சு. ஸ்ரீகந்தராசா

சட்டத்தரணி

சு. ஸ்ரீகந்தராசா (பிறப்பு: அக்டோபர் 1, 1953) ஒரு சட்டத்தரணியும், எழுத்தாளரும் ஆவார். இவரது 25க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 1991 முதல் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் தலைவராகவும், விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். பேச்சாளர், நாடக நடிகர். பாடும் மீன், செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்களை பெற்றவர்.

சு. ஸ்ரீகந்தராசா
பிறப்பு1 அக்டோபர் 1953 (1953-10-01) (அகவை 71)
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, இலங்கை
இருப்பிடம்மெல்பேர்ண், ஆத்திரேலியா
தேசியம்இலங்கைத் தமிழர், ஆத்திரேலியர்
கல்விபட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம்
மட்/அரசினர் கல்லூரி (இந்துக்கல்லூரி),
கொழும்பு பல்கலைக்கழகம்,
இலங்கைச் சட்டக்கல்லூரி,
மெல்பேண் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஅவுஸ்திரேலிய குடிவரவுச் சட்ட முகவர், சட்டத்தரணி ,ஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்சுப்பையாபிள்ளை- சின்னம்மா

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

சுப்பையா ஸ்ரீகந்தராசா இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடியில் சுப்பையாபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகனாக 1953 ஒக்ரோபர் 1-ஆம் திகதி பிறந்தார். தனது பதினெட்டாவது வயதில் அரசாங்க எழுதுவினைஞர் சேவையில் இணைந்த அவர், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு ஆகிய இடங்களில் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர். அரசாங்க சேவையில் இருந்தபோதே கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாகச் சட்டம் படித்து, பட்டம் பெற்று, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை. கொழும்பு நீதிமன்றங்களில் சட்டத்தரணியாகப் பணியாற்றினார். அவர் களுவாஞ்சிக்குடியின் முதலாவது சட்டப்பட்டதாரியாவார்.

இலக்கியப் பணி

தொகு

சுதந்திரன் இதழ் நடத்திய கவிஞர் நீலாவணன் நினைவு வெண்பாப் போட்டியில் (1975) முதல் பரிசு பெற்றார். தமது 24 வயதிலேயே மட்டக்களப்பில் சிறந்த பேச்சாளருக்கான சொல்லின் செல்வர்' என்ற பட்டமும் பெற்றார். அவுஸ்திரேலியாவில் எல்லாளன் நாடகத்தை எழுதி இயக்கி மேடையேற்றினார். எஸ்.பொ.வின் வலை நாடகத்தையும் இயக்கியிருக்கிறார்.

சமூகசேவை

தொகு

இலங்கையில்

தொகு

1. செயலாளர், எம்.ஜி.ஆர் மன்றம். களுவாஞ்சிகுடி(1970 இலிருந்து) 2. இயக்குநர், இளம் நாடக மன்றம்;. களுவாஞ்சிகுடி(1971 இலிருந்து) 3. செயலாளர், இளைஞர் மறுமலர்ச்சி மன்றம்;. களுவாஞ்சிகுடி (1972) 4. அம்பாறை மாவட்டச் செயலர், அரசாங்க எழுதுவினைஞர்சங்கம்.(1974-75) 5. செயற்குழு உறுப்பினர், அகில இலங்கை அரசாங்க எழுதுவினைஞர்சங்கம். (1974-75) 6. ம.தெ.எ.பலநோக்குக் கூட்டுறவுச் சங்க இயக்குநர் சபை உறுப்பினர் (1973-74) 7. செயலாளர், பட்டிருப்பு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்(1974 – 77) 8. செயலாளர், களுவாஞ்சிகுடி புனர் வாழ்வுக்கழகம் (1977- சூறாவளிக்குப்பின்) 9. தலைவர், பட்டிருப்புத் தொகுதி கலைஞர் ஒன்றியம் (1982 இலிருந்து) 10. செயலாளர், களுவாஞ்சிகுடி வரியிறுப்பாளர் சங்கம் (1987-1988) 11. செயலாளர், களுவாஞ்சிகுடி சைவமகாசபை (1986-88) 12. இணைச்செயலாளர், களுவாஞ்சிகுடி பிரதேச பிரஜைகள் குழு (1988-91)

