செங்கல்லூர் தாட்சாயணி

செங்கல்லூர் தாட்சாயணி (Chengalloor Dakshayani) (1930கள் - பிப்ரவரி 5, 2019) திருவிதாங்கூர் தேவஸ்வம் அமைப்புக்கு சொந்தமான ஒரு பெண் ஆசிய யானையாகும். இது இந்தியாவின் கேரளாவில் திருவனந்தபுரத்திலுள்ளசெங்கல்லூர் மகாதேவன் கோவிலில் வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 5, 2019 அன்று இறக்கும் போது ஆசியாவில் சிறைபிடிக்கப்பட்ட பழமையான யானை என்று நம்பப்பட்டது. இது "கஜ ராஜ தாட்சாயணி" என்றும் "தாட்சாயணியம்மா" என்றும் "கஜ முத்தச்சி" (யானை பாட்டி) என்றும் அழைக்கப்பட்டது.

செங்கல்லூர் தாட்சாயணி
இனம்ஆசிய யானை
பால்பெண் யானை
பிறப்பு1930கள்
கேரளம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு5 பெப்ரவரி 2019
பாப்பனம்கோடு
நாடுஇந்தியா
அறியப்படுவதற்கான
 காரணம்
சிறைப்பிடிக்கப்பட்ட மிக வயதான யானை
உரிமையாளர்திருவிதாங்கூர் தேவஸ்வம் அமைப்பு

வாழ்க்கை தொகு

திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் எர்ணாகுளம் அருகே உள்ள கொடநாடு யானை முகாமில் யானைக் குட்டியை வாங்கி, 1949இல் ஆற்றிங்கல்லிலுள்ள தங்கள் திருவாரட்டு காவு கோவிலுக்கு நன்கொடையாக அளித்தனர்.[1] இதற்கு 19 வயதாக இருந்தபோது;[2][3] 1960களின் இறுதியில் செங்கல்லூர் மகாதேவன் கோவிலுக்கு மாற்றப்பட்டது. ஜூலை 18, 2007 அன்று மாநில வனத்துறை இதன் வயதை 76 என பதிவு செய்தது.[4][5] 2016ஆம் ஆண்டில், ஆசியாவிலேயே பழமையான யானையாக மாறியபோது, சிறைப்பிடிக்கப்பட்ட மிக வயதான யானையாக கின்னஸ் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டது.[6] இதற்கு முன்பு 2003ஆம் ஆண்டில் தைபே மிருகக்காட்சிசாலையின் இலின் வாங் என்ற யானை தனது 86 வயதில் இந்த சாதனையைப் படைத்தது.[7][8][9] கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட யுனிவர்சல் பதிவுகள் மன்றம், "சிறைப்பிடிக்கப்பட்ட மிக வயதான யானை" என்று சான்றளித்தது.[10] சில கணக்குகளால் இந்த யானை கின்னஸால் சாதனை படைத்தவள் என்று சான்றளிக்கப்பட்டது. மேலும் நிகழ்வைக் கொண்டாட ஒரு அஞ்சல் அட்டையும் வெளியிடப்பட்டது.[11] சங்கிலியால் பிணைக்கப்படாத ஒரு பெரிய அடைப்பை இதற்கு வழங்கவும் கோயில் நிர்வாகம் தயாராகியது.[12]

