செண்டியன்ஸ் பாலிடிக்ஸ்

செண்டியன்ஸ் பாலிடிக்ஸ் (Sentience Politics), அல்லது உணர்திற அரசியல், என்பது மனிதரல்லாத விலங்குகளின் துன்பத்தைக் குறைக்கும் நோக்கோடு தொடங்கப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு விலங்கினவாத எதிர்ப்பு அரசியல் அமைப்பாகும்.[2] 2013-இல் நிறுவப்பட்ட இவ்வமைப்பின்[3] செயல்பாடுகளில் நிலையான உணவுக்கான வாக்கெடுப்பு முன்முயற்சிகள்,[4][5] முதனி வகை விலங்குகளுக்கான அடிப்படை உரிமைகள்,[6] தொழிற்முறை விலங்குப்பண்ணை (factory farming) மீதான தடை[7] உள்ளிட்ட அரசியல் பிரச்சாரங்கள் அடங்கும்.

செண்டியன்ஸ் பாலிடிக்ஸ்
Sentience Politics
புனைப்பெயர்செண்டியன்ஸ்
உருவாக்கம்2013; 11 ஆண்டுகளுக்கு முன்னர் (2013)
நோக்கம்மனிதரல்லா விலங்குகளின் துன்பங்களைக் குறைத்தல்
தலைமையகம்
சேவை
 சுவிட்சர்லாந்து
ஆட்சி மொழி
ஜெர்மன்
பிரெஞ்சு
இணைத்தலைவர்கள்
கேத்தரின் ஹெர்மன்ஸ்
நவோகி பீட்டர்
நிர்வாக இயக்குனர்
பிலிப் ரைஃப்
வலைத்தளம்sentience.ch/en

வரலாறு

தொகு

எஃபெக்டிவ் ஆல்ட்ரூயிசம் அறக்கட்டளையின் ஒரு திட்டமாக செண்டியன்ஸ் பாலிடிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டது. இவ்வறக்கட்டளையின் மற்ற திட்டங்களில் "ரைசிங் பார் இபெக்டிவ் கிவிங்" மற்றும் அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் ஆகியவை அடங்கும்.[8] இத்திட்டத்தின் நோக்கமானது உணர்திற உயிர்களான மனிதன் மற்றும் மனிதரல்லா விலங்குகளின் துன்பங்களை திறம்படக் குறைப்பது குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதாகும்.[9] இப்பணியைத் தற்போது 2017-ல் நிறுவப்பட்ட செண்டியன்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற தனி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் அரசியல் முன்னெடுப்புகளை மட்டும் செண்டியன்ஸ் பாலிடிக்ஸ் அமைப்பு தொடர்ந்து கவனித்து வருகிறது.[10]

செண்டியன்ஸ் பாலிடிக்ஸ் 2017 முதல் ஒரு சுதந்திர சுவிஸ் சங்கமாகச் செயல்பட்டு வருகிறது.[11]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள் தரவுகள்

தொகு
  1. "Who we are". Sentience (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
  2. www.sentience.ch, Sentience Politics, Basel. "Who we are". Sentience (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Sentience Politics. "About Us". பார்க்கப்பட்ட நாள் November 20, 2016.
  4. "Bürgerbegehren für vegane Gerichte in Kreuzberger Kantinen". October 11, 2016. பார்க்கப்பட்ட நாள் December 8, 2016.
  5. "Kommt jetzt der Vegan-Zwang in Zürich?". March 7, 2015. பார்க்கப்பட்ட நாள் January 8, 2017.
  6. Camille Krafft (July 10, 2016). "L'idée de donner des droits aux primates fait son chemin à Bâle". Le Matin. http://www.lematin.ch/matindimanche/idee-donner-droits-primates-chemin-ble/story/26143475. 
  7. "Swiss to vote on banning factory farming".
  8. Effective Altruism Foundation. "Projects". பார்க்கப்பட்ட நாள் January 8, 2017.
  9. Sentience Politics. "Research Agenda". பார்க்கப்பட்ட நாள் November 16, 2016.
  10. Institute, Sentience. "Introducing Sentience Institute". Sentience Institute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-22.
  11. "Sentience – Who we are". பார்க்கப்பட்ட நாள் January 30, 2018.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்டியன்ஸ்_பாலிடிக்ஸ்&oldid=4060905" இலிருந்து மீள்விக்கப்பட்டது