அவுஸ்திரேலியாவில்

தொகு

1. செயற்குழு உறுப்பினர், இலங்கைத் தமிழ் சங்கம் 1992 – 1999) 2. முத்தமிழ் விழாக்குழுத் தலைவர், (1993-2002) 3. தலைவர், இலங்கைத்தமிழ்ச்சங்கம் (ஈழத்தமிழ்ச்சங்கம்) (1999 – 2001) 4. தலைவர், அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகம் (1993-1994) 5. ஆசிரியர், “தமிழ் உலகம் – ” (இரு மொழிப் பத்திரிகை) 1994-1995 6. தலைவர், விற்றல்ஸீ தமிழ்ச்சங்கம் (2005-2010 வரை). 7. அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும். “வானமுதம்” தமிழ் ஒலிபரப்புச் சேவை (2005 இதுவரை) 8. தலைவர், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் (2011 – 2013) 9. பொதுச்செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் -அவுஸ்திரேலியா (தற்பொழுது)

எழுதிய நூல்கள்

தொகு
  • சந்ததிச் சுவடுகள் (மேடை நாடகங்கள், 1988)
  • மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள்
  • தமிழே தமிழினமே தாயகமே
  • தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும் (ஆய்வுக்கட்டுரைகள், 2006)
  • ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப் பயணம் (2006)

பெற்றுள்ள விருதுகள், பட்டங்கள்

தொகு
  1. . சிறந்த நடிகர், சிறந்த நாடக இயக்குநர், சிறந்த நாடக எழுத்தாளர், சிறந்த வில்லிசைக் கலைஞர் முதலிய விருதுகளை மட்டக்களப்பு கலாசாரப் பேரவையினால் 1970 ஆம் ஆண்டுக்கும் 1982 ஆம் ஆண்டுக்குமிடையில் பலமுறை பெற்றுள்ளார்.
  2. . பேச்சுப் போட்டிகளில் உள்ளூரிலும், மாவட்ட ரீதியிலும், அகில இலங்கை ரீதியிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
  3. . 1974 ஆம் ஆண்டு “சுதந்திரன்” பத்திரிகை நடாத்திய கவிஞர் நீலாவணன் நினைவு வெண்பாப் போட்டியில் முதற்பரிசு பெற்றார்.
  4. . அவுஸ்திரேலியாவில், அவரது தமிழ்ப்பணிக்காக விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கம், விக்ரோறிய தமிழ் கலாசாரக்கழகம், மெல்பேண் தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்புக்கள் பாராட்டி விருதுகளை வழங்கியுள்ளன.
  5. . 2005 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் “செந்தமிழ்ச் செல்வர்” என்ற பட்டமும் சிறப்பு விருதும், பல்லினக் கலாசார அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.
  6. . 2007 இல் அவுஸ்திரேலிய அரசால், விக்ரோறிய மாநிலத்துக்கான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டார்.
  7. . 2007 இல், இந்தியா, தமிழ் நாட்டில், திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித வளனார் கல்லூரி, “அயலக முத்தமிழ்ப் பணி” க்கான விருதை வழங்கிக் கௌரவித்தது
  8. . 2010 இல் அடிலைட்டில், தெற்கு அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழ்ச்சங்கம் “தென்னீழக் கலைவாணர்” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.
  9. . 2011 இல். “தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் சமுதாயம் என்பவற்றுக்கு அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்காக” மெல்பேண் திருமறைக்கலாமன்றம் விருது வழங்கிக் கௌரவித்தது.
  10. . 2013 இல், “கடந்த 22 வருடகாலத்திற்கும் மேலாக மெல்பேணில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அரும்பணியாற்றியமைக்கான விருது” விக்ரோறிய ஈழத்தமிழ்ச்சங்கத்தினால் சங்கத்தின் முத்தமிழ் விழாவில் வழங்கப்பட்டு, தமிழகத் தமிழறிஞர் முனைவர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டார்.
  11. "உலகத் தமிழ் மாமணி" விருது, 2020 பெப்ருவரி 7 ஆம் திகதி, பாண்டிச்சேரியில், 14 ஆவது, உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் வழங்கப்பட்டது.

உசாத்துணைகள்

தொகு
  • வீரகேசரி 27 ஏப்ரல் 2008 - எழுத்தாளரும் கலைஞருமான ஸ்ரீகந்தராசா
  • யாழ் எஸ். பாஸ்கர், "அக்கினிக்குஞ்சு"
  • களுவாஞ்சிகுடி, து. நிசாகரன்    -"பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா"
  • முகம், இந்திய சஞ்சிகை - 2008 ஜுலை . அட்டைப்பட அதிதி செந்தமிழ்ச் செல்வர் சு.சிறிகந்தராசா
  • ஆவூரான் - மணிவிழாநாயகர் செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராசா" ஞானம் - மார்ச் 2014
  • லெ.முருகபூபதி - "புகலிடத்திலும் அயராது இயங்கும் பாடும்மீன்" - அரங்கம் செய்திகள் 10 ஆகஸ்ட் 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ஸ்ரீகந்தராசா&oldid=4160808" இலிருந்து மீள்விக்கப்பட்டது