சுவாத் மாவட்டம்

(சுவத் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுவத் (Swat), பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மலைகள் சூழ்ந்த, சுவத் ஆற்றுச் சமவெளியில் அமைந்த மாவட்டமாகும். இதன் தலைமையிட நகரம் சையது செரீப் ஆகும். ஆனால் பெரிய நகரமாக மிங்கோரா விளங்குகிறது.[1]சுவத் மாவட்டத்தைக் கிழக்கின் சுவிட்சர்லாந்து என்பர்.[2]சுவத் மாவட்டத்தில் பஷ்தூன் பழங்குடி மக்கள், குஜ்ஜர் எனும் கால்நடை மேய்க்கும் மக்கள் மற்றும் கோகிஸ்தானி இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். பஷ்தூன் மொழி, கோஜ்ரி, தோர்வாலி மற்றும் கலாமி மொழிகள் இப்பகுதிகளில் அதிகம் பேசப்படுகிறது.[3]

சுவத் மாவட்டம்
سوات
மாவட்டம்
அடைபெயர்(கள்): கிழக்கின் சுவிட்சர்லாந்து
நாடுபாகிஸ்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்சையது செரீப்
பரப்பளவு
 • மொத்தம்5,337 km2 (2,061 sq mi)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்21,61,000
 • அடர்த்தி236/km2 (610/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இடக் குறியீடுArea code 0946

அமைவிடம்

தொகு
 
வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் சுவத் மாவட்டம்

சுவத் மாவட்டம், இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து வடமேற்கே 394 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[4]

எல்லைகள்

தொகு

மேற்கில் சித்ரால், மேல் திர் மற்றும் கீழ் திர் மாவட்டங்களையும், கிழக்கிலும், தென் கிழக்கிலும் கோகிஸ்தான், புனேர் மற்றும் சாங்க்லா மாவட்டங்களையும், மேற்கே ஆசாத் காஷ்மீரின் சில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது சுவத் மாவட்டம்.

பெயர்க் காரணம்

தொகு
 
ரிக் வேதகால நிலவியல், சுவஸ்து ஆற்றுச் சமவெளி நாகரீகங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

ரிக் வேதத்தில் இம்மாவட்டத்தில் பாயும் சுவஸ்து ஆறு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி, சுவத் என்று அழைக்கப்படுகிறது.[5][6]

வரலாறு

தொகு

சுவத் பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் திட்டமிட்ட நகர வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். கி மு 327-இல் பேரரசர் அலெக்சாந்தர் கிரேக்கத்திலிருந்து சுவத் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் பௌத்தர்கள்சுவத் பகுதியில் பௌத்த மடாலயங்களையும், நினைவுத் தூபிகளையும் எழுப்பினர். பௌத்தக் கட்டிடக் கலை மற்றும் இலக்கியங்கள் வளர்ந்தன. காபூல் சாகி இந்து மன்னர்களின் அரசில் சுவத் மாவட்டம் இருந்தது. பின்னர் இசுலாமிய சாகி அரச வம்ச மன்னர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. 19ஆம் நூற்றாண்டின் நடுவில் துரானிப் பேரரசில் சுவத் மாவட்டம் சேர்க்கப்பட்டது.

 
மான்கியால், சுவத் மாவட்டம்

பௌத்த கலாசாரம்

தொகு
 
சுவத் சமவெளியில் புத்தரின் உருவச்சிலை புகைப்படம், ஆண்டு 1869
 
அம்லுக்தார தூண்
 
சுவத் சமவெளியில் பௌத்த பண்பாட்டுக் களங்கள்
 
சிங்கதார் தூண்

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில், மன்னர் இந்திரபூதி காலத்தில், சுவத் பகுதியில் திபெத்தியத் தாந்திரீக பௌத்த சமயம் வளர்ச்சியடைந்திருந்தது.[7] இந்திரபூதி, இரண்டாம் புத்தர் எனப் புகழப்பட்டார்.[8]

கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், அசோகரின் மௌரியப் பேரரசின் காலத்தில், காந்தாரம், சுவத் சமவெளி, மற்றும் சுவத் மாவட்டத்தைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் பௌத்த சமயம் நன்கு பரவி இருந்தது. புத்தரின் நினைவைப் போற்றும் விதமாக, அசோகர் காலத்தில் எழுப்பப்பட்ட, ஹர்மகராஜிகா தூண் (தக்சசீலா]), புட்கரா (சுவத்) தூண்கள் காந்தாரச் சிற்பக் கலை நயத்துடன் எழுப்பப்ட்டுள்ளன.[9] காந்தரம் என்ற பகுதியின் பெயர் முதன் முதலாக ரிக் வேதத்தில் குறிக்கப்பட்டுள்ளது. சுவத் அருங்காட்சியகத்தில் புத்தர் தொடர்பான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

இந்து சாகி ஆட்சியாளர்களும் சமசுகிருதமும்

தொகு

சுவத் பகுதியை இந்து சாகி வம்ச மன்னர்கள் ஆண்டனர். ஷாகி மன்னர்கள் காலத்தில் சமசுகிருதம் ஆட்சி மொழியாக இருந்தது.

