சுவாமி பரமார்த்தனந்தர்
சுவாமி பரமார்த்தனந்தர் (பிறப்பு: 18 மே 1953) சுவாமி தயானந்தரின் சீடரான இவர் இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காட்டில் சுப்ரமணிய ஐயர் - பார்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று மூத்த உடன்பிறப்புகளுடன் வளர்ந்த இவர் ஆரம்ப பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை பாலக்காட்டில் பெற்றார். 1976ம் ஆண்டில் சுவாமி பரமார்த்தானந்தர் தனது குரு சுவாமி தயானந்த சரசுவதி மும்பையில் நடத்திய சாந்தீபனி சாதனாலயாவில் மூன்று ஆண்டு வேதாந்த படிப்பில் சேர்ந்தார். அங்கு அவர் சமசுகிருதம் மற்றும் பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் போன்ற சாஸ்திரங்கள் மற்றும் பல பிரகாரண-கிரந்தங்களைப் படித்தார். படிப்பை முடித்த பிறகு தனது குருவின் உத்தரவின் பேரில் பிரம்மச்சாரியாக சென்னைக்கு சென்று வேதாந்தம் கற்பிக்கத் தொடங்கினார். அவர் 1984ம் ஆண்டு தனது குருவிடமிருந்து சன்னியாசம் பெற்றார். இவர் சென்னையில் வாழ்ந்து நகரின் பல்வேறு மையங்களில் வேதாந்தக் கல்வியைக் கற்பிக்கிறார்.[1]
இவரிடம் அத்வைத மற்றும் வேதாந்தம் பயின்ற மாணவர்களில் புகழ்பெற்றவர்கள் சுவாமி குருபரானந்தர் மற்றும் சுவாமி ஓம்காரநந்தர் ஆகியோர் வேதாந்த வகுப்புகளை சென்னை, உத்திரமேரூர் மற்றும் தேனியிலும் நடத்தி வருகின்றனர்.
சுவாமி பரமார்த்தனந்தர் ஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்
தொகு- பகவத் கீதை
- உபநிடதங்கள்
- பிரம்ம சூத்திரம்
- பஞ்சதசீ
- விவேக சூடாமணி
- தத்துவ போதம்
- உத்தவ கீதை
- வேதாந்த சாரம்
- ஆத்மபோதம்
- மாண்டூக்ய காரிகை
- மற்றும் பல
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகு- சுவாமி பரமார்த்தனந்தர்
- சுவாமி பரமார்த்தனந்தர் பரணிடப்பட்டது 2019-09-16 at the வந்தவழி இயந்திரம்