செங்கமலமுடையார் சாஸ்தா

கயத்தார் செங்கமலமுடையார் சாஸ்தா கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு செங்களமுடையார் சாஸ்தா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கயத்தார்
அமைவிடம்:மதுரை மற்றும் திருநெல்வேலி மையப்பகுதி,கயத்தார் தூத்துக்குடி மாவட்டம்[1]
கோயில் தகவல்
சிறப்புத் திருவிழாக்கள்:வண்ணார் மாடன்,எமதர்ம ராஜா,பிரம்ம சக்தி,சிவானந்த பெருமாள்,பலவேசக்காரன்,தளவாய் நல்லமாட சாமி,கொம்பு மாடன்

வரலாறு

தொகு
 
செங்களமுடையார் சாஸ்தா நுழைவுவாயில்

இந்த குளத்தில் தான் கயத்தாரை சேர்ந்த சலவைத்தொழிலாளர்கள் துணி வெளுப்பது வழக்கம்.ஒரு நாள் வண்ணார்கள் வழக்கமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் தாங்கள் கொண்டு வந்த துணிகளை தாழிப் பானையில் வைத்து துணிதுவைத்தனர் மதிய வேளையில் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை குளத் தின் கரையில் அமர்ந்து உண்டனர் உண்ட மயக்கத்தில் சலவைத் தொழிலாளர்கள் மரத்தடியில் தூங்கினர் அந்திசாயும் நேரம் ஆனது அனைவரும் துவைத்து உலர வைத்த துணிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு அவரவர் வீடுகளுக்கு செல்ல காரம் செடி அடியில் வைத்திருந்த தாழி பானையை எடுக்க முற்படும் நேரத்தில் பானையானது சற்றும் நகராமல் இருந்தது கடப்பாரை கம்பி,மண்வெட்டியைக் கொண்டு வெட்டி எடுத்து பார்த்தனர் அவர்களால் பானையை அப்புறப்படுத்த முடியவில்லை என்ன செய்வதென்று அறியாத அந்த சலவைதொழிலாளர்கள் பானையை செய்த வேளாளரை அழைத்து வந்தார்கள் வேளாளர் வந்தும் பானையை எடுக்க முடியவில்லை சாமிகள் இருள் கவ்வும் நேரம் நெருங்கியது அனைவரும் வீட்டுக்கு சென்றனர்.நடந்த விவரத்தை சலவைத் தொழிலாளர்கள் ஊராரிடம் எடுத்துக் கூறினர்.ஊரார் அதை நம்ப மறுத்தார்கள் அன்று இரவு நித்திரையில் ஆழ்ந்த சலவைத் தொழிலாளர்களில் ஒருவரும் வயதில் பெரியவ ருமான அவர் கனவில் தோன்றிய சாஸ்தா தன்னுடைய பூத படைகளுடன் செங்கமல மலருடன் காட்சி கொடுத்தார் சங்கடம் போக்கும் சாமுண்டி ஒன்று என்று அழைக்கப்பட்டது பிற்கால சேரர்கள் கால சேர நாடு பரசுராமரின் கேரளநாடு சிவன் கோயில்களுடன் அன்னை பராசக்தியை பகவதியாக அம்மனாக சாமுண்டி தேவியாக பல இடங்களில் நிறுவி,அந்த அம்மன்களை இடத்தின் பெயருடன் சேர்த்து அழைத்து வழிபட்டு வந்தனர் இவ்வாறு கரிக்ககம் என்ற இடத்தில் உருவானதுதான்,"தேவி கரிக்ககத்தம்மா" என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி ஆலயம் சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயம்,சக்திமிக்க கோயிலாக திகழ்ந்து வருகிறது,இந்த ஆலயத் தில் உக்கிர சொரூபிணியாக வீற்றிருக்கும் ரத்த சாமுண்டி அம்மன்,சத்தியத்தை நிலை நாட்டும் தெய்வமாக அருட்பாலித்து வருகிறாள் இந்த ஆலயத்தில் ஜாதி,மத வேறுபாடின்றி சில சிக்கலான வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகின்றன குற்றம் சாட்டியவரும்,குற்றவாளியும் தீபச்சுடரில் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.இதன் மூலம் நிச்சயம் உண்மை வெளிப்படும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும் சாமுண்டி தேவியின் தண்டனைக்கு பயந்தே அனைவரும் உண்மையை ஒப்புக்கொள்வார்கள் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயி லின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது இத்தலம் வணங்கி பின்னர் தான்,தாழி பானையில் இருக்கிறேன் எனக்கு சிலை கொடுத்து நிலையம் இட்டு வந்தால் உங்கள் குடும்பத்தையும் குலத்தையும் நான் வாழவைப்பேன் என்று வாக்குக் கொடுத்தார் கனவு கலைந்து எழுந்தார் சலவைத்தொழிலாளி என்ன செய்வது என்று அறியாது சாமி,நானோ அன்றாடம் துணி துவைச்சு அதில் வரும் வருமானத்தை வச்சு வாழக்கூடிய வன் உனக்கு என்னால எப்படியப்பா பூஜை செய்யமுடியும் என்று உருகினார்,உடனே சாஸ்தா “உனக்கு உறுதுணையாக உன்னுடன் வந்த வேளாளரை வைத்துக் கொள் அவர் எனக்கு பூஜை செய்வார்" என்று வாக்கு கொடுத்தார்.