சூடாக்சா (Zootaxa) என்பது விலங்கியல் வகைப்பாட்டியலில் ஆய்வு வல்லுநர்களுக்கான சக மதிப்பாய்வு செய்யப்படும் அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது மக்னோலியா அச்சகத்தால் (ஆக்லாந்து, நியூசிலாந்து) வெளியிடப்படுகிறது. 2001-ல் சி-குயியாங் சாங் என்பவரால் இந்த இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்விதழின் பதிப்புகள் வாரத்திற்குப் பலமுறை வெளியிடப்படுகின்றன. 2001 முதல் 2020 வரை, 60,000க்கும் மேற்பட்ட புதிய சிற்றினங்கள் இந்த ஆய்விதழில் விவரிக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இது விலங்கியல் பதிவேடு ஆய்விதழில் பட்டியலிடப்பட்ட அனைத்து புதிய உயிரலகில் சுமார் 25% ஆகும்.[1] இந்த ஆய்விதழ் அச்சு மற்றும் இணையப் பதிப்பாகக் கிடைக்கின்றன.

சூடாக்சா
Zootaxa
 
சுருக்கமான பெயர்(கள்) Zootaxa
துறை
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: சி-குயியாங் சாங்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் மக்னோலிய அச்சகம் (நியூசிலாந்து)
வரலாறு 2001–முதல்
வெளியீட்டு இடைவெளி: ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன்
Open access கலப்பு
தாக்க காரணி 1.091 (2020)
குறியிடல்
ISSN 1175-5326 (அச்சு)
1175-5334 (இணையம்)
OCLC 49030618
இணைப்புகள்

ஆய்விதழ் மேற்கோள் அறிக்கையிலிருந்து தற்காலிக இடைநீக்கம்

தொகு

இந்த ஆய்விதழில் அதிக அளவு சுய-மேற்கோள்களைப் பதிவிட்டது. இதனால் 2019இன் ஆய்விதழின் தாக்கக் காரணி 2020-ல் ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட 34 ஆய்விதழ்களில் இதுவும் ஒன்று.[2] உயிரியலாளர் உரோசு மவுன்சு, புதிய சிற்றினங்கள் வகைப்பாட்டின் பெரும்பகுதியை வெளியிடும் ஒரு பத்திரிகைக்கு அதிக அளவு சுய-மேற்கோள் தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.[3] இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த முடிவு மாற்றப்பட்டது மற்றும் சூடாக்சாவால் வெளியிடப்பட்ட இதன் துறையின் ஏராளமான ஆவணங்களைக் கருத்தில் கொண்டு சுய மேற்கோள் அளவுகள் பொருத்தமானவை என்று பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்டது.[4]

மேலும் பார்க்கவும்

தொகு
  • சூகீசு, முழுமையாகத் திறந்த அணுகல் விலங்கியல் இதழ்
  • பைட்டோடாக்சா, மக்னோலியா அச்சகம் மூலம் வெளியிடப்பட்ட ஒரு தாவரவியல் ஆய்விதழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Contributions of Zootaxa to biodiversity discovery: an overview of the first twenty years
  2. Oransky, Ivan (2020-06-29). "Major indexing service sounds alarm on self-citations by nearly 50 journals". பார்க்கப்பட்ட நாள் 2020-07-01.
  3. Mounce, Ross (2020-07-03). "Suppression as a form of liberation?".
  4. Major indexing service reverses decision to suppress two journals from closely followed metric

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடாக்சா&oldid=3519809" இலிருந்து மீள்விக்கப்பட்டது