செசோட்டிரிஸ் கரைத்தட்டு
செசோட்டிரிஸ் கரைத்தட்டு (Sesostris Bank) என்பது நீரில் மூழ்கிய கரைத்தட்டு அல்லது நீரில் மூழ்கிய பவளத் தீவு ஆகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.[1]
செசோட்டிரிஸ் கரைத்தட்டு | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | இலட்சத்தீவுகள் |
உப தீவு | அமினிதிவி |
பரப்பளவு | |
• மொத்தம் | 388.53 km2 (150.01 sq mi) |
Languages | |
• Official | Malayalam |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
புவியியல்
தொகுபஸ்ஸாஸ் டி பெட்ரோ கரைத்தட்டை அடுத்து இலட்சத்தீவுகளின் இரண்டாவது மிகப்பெரிய பவளத்தீவு இதுவேயாகும். இதன் கடற்காயல் பரப்பளவு 388.53 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். செசோட்டிரிஸ் கரைத்தட்டின் விட்டம் 22 கிலோமீற்றர்கள் ஆகும்.[2]
தீவுகளோ, சிறு தீவு மேற்பரப்புக்களோ இங்கு காணப்படவில்லை. இக்கரைத்தட்டின் ஆழம் 20 தொடக்கம் 70 மீற்றர்கள் ஆகும். கரைத்தட்டை அண்டிய பகுதிகளில் இதன் ஆழம் 700 மீற்றர்கள் ஆகும்.[3] அரச கடற்படையின் நீராவிப் போர்க்கப்பலான ஏஸ்எம்எஸ் செசோட்டிரிஸ் கப்பலின் பெயரில் இருந்தே இக்கரைத்தட்டிற்குப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hydrographic Description (Indian Ocean Pilot)
- ↑ Lagoon sizes
- ↑ "Lakshadweep; geographical information". Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2016-01-10.