சூண்டல்
சூண்டல் (Choondal) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[1]
சூண்டல் Choondal | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | திருச்சூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 11,719 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 680502 |
தொலைபேசிக் குறியீடு | 04885 |
வாகனப் பதிவு | KL- |
அருகில் உள்ள நகரம் | திருச்சூர் |
மக்களவை (இந்தியா) | ஆலத்தூர் மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப்பேரவைத் தொகுதி | மணலூர் சட்டப்பேரவைத் தொகுதி |
புவியியல் அமைப்பு
தொகு10.617510° வடக்கு 76.094710°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சூண்டல் கிராமம் பரவியுள்ளது.
மக்கள் தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சூண்டல் கிராமத்தின் மக்கள் தொகை 11,719 ஆகும். இம்மக்கள் தொகையில் 5478 ஆண்கள் மற்றும் 6241 பெண்கள் ஆவர்[1]. சூண்டல் கிராமம் திருச்சூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பச்சைப் புல் துறைகளால் அகன்ற நிலப்பகுதியின் அழகானதொரு காட்சியை இங்குப் பார்க்க முடியும். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டிடங்கள் போன்ற சிறப்புகளால் இக்கிராமம் திருச்சூர் மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்குகிறது. நெல், தேங்காய், பாக்கு முதலியன இக்கிராமத்தின் பிரதான உற்பத்திப் பொருட்களாக உள்ளன. இக்கிராமத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் குருவாயூர் அமைந்துள்ளது.