குருபோங்
குருபோங் (மலாய்; ஆங்கிலம்: Krubong; சீனம்:古鲁邦) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலாக்கா நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும்; அலோர் காஜா நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
குருபோங் | |
---|---|
Krubong | |
மலாக்கா | |
ஆள்கூறுகள்: 2°17′10″N 102°15′3″E / 2.28611°N 102.25083°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | மத்திய மலாக்கா |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | 75260[1] |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 (0)6 336-0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
இணையதளம் | www |
இந்த நகரத்தின் வழியாக அருகாமை நகரங்களுக்குச் செல்ல பல முக்கிய சாலைகளும்; நெடுஞ்சாலைகளும் உள்ளன.[2] குருபோங் நகரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்க உதவும் முக்கிய சாலை சுங்கை ஊடாங் - ஆயர் குரோ நெடுஞ்சாலை (Lebuhraya Sungai Udang – Ayer Keroh) ஆகும். இந்தச் சாலையின் வழியாக டுரியான் துங்கல், பத்து பிரண்டாம் மற்றும் செங் போன்ற நகரங்களுக்குச் செல்லலாம்.
மலாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் குருபோங் நகரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள குருபோங் தொழில் பூங்கா (Krubong Industrial Park) பல்லாயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
உள்கட்டமைப்புகள்
தொகு- ஆங் ஜெபாட் விளையாட்டு வளாகம்[3]
- ஆங் ஜெபாட் அரங்கம் (முக்கிய அரங்கம்)
- ஆங் ஜெபாட் கால்பந்து அரங்கம்
- ஆங் ஜெபாட் நீர்வாழ் மையம்
- ஆங் ஜெபாட் குதிரையேற்ற மையம்
- ஆங் ஜெபாட் புல்தரைப் பந்தாட்ட மையம்
- ஆங் ஜெபாட் சுவர்ப்பந்து மையம்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Taman Krubong Jaya, Melaka - Postcode - 75260 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
- ↑ "Stadium Hang Jebat Bakal Dihidupkan Semula". Free Malaysia Today. Bernama. 3 August 2018.
- ↑ "Majlis Sukan Negeri". nsc.gov.my.