காசினி-ஐசென்

காசினி-ஐசென் என்பது சனி கோளை ஆராய 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலமாகும். இது நாசா, ஈசா, ஆசி ஆகியவற்றின் கூட்டு் முயற்சியில் உருவான தனித்துவமிக்க தானியிங்கி விண்கலம் ஆகும்.காசனி சனி கோளை ஆராய அனுப்பப்பட்ட நான்காவது விண்கலமும் சனியின் சுற்று வட்டத்திற்குள் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும். ஏப்பிரல் 2017 இதன் செயல்பாடு தொடர்கிறது. இது சனி கோளையும் அதன் நிலவுகளையம் 2004 ஆம் ஆண்டிலிருந்து ஆராய்கிறது.[4] இந்த விண்கலத்தின் எடை சுமார் 5 டன். அதன் உயரம் சுமார் ஏழு மீட்டர். அகலம் நான்கு மீட்டர். அதில் 14 வகையான ஆராய்ச்சிக் கருவிகள் இடம்பெற்றிருந்தன. காசினியின் உறுப்புகளின் எண்ணிக்கை 1,700. காசினி சனியின் நிலவுகளில் ஒன்றாகிய குளிர்ந்த நிலவான என்செலடசை கண்டறிந்தது, இதன் மேற்பரப்புக்கு அடியில் உப்புக்கடல் இருக்கலாமென்றும் உயிரினங்கள் வாழ இது துணைபுரியலாமென்றும் கருதப்படுகிறது. திட்ட வல்லுனர்கள் நிறைய புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதால் கோள்களின் அறிவியல் துறையே மாற்றி எழுதப்பட வேண்டியிருக்கும் என கருதுகிறார்கள். காசினி சனி கிரகத்தின் காற்று மண்டலத்தை ஆயவு செய்தது. காசினியில் உள்ள கருவிகள் செயல்படவும், குளிர் தாக்காமல் வெப்பத்தை அளிக்கவும் காசினியில் அணுசக்தியால் இயங்கும் மின்கலம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த மின்கலத்தில் புளுட்டோனியம்-238 எனப்படும் அணுசக்திப் பொருள் 32 கிலோ வைக்கப்பட்டிருந்தது. இந்த அணுசக்திப் பொருளிலிருந்து வெளிப்பட்ட வெப்பம் மின்சாரமாக மாற்றப்பட்டது.[5]

காசினி-ஐசன்சு
Cassini–Huygens
சனிக்கோளை சுற்றிவரும் காசினி (ஓவியரின் கைவண்ணத்தில்)
திட்ட வகைகாசினி: சனி சுற்றுக்கலன்
ஐசன்சு: டைட்டன் தரையிறங்கி
இயக்குபவர்காசினி: நாசா / JPL
ஐசன்சு: ஈசா / ASI
காஸ்பார் குறியீடு1997-061A
சாட்காட் இல.25008
இணையதளம்
திட்டக் காலம்
  • இறுதி:
  • 19 ஆண்டுகள், 334 நாட்கள்
  • 13 ஆண்டுகள், 75 நாட்கள் (சனியில்)


