செட்டி தனுஜா இராணி

செட்டி தனுஜா இராணி (Chetti Thanuja Rani; பிறப்பு 1993) என்பவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தில் உள்ள அரக்கு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.[3] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வெற்றி பெற்றவர்களில் ஒருவர் ஆவார்.[4][5][6]

செட்டி தனுஜா இராணி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 June 2024
முன்னையவர்கீதா கொத்தபள்ளி
தொகுதிஅரக்கு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வேலைஅரசியல்வாதி

இளமையும் கல்வியும்

தொகு

கும்மா தனுஜா இராணி, அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தில் உள்ள அடுமண்டாவினைச் சார்ந்த கும்மா சியாம் சுந்தர் ராவ் மகளாக உக்கும்பேட்டில் பிறந்தவர். இவர் செட்டி வினய் என்பவரை மணந்து செட்டி யஷ்னா என்ற மகளின் தாயாக உள்ளார்.[7] இராணி செட்டி பால்குணனின் மருமகள் ஆவார். கிர்கிசுத்தானின் பிசுக்கெக்கில், கிர்கிசுத்தான் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் மருத்துவப் பள்ளியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். இவர் அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தில் தொற்றுநோயியல் நிபுணராகவும் பணியாற்றினார்.[8]

தொழில்

தொகு

ஆந்திரப் பிரதேசத்தில் 14.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்றான அரக்கு மக்களவைத் தொகுதியில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியல் அறிமுகமானார் இராணி.[4][9] இவர் 4,77,005 வாக்குகள் பெற்று பாரதிய ஜனதா கட்சியின் கொத்தப்பள்ளி கீதாவை 50,580 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் [10]

மேற்கோள்கள்

தொகு
  1. Pranathi, Laxmi (2024-04-29). "Two Educated Women in Clash for Araku Lok Sabha Seat". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  3. Correspondent, D. C. (2024-03-17). "YSRC changes Araku MP candidate for second time". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  4. 4.0 4.1 "Gumma Thanuja Rani, YSRCP Candidate from Araku Lok Sabha Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Lok Sabha Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  5. "Araku, Andhra Pradesh Lok Sabha Election Results 2024 Highlights: Gumma Thanuja Rani Wins the Seat by 50580 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  6. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S011.htm
  7. https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter?_token=mNzTVBX5iK8YCzsTMWLj7KL8Y7Aw37PTEmbVowZF&electionType=24-PC-GENERAL-1-46&election=24-PC-GENERAL-1-46&states=S01&constId=1&submitName=6&page=2
  8. "Former deputy collector to take on young doc in Araku LS constituency". The Times of India. 2024-04-02. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/former-deputy-collector-to-take-on-young-doc-in-araku-ls-constituency/articleshow/108956815.cms. 
  9. https://www.moneycontrol.com/elections/lok-sabha-election/andhra-pradesh/constituencies/araku-constituency-s01led2008p001/
  10. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S011.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டி_தனுஜா_இராணி&oldid=4054947" இலிருந்து மீள்விக்கப்பட்டது