சுவாமி சம்பவானந்தா
சுவாமி சம்பவானந்தா (Swami Shambhavananda) (1894 – 1972) கருநாடகத்தில் வாழ்ந்த இந்து மத துறவி ஆவார்.
வாழ்க்கை
தொகுசுவாமி சம்பவானந்தா என்பவர் இந்தியவினை சார்ந்தவர். இவர் இந்து மத துறவியாவார். இவர் கருநாடகத்தின்குடகு பகுதியில் தேனீ வளர்ப்பின் முன்னோடியாகவும்[1] மற்றும் மைசூர் பகுதியில் மேல்நிலைக் கல்வி மேம்பாட்டில் பங்கெடுத்தவரும் ஆவார்.
சுவாமி சம்பாவனந்தா குடகில் செங்கப்பா எனப்படும் தெலிபாண்டா குடும்பத்தில் கல்லுகுண்டா கிராமத்தில் பிறந்தார். இவர் 1917ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள இராமகிருசுண இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் சுவாமி பிராமணந்தாவின் ஆரம்ப சீடராக இருந்தார் பின்னர் 1924இல் சந்நியாசம் பூண்டார்.[2]
சம்பாவனந்தா, குடகு மாவட்டத்தில் உள்ள பொன்னம்பேட்டையில் ராமகிருஷ்ணா சரதாஷ்ராமாவின் முதல் தலைவராக இருந்தார்.[3] பின்னர் 1941ல் மைசூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் தலைவரானார்.[4] இவர் இறக்கும் வரை அந்த பதவியிலிருந்தார். இவர் இராமகிருட்டிணா மடத்தின் அறங்காவலராகவும், இராமகிருசுணா இயக்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
மைசூரில் சம்பாவனந்தா சிறுவர்களுக்கான புகழ்பெற்ற குடியிருப்புப் பள்ளியான ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாஷலத்தை நிறுவினார். இவர் வேதாந்தா கல்லூரி அல்லது இராமகிருஷ்ணர் ஒழுக்க மற்றும் ஆன்மீக கல்வி நிறுவனத்தையும் (ரிம்ஸ்) நிறுவினார். திறமையான நிர்வாகி, கடுமையான ஒழுக்கநெறி, ஆர்வமுள்ள சக ஊழியர் மற்றும் தொலைநோக்கு கல்வியாளர் ஆகியோரின் நற்பெயரினைப் பெற்று ச்சிறந்த நிர்வாகியாகப் புகழ் பெற்றார்.[5][6]
மலேரியா ஒழிப்பு
தொகுகுடகுப் பகுதியில் சம்பாவனந்தா மலேரியாவை ஒழிப்பதற்கான மேற்கொண்ட முயற்சியால் புகழ்பெற்றார். குடகு மொழியில் சொல்லி பாட்ட (Solle paata-"கொசு கவிதை") எனும் பாடலை பாடிக்கொண்டே[7] 1930 மற்றும் 1940களில் மலேரியாவினை ஒழிப்பதற்குக் கிராமம் கிராமமாக விழிப்புணர்வு யாத்திரையினை மேற்கொண்டார்.[8]
தேனீ வளர்ப்பு
தொகுசம்பாவனந்தா நவீன தேனீ வளர்ப்பில் குடகுப் பகுதியில் 1928இல் முன்னோடியாக இருந்தார். தேனீ வளர்ப்பு குடகு மற்றும் உள்ளூர் மக்களின் பொருளாதார வலிமை மேம்படக் காரணமாக அமைந்தது. கர்நாடக அரசாங்க உதவியுடன் சம்பாவனந்தா முயற்சியினால் குடகில் 1931 முதல் 1941ஆம் ஆண்டு நவீன தேனீ வளர்ப்பில் விரைவான முன்னேற்றம் அடைந்தது. இந்தியாவின் முதல் தேனீ வளர்ப்பவர்களின் கூட்டுறவுச் சங்கம் 1936இல் விராசுப்பேட்டையில்[9] தோற்றுவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ The Complete Book on Beekeeping and Honey Processing. NIIR PROJECT CONSULTANCY SERVICES. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-905685-5-5.
- ↑ Muthanna, I. M. (1971). The Coorg Memoirs (the Story of the Kodavas). Usha Press. p. 211.
- ↑ Activities of Ramakrishna Saradashrama, Ponnampet பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Welcome to Sri Ramakrishna Ashrama, Mysore பரணிடப்பட்டது 2007-07-17 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Swami Shambhavananda(Kannada). Rashtrothana Parishat.
- ↑ Silver Jubilee Souvenir. Shri Ramakrishna Vidyashala.
- ↑ Souvenir. Bee keepers society,Srimangala.
- ↑ Golden Jubilee Souvenir. Shri Ramakrishna Vidyashala. p. 78
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-24. பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.