சுவாதி மோகன்

சுவாதி மோகன் (Swati Mohan) ஓர் இந்திய-அமெரிக்க வான்வெளிப் பொறியியலாளர் ஆவார். இவர் அமெரிக்க நாசா விண்வெளி நிருவாகத்தின் செவ்வாய் 2020 திட்ட திட்டத்தின் வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டு செயல்பாட்டுத் தலைவர் ஆவார்.[1]

சுவாதி மோகன்
Swati Mohan
சுவாதி மோகன்
பணியிடங்கள்நாசா
கல்விகோர்னெல் பல்கலைக்கழகம் (B.S.)
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (M.S., முனைவர்)
அறியப்படுவதுசெவ்வாய் 2020 திட்டத்தில் பணி

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும் தொகு

சுவாதி இந்தியாவில் கருநாடக மாநிலம், பெங்களூரில் பிறந்து, ஓராண்டிற்குள் அமெரிக்காவில் பெற்றோருடன் குடிபெயர்ந்தார்.[2][3] மருத்துவராக வேண்டும் என்ற நோக்கில் படித்த சுவாதி, விண்வெளி ஆய்வுத்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால், தனது 16-வது அகவையில் இயற்பியல் படிக்க ஆரம்பித்தார்.[4] கோர்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் வான்வெளிப் பொறியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்று, மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் வானூர்தி அறிவியலில் முதுகலை, மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.[2][5][6]

நாசாவில் பணி தொகு

 
நாசாவின் ஜெட் புரொப்பல்சன் ஆய்வகத்தில் 2021 பெப்ரவரி 18 அன்று சுவாதி மோகன்.[7]

சுவாதி மோகன் கலிபோர்னியாவின் பசடீனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்சன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) செவ்வாய் 2020 திட்டப் பணிக்கான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகள் செயல்பாட்டுத் தலைவராகப் பணியாற்றுகிறார்.[1] இத்திட்டத்தில் சுவாதி 2013 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டார்.[8][9] அவரது பணியில், தரையூர்தியைச் (rover) சுமக்கும் விண்கலம் செவ்வாய்க் கோளிற்கான பயணத்தின்போதும், கோளின் மேற்பரப்பில் தரையிறங்கும் போதும் சரியான திசையில் நிலைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்வதற்கு பொறுப்பேற்றார்.[6][8][10] 2021 பிப்ரவரி 18 அன்று பெர்சீவியரன்சு தரையூர்தி செவ்வாயில் தரையிறங்கியபோது, திட்டக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இறங்கும் நிகழ்வுகளை அவர் உடனுக்குடன் விவரித்தார்.[1] "தரைத்தொடுகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் அறிவித்தார்.[11][12]

முன்னதாக, சுவாதி சனி கோளிற்கான காசினி திட்டத்திலும்,[4][8] நிலாவின் ஈர்ப்புப் புலத்தை வரைபடமாக்கிய கிரெயில் ஆய்வகத்திலும் பணியாற்றியிருந்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Meet the Martians: Swati Mohan". Mars Exploration Program. நாசா. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. 2.0 2.1 "Swati Mohan". Mars Exploration Program. நாசா. 8 December 2020. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Nasa Perseverance mission to leave Indian footprint on Mars". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2020-07-30. https://m.timesofindia.com/india/nasa-perseverance-mission-to-leave-indian-footprint-on-mars/amp_articleshow/77269428.cms. 
  4. 4.0 4.1 4.2 Dogra, Sarthak (18 February 2021). "Meet Dr Swati Mohan, In Charge Of Landing NASA Perseverance Rover On Mars". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. Mohan, Swati (2010). Quantative selection and design of model generation architectures for on-orbit autonomous assembly (Thesis). மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்.
  6. 6.0 6.1 Khanna, Monit (18 February 2021). "Dr Swati Mohan Has Made Us Proud: Spent 8 Years On NASA Perseverance Mars Landing". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. "Keeping Track of Mars Perseverance Landing". NASA Science Mars Exploration Program. NASA JPL. பார்க்கப்பட்ட நாள் 19 February 2021.
  8. 8.0 8.1 8.2 Mack, Eric (18 February 2021). "Meet NASA's Swati Mohan, a star of the Perseverance rover's landing on Mars". CNET (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  9. Kapur-Gomes, Suruchi (23 August 2020). "Swati Mohan: The Cosmic Genius". Sunday Guardian Live. https://www.sundayguardianlive.com/culture/swati-mohan-cosmic-genius. 
  10. "7 Minutes to Mars: NASA's Perseverance Rover Attempts Most Dangerous Landing Yet". Mars. NASA JPL. பார்க்கப்பட்ட நாள் 19 February 2021.
  11. "Touchdown! NASA's Mars Perseverance Rover Safely Lands on Red Planet". Mars News. NASA JPL. பார்க்கப்பட்ட நாள் 19 February 2021.
  12. Wall, Mike (16 February 2021). "A new 7 minutes of terror: See the nail-biting Mars landing stages of NASA's Perseverance rover in this video". Space.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_மோகன்&oldid=3931225" இலிருந்து மீள்விக்கப்பட்டது