்கான்ட் மலை அடிவாரத்திலிருந்து தொடங்குகிறது. ஆயினும் சுவாட் நிர்வாக எல்லைக்குள் வரும் கேப்ரல் (குலபாட்) பகுதியும் இதில் அடங்கும். லண்டகே முதல் கேப்ரல் வரை இந்த சமவெளியின் மொத்த நீளம் 91 மைல்கள். லண்டகே முதல் கேப்ரல் வரை சுவாட் நதியின் கரையோரத்தில் இரண்டு குறுகிய சமவெளிகள் அமைந்துள்ளன.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுவாட் பள்ளத்தாக்கின் மொத்த மக்கள் தொகை 2,40,000.

97 சதவீத மக்களால் பேசப்படும் முக்கிய மொழியாக பஷ்தூ உள்ளது. கோகிஸ்தானி (கலாமி) , தொர்வாலி ஆகிய மொழிகளும் புழக்கத்தில் உள்ளன.

பழங்குடி இனங்கள்

தொகு

யுசுப்சாய் பஸ்தூன்கள், சேதன், மலக்கனன், அக்குந்த் கேல், மியங்கன் உட்பிரிவுகள்.

நிர்வாக பிரிவுகள்

தொகு

சுவாட் பள்ளத்தாக்கு, கீழ்கண்ட 7 தேசில் நிர்வாக பிரிவுகளாக (தாலுகா) பிரிக்கப்பட்டுள்ளது.[4] i.e.

  1. பபுசாய் தாலுகா
  2. மட்டா தாலுகா
  3. குவாஸா தாலுகா
  4. பரிகாட் ஸ்வாட்
  5. கபல் தாலுகா
  6. சார்பாஹ் தாலுகா
  7. பஹ்ரைன் தாலுகா

சுற்றுலாத் தலங்கள்

தொகு

மர்கஸார்

தொகு

சுவாட் பள்ளத்தாக்கின் முக்கிய நகரம் சைது ஷெரீப்லிருந்து 16 மைல்கள் தொலைவில் மர்கஸார் உள்ளது. இங்கு வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட முன்னாள் குஜ்ஜார் ஆட்சியாளரான வாலியின் சூபெத் மஹால் உள்ளது.

பைஸகாட் பூங்கா

தொகு

சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு மையமாக திகழும் பைஸாகாட் பூங்கா மிங்கோரா நகரத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[5]

மாலம் ஜபா

தொகு

காரகோரம் மலைத்தொடரில் உள்ள மலை வாசத்தலமான மாலம் ஜபா சுவாட் பள்ளத்தாக்கின் சைது ஷெரீப் நகரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது.

சுவாட் அருங்காட்சியகம்

தொகு

சுவாட் அருங்காட்சியகம் மிங்கோரா மற்றும் சைது இடையே, ஸ்வாடின் கிழக்கு பக்கத்தில் உள்ளது. சப்பானிய உதவியுடன் இப்போது ஏழு காட்சியகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுவாட் புத்த தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட காந்தார சிற்பங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புத்தரின் வாழ்க்கை வரலாற்று விளக்கக் காட்சியகங்களும் இதில் அடங்கும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. [https://web.archive.org/web/20070609092458/http://afp.google.com/article/ALeqM5jZ4MUOze82QJmr6Lv7C3sbmc-K1w பரணிடப்பட்டது 2007-06-09 at the வந்தவழி இயந்திரம் "Pakistan troops seize radical cleric's base": officials] பரணிடப்பட்டது 2007-06-09 at the வந்தவழி இயந்திரம், Agence France Presse article, 28 November 2007, accessed same day
  2. Queen Elizabeth II in Swat (1961). The Friday Times. Retrieved 1 June 2014.
  3. River Swat (Suvastu)
  4. http://lgkp.gov.pk/wp-content/uploads/2015/04/Village-Neighbourhood-Councils-Detatails-Annex-D.pdf
  5. Report, Dawn. "Roads clogged as hill stations attract crowds on Eid". www.dawn.com. பார்க்கப்பட்ட நாள் 25 November 2015.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாத்_பள்ளத்தாக்கு&oldid=4130569" இலிருந்து மீள்விக்கப்பட்டது