சுவாமிநாதன் அங்கிலேசரிய ஐயர்

சுவாமிநாதன் அங்கிலேசரிய ஐயர் (பிறப்பு: அக்டோபர் 12, 1942) ஒரு தாளிகையாளர், பத்தி எழுத்தாளர், பொருளாதாரத்துறை ஆய்வாளர், விமர்சகர் என பன்முகம் கொண்டவர். "சுவாமினோமிக்சு" என்னும் தலைப்பில் டைம்சு ஆப் இந்தியா நாளிதழில் வாரம்தோறும் பொருளியல், அரசியல் தொடர்பான தம் கருத்துகளை எழுதி வருகிறார். அமெரிக்காவின் வாசிங்டனில் உள்ள கேட்டோ நிறுவனத்தில் ஆய்வு அறிஞராக இருபது ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வருகிறார்.[1].

சுவாமிநாதன் எஸ் அங்கிலேசரிய ஐயர்
பிறப்புஅக்டோபர் 12, 1942
மகாராட்டிரம், இந்தியா
பணிசெய்தியாளர், எழுத்தாளர்
சமயம்இறைமறுப்பு
பிள்ளைகள்பல்லவி அய்யர், சேகர் ஐயர், ருஸ்டம் ஐயர்

பிறப்பும் கல்வியும்

தொகு

சாமிநாத ஐயரின் தந்தை சங்கர் ஐயர்; தாயார் பாக்கியலட்சுமி. இவருடைய அண்ணன் மணி சங்கர் ஐயர் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். பள்ளிக் கல்வியை டூன் பள்ளியிலும்[2] மேல் படிப்பை தில்லி புனித ஸ்டீபன் கல்லூரியிலும் முடித்தார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுநிலைப் பட்டம் பெற்றார்[3]. ஆண் பெண் சம நிலையை எடுத்துக்காட்டும் வகையில் தம் மனைவியின் பெயரான அங்கிலேசரியா என்பதைத் தம் பெயருடன் இணைத்துக் கொண்டார்.

  • ’பைனான்சியல் எக்ஸ்பிரசு’ நாளிதழ் ஆசிரியர் (1988-90)
  • ’எக்கனாமிக்சு டைம்சு’ நாளிதழிழ் ஆசிரியர் (1992-94)
  • ’எக்கனாமிஸ்டு’ இதழின் இந்திய நிருபர் (1976-85, 1990–98) ஆண்டுகள்
  • காடோ நிறுவனத்தில் ஆலோசகர்

எழுதிய நூல்கள்

தொகு
  • ’உலகமயமாக்கலை நோக்கி’ (Towards Globalisation, ஆங்கில நூல்-1992)
  • ’சுவாமினாமிக்ஸ்’ (Swaminomics: Escape from the Benevolent Zookepers, ஆங்கில நூல்-2008)

தனி வாழ்க்கை

தொகு

ஆண் பெண் சமநிலை, சம உரிமை அடிப்படையில் சாமிநாத ஐயர் தம் மனைவியின் பெயரான அங்கிலேசரியா என்பதை தம் பெயருடன் இணைத்துக்கொண்டார். இவர் ஒரு தாராள சிந்தனையாளராகவும் நாத்திகராகவும்[4] இருந்து கருத்துகளை எழுதி வருகிறார். பல்லவி ஐயர், சேகர் ஐயர், ருஸ்டம் ஐயர் ஆகிய மூவர் சாமிநாத ஐயரின் பிள்ளைகள் ஆவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Swaminathan S. Anklesaria Aiyar". கேட்டோ நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2008-01-23.
  2. The Doon School Old Boys' Society Register (Aiyar, Swaminathan Tata House) p.45
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-28. பார்க்கப்பட்ட நாள் 2014-03-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Aiyar, Swaminathan (2006-02-12). "A liberal atheist demands respect". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2008-10-31.