கஜினி முகமதுடன் இசுலாம் அறிமுகம்

தொகு

மௌரியப் பேரரசின் இறுதிக் காலத்தில் (கி மு 324–185) சுவத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பௌத்த சமயம் பரவி, சுவத் பகுதி புகழ் பெற்ற பௌத்த சமய மையமாக திகழ்ந்தது.[10]

பின்னர் காபூல் சாகி இந்து மன்னர்கள் இப்பகுதியை ஆண்டனர். கி பி 1000 இல் இசுலாமிய படையெடுப்புகளின் போது, சுவத் மாவட்டத்தில் இந்து சமய மக்கள் நிறைந்திருந்தனர்.

 
சையது ஷெரீப் மருத்துவமனை, சுவத்

கி பி 1023 இல் கஜினி முகமது சுவத் பகுதியில் படையெடுத்து, இந்து, பௌத்த நினைவுச் சின்னங்களை அழித்து, இசுலாமிய கலாசாரத்தை அறிமுகப்படுத்தினார்.[11]

புவியியல்

தொகு

சுவத் சமவெளி, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில், இமயமலைத் தொடரில், உயர்ந்த மலைகளுக்கிடையே அமைந்துள்ளது.

வடக்கில் சித்ரால் மற்றும் ஜில்ஜிட் பகுதிகளும், மேற்கில் திர், தெற்கில் மார்தன், கிழக்கே சிந்து ஆற்றின் மறு கரையில் ஹசாரா பகுதியும் அமைந்துள்ளது. சுவத் மாவட்டம், மலைத் தொடர்கள் மற்றும் சமவெளிகள் கொண்டது.

மக்கள் பரம்பல்

தொகு

2011 ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, சுவத் மாவட்ட மக்கட்தொகை 2,40,000 ஆகும்.

பொருளாதாரம்

தொகு

சுவத் மாவட்டத்தின் பொருளாதாரம், அதன் சுற்றுலா தலங்கள் மற்றும் தேனீ வளர்த்தல், கைவினைப் பொருட்கள் உற்பத்தியைச் சார்ந்துள்ளது.

சுற்றுலா மையங்கள்

தொகு

கிழக்கின் சுவிட்சர்லாந்து என்று சுவத் மாவட்டத்தை அழைப்பதற்கு காரணம், சுவத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சுவிட்சர்லாந்து சுற்றுலா தலங்களுக்கு நிகராக இருப்பதே.

சுவத் பள்ளத்தாக்கில் உள்ள சிறந்த சுற்றுலா மையங்கள்;

  1. மர்காசர்
  2. மலம் ஜப்பா
  3. சுவத் அருங்காட்சியகம்
  4. மியாந்தம்
  5. மத்தியான்[12]
  6. பெகரைன்
  7. கலாம்
  8. உசு அல்லது உத்ரோர்
  9. காப்ரால்

கைத்தொழில்கள்

தொகு

தேனீ வளர்த்தல், கையால் பின்னப்படும் கம்பிளி துணி வகைகள், மரகத கற்களை பாலிஷ் செய்தல், சீனா களிமண்னில் செய்த மட்பாண்டங்கள், மர நாற்காலி போன்ற தளவாட தொழில்கள் சிறப்பாக உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pakistan troops seize radical cleric's base": officials பரணிடப்பட்டது 2007-06-09 at the வந்தவழி இயந்திரம், Agence France Presse article, 28 November 2007, accessed same day
  2. Queen Elizabeth II in Swat (1961). The Friday Times. Retrieved 1 June 2014.
  3. Queen Elizabeth II in Swat (1961). The Friday Times. Retrieved 1 June 2014.
  4. http://www.distancesfrom.com/pk/distance-from-Islamabad-to-Swat-valley/DistanceHistory/950810.aspx
  5. Rigveda 08.19.37
  6. River Swat (Suvastu)
  7. Students' Britannica India By Dale Hoiberg, Indu Ramchandani Page 138
  8. Buddhist Art & Antiquities of Himachal Pradesh: Up to 8th Century A.D., by Omacanda Hāṇḍā Edition: illustrated Published by Indus Publishing, 1994 Page 89
  9. Architecture and Art Treasures in Pakistan By F. A. Khan, published by Elite Publishers, 1969
  10. Fredrik Barth, Features of Person and Society in Swat: Collected Essays on Pathans, illustrated edition, Routledge, 1981, page 20
  11. Proceedings of the Second International Hindukush Cultural Conference By Elena Bashir, Israr-ud-Din Contributor Elena Bashir, Israr-ud-Din Published by Oxford University Press, 1990, Page 50
  12. http://www.madyanguesthouse.com

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Swat District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாத்_மாவட்டம்&oldid=3447888" இலிருந்து மீள்விக்கப்பட்டது