சுவாமி குருபரானந்தர்

சுவாமி குருபரானந்தர் மரபு நெறிப்படி அத்வைத வேதாந்த சாத்திரங்களை கற்பிக்கும் ஆசிரியர். இவர் சுவாமி பரமார்த்தனந்த சரசுவதியின் சீடர். தம் குருநாதரிடம் முறைப்படி வேதாந்த சாத்திரங்களைப் பயின்றவர். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களிடம் துறவற தீட்சை பெற்றவர்.

ஆன்மிகப் பணிகள்தொகு

சுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.[1]

வேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் பூர்ணாலயம் என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.

ஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்தொகு

 • பகவத் கீதை[2]
 • உபநிடதங்கள்[3]
 • விவேகசூடாமணி[4].
 • பகவத் கீதையின் சாரம்[5].
 • பஞ்சதசீ [6]
 • வேதாந்த சாரம் [7].
 • உத்தவ கீதை[8].
 • பிரம்ம சூத்திரம் [9]

எழுதிய நூல்களில் சிலதொகு

 • ஆன்மீகப் பாதையில்[10]
 • நற்பண்புகள் [11]
 • உபநிடதங்களின் விளக்க உரை[12]
 • சாந்தி பாடங்கள் [13]
 • Human Values (ஆங்கிலம்)

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_குருபரானந்தர்&oldid=2755739" இருந்து மீள்விக்கப்பட்டது