சூத்திரதார் (சாதி)

இந்தியாவின் விஸ்வகர்மா சமூகத்தில் உள்ள ஒரு இந்து சாதி

சூத்திரதார் (Sutradhar) என்பது மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் வசிக்கும் விஸ்வகர்மா சமூகத்திற்குள் உள்ள ஒரு சாதி ஆகும்.[1][2][3] தச்சு வேலை அவர்களின் பாரம்பரிய தொழிலாக உள்ளது.[4][5] பெரும்பான்மையான இந்து சூத்திரதாரர்கள்வைணவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். விசுவகர்மன் அவர்களின் தெய்வமாக கருதப்படுகிறார்.[3]

கோத்திரம்120
குல தெய்வம் (ஆண்)விசுவகர்மன்
மதங்கள்இந்து சமயம்
மொழிகள்பெங்காலி
நாடுஇந்தியா இந்தியா
இனம்இந்தியன், வங்கதேசத்தவர்
சூத்திரதார் சாதியினர் பெரும்பாலும் தச்சு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தோற்றம்

தொகு

‘சூத்திரதார்’ என்ற வார்த்தையின் பொருள் நூல் வைத்திருப்பவர் என்பதாகும். சமசுகிருதத்தில் ‘சூத்திரா’ என்றால் நூல் என்று பொருள் (இது ஒரு வாளைக் குறிக்கப் பயன்படுகிறது. மேலும், ‘தார்’ என்றால் பிடிப்பது என்று பொருள்).[3]

மக்கள்தொகை

தொகு

சில சூத்திரதாரர்கள் சாக்தத்தை கடைப்பிடிக்கும் அதேவேளைய்ல், பெரும்பான்மையானவர்கள் வைணவப் பிரிவின் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் விசுவகர்மாவை வழிபட்டு, ‘விஸ்வகர்ம தினம்’ மற்றும் வசந்த பஞ்சமி அன்று அவருக்கு பலிகளை செலுத்துகிறார்கள்.[3]

சூத்திரதார் சாதி பர்தமேனியா, மந்தாரண்யா, கதிபேடா, அஸ்தகுல் மற்றும் ஐரி உள்ளிட்ட பல துணை சாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[6] பர்தமேனியா, மந்தாரண்யா மற்றும் அஸ்தகுல் பிரிவினர் தச்சர்கள் என்று நன்கு அறியப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் ஓவியர்கள், களிமண் உருவங்கள் தயாரிப்பவர்கள், கல் சிற்பங்கள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் கோயில்களின் கட்டுமானங்கள் போன்றா பணிகளையும் செய்பவர்களாக அறியப்படுகிறார்கள். கதிபேடா பிரிவினர் அடிப்படையில் கட்டிடக் கலைஞர்களாக இருந்தனர். அவர்கள் கோயில்கள், அரண்மனைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கட்டிடங்களின் வடிவமைப்பாளர்கள் என்று அறியப்பட்டனர்.[7]

சூத்திரதார்கள் பல்வேறு குலங்கள் அல்லது கோத்ரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த குலங்கள் அனைத்தும் மரபுவழியில் வ்தவையாகும். பொதுவான சூத்திரதாரர்களின் குடும்பப்பெயர்களில் தத்தா, சந்தா, தே, பால், சில், குண்டு, மேனா, மன்னா, மகாராணா, ராணா, பாந்த்ரா, ரக்சித், சூத்ராதர், பண்டாரி, பௌசுதார், தாஸ், கர் ஆகியவை அடங்கும்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Durgadas Mukhopadhyay (2017). Folk Arts and Social Communication. Publications Division Ministry of Information & Broadcasting. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8123024882. Incidentally, Sutradhar is also the caste name of carpenters in Bengal who specialise in making dolls, puppets, clay models and masks which are used in various folk performances in the region.
  2. Sanjay Paswan, Jaideva Paramanshi, ed. (2002). Encyclopaedia of Dalits in India: Emancipation and empowerment. Kalpaz Publications. p. 218.
  3. 3.0 3.1 3.2 3.3 Faroqi 2015.
  4. Ghosh & Ghosh 2000, ப. 96.
  5. Atal, Yogesh (2012). Sociology: A Study of the Social Sphere. Pearson Education India. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-13179-759-4.
  6. Ghosh & Ghosh 2000, ப. 97.
  7. 7.0 7.1 Ghosh & Ghosh 2000, ப. 98.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூத்திரதார்_(சாதி)&oldid=4133062" இலிருந்து மீள்விக்கப்பட்டது