சுவா (நாட்டுப்புற இசை)

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கோண்ட் பெண்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல் ஆகும்

சுவா என்பது சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கோண்ட் பெண்கள் தீபாவளி பண்டிகையின் போது பாடும் நாட்டுப்புறப் பாடல் ஆகும். 'சுவா' என்ற பெயர் ' கிளி ' என்ற வார்த்தையிலிருந்து வந்தது, கிளி எவ்வாறு  சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்லுமோ, அதே பொன்றே இந்த நாட்டுப்புற பாடல்களும் அமைந்துள்ளது,  நாட்டுப்புறக் கதைகளின்படி, பெண்கள் தங்கள் இதயத்தின் வேதனையை அவர்கள்  காதலர்களுக்கு கிளிகள் மூலம் செய்திகளை வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடினால் அக்கிளிகள், அப்படியே தங்கள் இதயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்  பாடுகிறார்கள், இது சில நேரங்களில் 'வியோக்' அல்லது 'பிரிவினை' பாடல் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டுப்புறப் பாடல் பொதுவாக நெல் அறுவடையின் போது பாடப்படும். தீபாவளிக்குப் பிறகு, கோண்டி பெண்கள் இரண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த வகைப் பாடலைப் பாடுகிறார்கள். [1]

பாரம்பரிய நடனங்களுடன் சிவன் மற்றும் பார்வதி ஆகிய இரு கடவுள்களுக்கு இடையேயான திருமணத்தை கொண்டாடும் வகையில் பாடல் அமைந்துள்ளது. அதைச் சார்ந்த பாடலாகக் கருதப்படுகிறது. சில இடங்களில் மண் சுவா (கிளி) செய்து இந்தப் பாடல் பாடப்படுகிறது. இது தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி, தீபாவளியன்று சிவன்-பார்வதி (கௌரா-கௌரி) திருமணத்துடன் முடிவடைகிறது. சுவா நடனம் பொதுவாக மாலையில் தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்களும்  மூங்கில் கூடைகள் முழுக்க  நிரப்பப்பட்ட நெல் தானியத்தின் நடுவில் ஒரு கிளி சிலையை வைத்து, கூடை சிவப்பு துணியால் கூடையை மூடி, தங்கள் வீடுகளில் இருந்து  தலைகளில் சுமந்து கொண்டு வந்து, கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில். கூடுகிறார்கள். பொதுவாக எதாவது ஒரு விவசாயியின் வீட்டு முற்றத்தின் நடுவில் தான் கூடுவார்கள். பின்னர் பாடல்கள் பாடிக்கொண்டே கூடையிலிருந்து துணியை அகற்றி, விளக்கை ஏற்றி கூடையைச் சுற்றி வட்ட வடிவில் நடனமாடி, தங்கள் பாடலின் வழியாக கிளி  சிலையை நோக்கி உரையாற்றுகிறார்கள். 

சத்தீஸ்கரில், இந்த பாடல் நடனத்தில் எந்த இசைக்கருவியும் பயன்படுத்தப்படவில்லை. [2] இந்தப் பாடலைப் பெண்கள் கைதட்டலில் பாடுகிறார்கள். தமிழகத்தில் பாடப்படும் கும்மியாட்டத்தை ஒத்து இந்த நடனம் ஆடப்படுகிறது. சில கிராமங்களில், பெண்கள் தாளத்தின் தொனியை தீவிரப்படுத்த தங்கள் கைகளில் ஒரு மரக் கட்டையை வைத்திருப்பார்கள். [3] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Of Parrots, Women- songs and Harvest: Sua Naach of Chhattisgarh". Sahapedia (in ஆங்கிலம்).
  2. "सुवागीत/Suva Geet". Sahapedia (in ஆங்கிலம்).
  3. "सुआ गीत". IGNAC.
  4. "सुआ व राऊत नाचा ने बांधा समा, लोक गीत व गौरा-गौरी के गीतों में झूमे लोग". Dainik Bhaskar.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவா_(நாட்டுப்புற_இசை)&oldid=3658329" இலிருந்து மீள்விக்கப்பட்டது