  • இடைவழி: 6 ஆண்டுகள், 261 நாட்கள்
  • முதன்மைத் திட்டம்: மூன்று ஆண்டுகள்
  • நீடிக்கப்பட்ட திட்டங்கள்:
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புகாசினி: ஜெட் உந்துகை ஆய்வுகூடம்
ஐசன்சு: ஆல்காடெல் அலேனியா இசுப்பேசு
ஏவல் திணிவு5,712 கிகி[1]
உலர் நிறை2,523 கிகி[2]
திறன்~885 வாட்டுகள் (BOL)[2]
~670 வாட்டுகள் (2010)[3]
~663 வாட்டுகள் (EOM/2017)[2]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்அக்டோபர் 15, 1997, 08:43:00 ஒசநே
ஏவுகலன்டைட்டான் IV(401)B B-33
ஏவலிடம்கேப் கேனவரெல் SLC-40
திட்ட முடிவு
கழிவு அகற்றம்சனிக் கோளில் திட்டமிட்ட மீள்செலுத்துகை
கடைசித் தொடர்பு15 செப்டம்பர் 2017
தேய்வு நாள்15 செப்டம்பர் 2017
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemKronocentric
வெள்ளி-ஐ (ஈர்ப்பு உதவியுடன்) அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்ஏப்ரல் 26, 1998
தூரம்283 கிமீ
வெள்ளி-ஐ (ஈர்ப்பு உதவியுடன்) அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்சூன் 24, 1999
தூரம்6,052 கிமீ
புவி-நிலா தொகுதி-ஐ (ஈர்ப்பு உதவியுடன்) அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்ஆகத்து 18, 1999, 03:28 ஒசநே
தூரம்1,171 கிமீ
2685 மாசுர்ஸ்கி-ஐ (இடைவிளைவு) அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்23 சனவரி 2000
தூரம்1,600,000 கிமீ
வியாழன்-ஐ (ஈர்ப்பு உதவியுடன்) அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்30 திசம்பர் 2000
தூரம்9,852,924 கிமீ
சனி சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்சூலை 1, 2004, 02:48 ஒசநே
டைட்டன் தரையிறங்கி
விண்கலப் பகுதிஐசன்சு
தரையிறங்கிய நாள்14 சனவரி 2005
----
மீச்சிறப்புத் திட்டம்
← கலிலியோ செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம்

பெயரியல் தொகு

கி.பி. 1670-ம் ஆண்டு வாக்கில் ஜியோவன்னி டாமினிகோ காசினி என்னும் இத்தாலிய அறிவியலாளர், சனி கிரகத்தின் ஐந்து புதிய துணைக்கோள்களைக் கண்டுபிடித்தார். அத்துடன், சனி கிரகத்தைச் சுற்றியுள்ள வளையங்களில் இடைவெளி உள்ளது என்றும் கண்டுபிடித்தார். ஹுய்ஜன்ஸ் என்னும் டச்சு விஞ்ஞானி சனியைச் சுற்றும் டைட்டான் என்னும் பெரிய துணைக் கோளை 1655-ல் கண்டுபிடித்தார். ஆகவே, அவர்களது பெயர்களை இணைத்து காசினி - ஹுய்ஜன்ஸ் ஆய்வுக் கலம் என்று இந்த விண்கலத்துக்கு பெயர் வைக்கப்பட்டது.

ஆய்வுக்கலத்தின் முடிவு தொகு

2017 செப்டம்பர் 15 அன்று தனது பணிகளில் ஒன்றாக அதி வேகத்தில் சனி கிரகத்தை நோக்கிப் பாய்ந்தபோது, பல துண்டுகளாக உடைந்து தீப்பிடித்து அழிந்துபோய் தன் பணிகளை முடித்துக்கொண்டு அழிவுற்றது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Krebs, Gunter Dirk. "Cassini / Huygens". Gunter's Space Page. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2016.
  2. 2.0 2.1 2.2 "Cassini–Huygens: Quick Facts". NASA. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2011.
  3. Barber, Todd J. (23 ஆகத்து 2010). "Insider's Cassini: Power, Propulsion, and Andrew Ging". NASA. Archived from the original on 2 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. Corum, Jonathan (18 December 2015). "Mapping Saturn’s Moons". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/interactive/2015/12/18/science/space/nasa-cassini-maps-saturns-moons.html. பார்த்த நாள்: 18 December 2015. 
  5. என். ராமதுரை (18 செப்டம்பர் 2017). "சனியுடன் கலந்த காசினி!". தி இந்து. 
  6. என்.ராமதுரை (18 செப்டம்பர் 2017). "சனியுடன் கலந்த காசினி!". கட்டுரை. தி இந்தி. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசினி-ஐசென்&oldid=3696652" இலிருந்து மீள்விக்கப்பட்டது