இதுபோல் அந்த வேளாளர் கனவிலும் தோன்றிய செங்கமலர் சாஸ்தா தான் இன்னார் கனவில் தோன்றி கூறியுள்ளேன் உன்னை அழைக்க வந்தால் மறுக்காமல் அவருடன் செல் என்று கூறி மறைந்தார் அரண் உதயத்தில் ஆதித்தன் விழிக்கும் முன் வேளாளரை அழைத்துக்கொண்டு சலவைத் தொழிலாளி அய்யனார் குளம் நோக்கி விரைந் தார் அங்கே ஸ்ரீ பூரண புஷ்கலை சமேதமாக செங்கமலமுடையார் சாஸ்தா காட்சி கொடுத்தார்.அந்த அருபெரும் காட்சியை கண்டு மெய் உருகி நின்றனர் இருவரும் காலங்கள் உருண்டோடியது சுமார் முன்னூறு ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு நாள் வேளாளர் வாரிசு மதிய வேலையில் சாஸ்தாவிற்கு பூஜை செய்து வந்தார் பால் கொண்டு அபிஷேகம் செய்து பச்சரிசிப் பொங்கல் வைத்தார் ஒரு நாள் வேளாளருக்கு பால் கிடைக்காமல் போயிற்று என்ன செய்வ தென்று திகைத்த வேளாளர் கோயில் அருகே ஆட்டு கிடை போட்டிருந்த கோனார் இருவரிடம் சென்று "ஐயா கொஞ்சம் பால் தாங்களே" என்று வேளாளர் கேட்டார் “இவனுக்கு ஒரு நாள் பால் கொடுத்தோம்" என்றால் இதே வாடிக்கையாக வைத்துக்கொண்டு தினமும் கேட்பான் என்று எண்ணி பால் இல்லை என்று அந்த கோனார் கூறினர்.வருத்தமடைந்த வேளாளர் சாஸ்தா கற்சிலை மேனியை நீரினால் கழுவி பச்சரிசிப் பொங்கல் வைத்து பூஜை செய்தார்,பூஜை நடக்கும் நேரம்,கிடையில் நின்ற ஆடுகள் அனைத்தும் செத்து விழுந்தது.இதைக் கண்ட கோனார்கள் செய்வதறியாது திகைத்தனர் அந்த நேரம் சாஸ்தா கோயிலில் மணியடித்தது உடனே கோனார்கள் சாஸ்தா சந்நதி வந்து வணங்கினர்,உடனே சாஸ்தாவின் தீர்த்தம் தெளித்து பிரம்பால் ஆடுகளை எழுப்பி அனைத்தையும் பிழைக்க வைத்தார்,அன்று முதல் சாஸ்தா செத்த ஆட்டை பிழைக்க வைத்த செங்கமலமுடையார் சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார்.கயத்தாறுக்கு மேற்கே ஸ்ரீ பூரண,புஷ்கலை சமேதமாக செங்கமலமுடையார் கருவறையில் அமர்ந்த கோலத்தில் அருளாட்சி புரிகிறார்.பரிவார தெய்வங்களாக செல்வ விநாயகர்,எமதர்மராஜா,வன்னியராஜா,பேச்சி அம்மன்,பிரம்மராக்கு அம்மன்,பிரம்மசக்தி,சிவனணைந்த பெருமாள்,புதுமாடசுவாமி, இருளப்பசுவாமி,சின்னதம்பிசுவாமி பலவேசக்காரன்,தளவாய்,நல்லமாட சுவாமி,தளவாய்மாடத்தி,கொம்புமாடன் கசமாடன்சுவாமி,ஆழி பூதத்தார்,முத்து புதியவன்சுவாமி,வண்ணாரமாடசுவாமி கருப்பசாமி,சுடலைமாடசுவாமி,முண்ட சுவாமி,இவர்களுடன் கன்னி தெய்வமும் உள்ளன,இத்திருக்கோயில் மண் குடிசையில் இருந்த சஸ்தா வெள்ளையப்பர் பணிக்கர் காலத்திற்கு பின்பு திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது சாதி,சமய வேறுபாடின்றி மக்கள் அனைவரும் சாஸ்தாவை வணங்கி வருகின்றனர்,இன்றளவும் வண்ணார் மக்களின் குல தெய்வமாக இந்த சாஸ்தா வணங்கபட்டு வருகின்றது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 28, 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. ஆசிரியர் சு.இளம்கலைமாறன்,ஆன்மிகமலர்,தினகரன் பதிப்பகம் 03-08-2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கமலமுடையார்_சாஸ்தா&oldid=3934189" இலிருந்து மீள்விக்கப்பட்டது