சுவிக்கி
நிறுவன வகைதனியார்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
தலைமையகம்பெங்களூரு
சேவைத்தளங்கள்500+ இந்திய நகரங்கள்
தோற்றுவித்தவர்நந்தன் ரெட்டி
ஸ்ரீஹர்ஷா மஜெட்டி
ராகுல் ஜைமினி
துறைஇணையவழி உணவு கோரல்
சேவைஉணவு விநியோகம்
வருவாய்Increase 2,776 கோடி (US$350 மில்லியன்)[1] (2020)
பதிவு செய்தல்அவசியமில்லை
தற்போதைய நிலைசெயலில்
உரலிwww.swiggy.com


சுவிக்கி (ஆங்கில மொழி: Swiggy) இந்தியாவின் மிகப்பெரிய [2] [3] இணையவழி உணவு கோரல் மற்றும் உணவு விநியோக தளமாகும். சுவிக்கி ஜூலை 2014 இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் இந்தியாவின் பெங்களூருவில் உள்ளது, செப்டம்பர் 2021 நிலவரப்படி, 500 இந்திய நகரங்களில் செயல்படுகிறது. [4] [5] 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சுவிக்கி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சுவிக்கி மளிகை பொருள் விநியோகத்தை தொடங்கியது. [6] [7] [3]

செப்டம்பர் 2019 இல், சுவிக்கி உடனடி எடுப்பு/விடுப்பு(pickup/drop) சேவையான 'சுவிக்கி கோ'வை அறிமுகப்படுத்தியது. [8] வணிக வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு சலவை துணிகள், ஆவணங்கள், பொட்டலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விநியோகம் செய்வதற்கு இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது. [9]

வரலாறு

2013 ஆம் ஆண்டில், நந்தன் ரெட்டி மற்றும் ஸ்ரீஹர்ஷா மஜெட்டி ஆகிய இரு நிறுவனர்களும், இந்தியாவிற்குள் கொரியர் சேவை மற்றும் விநியோகத்தை எளிதாக்குவதற்காக பண்டில் என்ற ஒரு இணைய வணிக வலைத்தளத்தை வடிவமைத்தனர். [10] பண்டில் உணவு விநியோக சந்தையில் நுழைய, சுவிக்கி என மறுபெயரிடப்பட்டது. [11]

மார்ச் 2021 இல், ஸ்விக்கி சென்னையில் , சுகாதார மையம் ஒன்றை அமைத்தது .[12]

குறிப்புகள்

  1. Peerzada, Abrar (28 January 2021). "Swiggy's revenue jumps 115% to Rs 2,776 cr, losses up 61% to Rs 3,768 cr". பிசினஸ் ஸ்டாண்டர்ட். https://www.business-standard.com/article/companies/swiggy-s-revenue-jumps-115-to-rs-2-776-cr-losses-up-61-to-rs-3-768-cr-121012800027_1.html. 
  2. Nishant Sharma (23 December 2018). "Online Food Delivery: Swiggy Vs Zomato: Who Has A Better Chance To Win India's Hunger Games?". BloombergQuint. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
  3. 3.0 3.1 Deepti Chaudhary (15 March 2019). "Can Swiggy take more orders?". பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
  4. Madhav Chanchani (17 March 2019). "Online food delivery wars are moving from India to Bharat". பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
  5. IANS (2019-10-07). "Swiggy now in 500 Indian cities, targets 100 more this year". National Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
  6. Jon Russell (February 2019). "India's Swiggy goes beyond food to offer product delivery from local stores". TechCrunch. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
  7. Abhinav Singh (27 April 2019). "How food aggregator apps like Swiggy, Zomato, are trying innovative business methods". பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
  8. "India's Swiggy has a new service that will deliver just about anything". TechCrunch. பார்க்கப்பட்ட நாள் 2 March 2020.
  9. "Swiggy launches instant pick up and drop service 'Swiggy Go'". Livemint. 4 September 2019.
  10. "How Swiggy Became India's Fastest Unicorn". Livemint. 27 June 2018. பார்க்கப்பட்ட நாள் 31 August 2019.
  11. "Swiggy Timeline: From a Bootstrapped Venture to India's Fastest Growing Unicorn (Infographic)". Entrepreneur. 23 December 2018. பார்க்கப்பட்ட நாள் 31 August 2019.
  12. "Swiggy launches Health Hub in Chennai - ET Retail". ETRetail.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவிக்கி&oldid=3942629" இலிருந்து மீள்விக்கப்பட்டது