செங் (ஆங்கிலம், மலாய் மொழி: Cheng) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு நகரமாகும். அலோர் காஜா நகரத்திற்கும் மலாக்கா மாநகரத்திற்கும் மையத்தில் அமைந்து இருப்பதால், அண்மைய காலங்களில் மிகத் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நகரத்தை அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை (Alor Gajah-Central Malacca-Jasin Highway) வழியாகவும் சென்று அடையலாம்.

செங்
Cheng
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்அபு பாக்கார் முகமட் டியா (2013 - 2018)
 • சட்டமன்ற உறுப்பினர்சஷாலி முகமட் டின்
(2013 - 2018)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை: (ஒசநே)
அஞ்சல் குறியீடு75260
தொலைபேசி குறியீடு06

இந்த நகரம் பத்து பிரண்டாம் நகரில் இருக்கும் மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இங்கு புக்கிட் செங், செங் பிரதானா, செங் பாரு போன்ற சில வீடமைப்புத் திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அமைவு தொகு

செங் நகரத்திற்கு தொழில்துறை வளாகமும் உள்ளது. அங்கே செங் தொழில்நுட்ப பூங்கா (Cheng Technology Park) உருவாக்கப் பட்டுள்ளது. இது ஒரு தொழில்துறை நகரமாக மாறி வருவதால் நிறைய வங்கிகளும், உணவகங்களும் திறக்கப்பட்டு உள்ளன.[1]

செங் நகருக்கு அருகில் பாயா ரும்புட் எனும் சிறுநகரத்தில், இரண்டாவது டெஸ்கோ பேரங்காடி திறக்கப்பட்டு உள்ளது. அதற்கு அருகாமையில் செங் உத்தாமா, பாயா ரும்புட் மனைத் திட்டங்களும் உருவாக்கம் கண்டுள்ளன.

சன்னாசிமலை ஆலயம் தொகு

செங் நகருக்கு அருகில் குருபோங் எனும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. இங்கே தான் மலேசியாவில் புகழ்பெற்ற அருள்மிகு சன்னாசிமலை ஆண்டவர் ஆலயம் உள்ளது. இது 150 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஓர் ஆலயம்.[2]

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சன்னாசிமலைத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகின்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானுக்கு காவடிகள் எடுத்து சிறப்புகள் செய்கின்றனர். இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஏராளமான சீனர்களும் காவடிகள் எடுக்கிறார்கள்.[3]

அருகிலுள்ள பகுதிகள் தொகு

செங்கிற்கு அருகில் உள்ள நகரங்கள்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்&oldid=3910013" இலிருந்து மீள்விக்கப்பட்டது