செந்தொண்டை ஈப்பிடிப்பான்

செந்தொண்டை ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைசெடுலா
இனம்:
பை. அல்பிசிலா
இருசொற் பெயரீடு
பைசெடுலா அல்பிசிலா
பாலாசு, 1811
வேறு பெயர்கள்
  • பைசெடுலா பர்வா அல்பிசிலா

செந்தொண்டை ஈப்பிடிப்பான்[2] அல்லது தைகா ஈப்பிடிப்பான் [Taiga flycatcher (பைசெடுலா அல்பிசிலா)] என்பது தொல்லுலக ஈப்பிடிப்பான் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு வலசை போகும் குருவி ஆகும். இக்குருவியினம் சைபீரிய தைகா காடுகள் தொடங்கி காம்சட்கா தீபகற்பம் வரையிலும் மங்கோலியாவிலும்[3] இனப்பெருக்கம் செய்கின்றது. இது இந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் மழைக்காலத்தில் வலசை போகின்றது. இந்தியாவின் மேற்குப் பகுதிகளிலும் வட, வடகிழக்குப் பகுதிகளிலும் இக்குருவியைக் காணலாம்; தமிழ்நாட்டில் அரிதாகவே காணப்படுப்படுகிறது[4].

உடலமைப்பும் அடையாளமும் தொகு

  • உடல் நீளம் 11.5 செ. மீ. முதல் 12.5 செ. மீ. வரை நீளம் இருக்கும்; பழுப்பு நிற உடலும் வெண்ணிற அடிப்பகுதியும் கொண்டது.
  • வாலின் மேற்பகுதி கருப்பாகவும் ஓரமும் அடிப்பகுதியும் வெண்மையாகவும் இருக்கும்.
  • ஈப்பிடிப்பான்களுக்கே உரித்தான பெரிய கண்ணும் அதைச் சுற்றி வெண்ணிற வளையமும் உண்டு; கருத்த, சிறிய அலகினைக் கொண்டது.
  • ஆண் குருவியின் தொண்டைப் பகுதியில் உள்ள செம்மஞ்சள் (ஆரஞ்சு) திட்டும் தலைப்பகுதியின் நீலம் கலந்த சாம்பல் நிறமும் இதை எளிதில் அடையாளம் காண உதவும்.

கள இயல்புகள் தொகு

செந்தொண்டை ஈப்பிடிப்பானை மரங்கள் அடர்ந்த தோட்டங்களிலும் காடுகளிலும் காணலாம். பறக்கும் போதே இவை, இரையைப் பிடிப்பதும் இலைகளில் புழுக்களைத் தேடும் போது கதிர்குருவிகளைப் போன்ற செயல்பாட்டினையும் கொண்டது. மரங்களில் உள்ள பொந்துகளில் 4 முதல் 7 முட்டைகள் வரை இடும்[5]. மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதால் இவ்வினத்திற்கு ஆபத்து ஏற்படுகின்றது.[6]

குரல் தொகு

ட்ர்ர்ர் (trrr...) என்றும் அழுத்தமான டிக் ... டிக் ... என்றும் குரலெழுப்பும்; குரல் உயர் சுருதியில் அதிர்வொலியாக இருக்கும்.[7]

படத் தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International. (2017). "Ficedula albicilla". IUCN Red List of Threatened Species 2017: e.T22734119A119301073. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22734119A119301073.en. https://www.iucnredlist.org/species/22734119/119301073. பார்த்த நாள்: 10 October 2021. 
  2. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 178:4. பி. என். எச். எஸ்.
  3. https://avibase.bsc-eoc.org/species.jsp?avibaseid=99985173A619C8F2
  4. "தைகா ஈப்பிடிப்பான் பரவல்". ebird.org. பார்க்கப்பட்ட நாள் 02 May 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. https://www.birdforum.net/opus/Taiga_Flycatcher
  6. "oiseaux-birds.com". oiseaux-birds.com. பார்க்கப்பட்ட நாள் 02 May 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Taiga flycatcher call". xeno-canto.org. பார்க்கப்பட்ட நாள் 03 May 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)