செங்கல்லூர் தாட்சாயணி, இதன் அணிவகுப்பு 2015க்கு பிறகு தடை செய்யப்பட்டது. ஆனால் 2017இல் கோவில் சடங்குகளில் மட்டும் பங்கேற்றது.[1][7] இதற்கு ஓய்வு வழங்காதது கொடுமையானது என்று புகார்கள் வந்தன.[13] இதனுடைய கடைசி வருடங்களில் நடமாடுவதில் சிக்கல் இருந்தது. பிப்ரவரி 5, 2019 அன்று மதியம் 3 மணியளவில் பாப்பனம்கோட்டில் உள்ள ஒரு பராமரிப்பு நிலையத்தில் இருந்த இதன் தங்குமிடம் இடிந்து விழுந்து இறந்தது.[11][14][15] அப்போது இந்த யானைக்கு 88 வயது [5][14][16] அல்லது 89[8] இருக்கலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Cithara Paul (April 4, 2017). "The 86-year old Guinness record holder who refuses to retire". The Week இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 9, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190209181544/https://www.theweek.in/content/archival/news/india/the-eighty-six-year-old-who-refuses-to-retire.html. 
  2. "World's Oldest Elephant Dakshayani Is A Kerala Temple's Pride". Asian Elephant Secretariat. October 13, 2016. Archived from the original on பிப்ரவரி 9, 2019. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 7, 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. Sreedevi Jayarajan (February 6, 2019). "'Granny Dakshayini', Asia's oldest captive elephant from Kerala passes away". https://www.thenewsminute.com/article/granny-dakshayini-asia-s-oldest-captive-elephant-kerala-passes-away-96274. 
  4. M. S. Vidyanandan (April 25, 2016). "Meet Dakshayani - World's Oldest Elephant in Captivity". New Indian Express. http://www.newindianexpress.com/states/kerala/2016/apr/25/Meet-Dakshayani---Worlds-Oldest-Elephant-in-Captivity-928692.html. 
  5. 5.0 5.1 "Dakshayani, oldest Asian elephant, dies". The Hindu. February 6, 2019. https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/dakshayani-oldest-asian-elephant-dies/article26188163.ece. 
  6. "Dakshayani becomes the eldest elephant in Asia" (in Malayalam). Manorama News. July 27, 2016. https://www.youtube.com/watch?v=Gg_BwNdemeE. 
  7. 7.0 7.1 Revathi Rajeevan (July 27, 2016). "At 86, world's oldest captive elephant is yet to retire". India Today. https://www.indiatoday.in/india/story/at-86-worlds-oldest-captive-elephant-is-yet-to-retire-331740-2016-07-27. 
  8. 8.0 8.1 "Gaja Raja Mutthashi Dhakshayani breathes her last at 89". February 5, 2019. http://www.keralakaumudi.com/en/news/kerala/general/gaja-raja-mutthashi-dhakshayani-breathes-her-last-at-89-46729. 
  9. Rana Das (July 25, 2016). "At 86, Elephant 'Dakshayani' To Enter Guinness World Records" இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 9, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190209124530/https://english.kolkata24x7.com/86-elephant-dakshayani-enter-guinness-world-records.html/. 
  10. "Kerala 'granny' jumbo eyes world record". India Times. July 28, 2016. https://photogallery.indiatimes.com/news/india/kerala-granny-jumbo-eyes-world-record/articleshow/53430946.cms. 
  11. 11.0 11.1 "Asia's oldest captive elephant Dakshayani dies at 88". The Tribune. February 6, 2019. https://www.tribuneindia.com/news/nation/asia-s-oldest-captive-elephant-dakshayani-dies-at-88/724937.html. 
  12. M. S. Vidyanandan (December 11, 2016). "At 86, granny Dakshayani to get a chain-free spacious enclosure". New Indian Express. http://www.newindianexpress.com/states/kerala/2016/dec/11/at-86-granny-dakshayani-to-get-a-chain-free-spacious-enclosure-1547806.html. 
  13. "86-year-old Dakshayani is oldest captive elephant, should she be allowed to retire?". July 28, 2016. https://www.thenewsminute.com/article/86-year-old-dakshayani-oldest-captive-elephant-should-she-be-allowed-retire-47233. 
  14. 14.0 14.1 "India's Oldest Captive 'Granny' Elephant Dies At 88". Agence France-Presse. NDTV. February 7, 2019. https://www.ndtv.com/india-news/dakshayani-indias-oldest-captive-granny-elephant-dies-at-88-in-kerala-1989913. 
  15. "ഗജരാജമുത്തശ്ശി ദാക്ഷായണി ഇനി ഓർമ" (in Malayalam). February 6, 2019 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 8, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190208074738/https://www.mathrubhumi.com/print-edition/kerala/dakshayani-oldest-asian-elephant-dies-1.3545509. 
  16. "'Oldest known elephant in captivity' dies at 88 in India". BBC News. February 7, 2019. https://www.bbc.com/news/world-asia-india-47161030. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கல்லூர்_தாட்சாயணி&oldid=3930152" இலிருந்து மீள்விக்கப்பட்டது