சென்காகு தீவுகள்
சென்காகு தீவுகள் (尖閣諸島 சென்காகு-ஷோடோ?), என்றும் டயாயு தீவுகள் (எளிய சீனம்: 钓鱼岛及其附属岛屿; பின்யின்: Diàoyúdǎo jí qí fùshǔ dǎoyǔ; என்றும் டியாயுதய் தீவுகள் (மரபுவழிச் சீனம்: 釣魚台列嶼; பின்யின்: Diàoyútái liè yǔ) என்று தாய்வானிலும்,[1] அல்லது ஆங்கிலேயர்களால் பின்னக்கிள் தீவுகள் , (Pinnacle Islands) என்றும் அழைக்கப்பட்ட தீவுக் குழுமம் கிழக்குச் சீனக் கடலில் உள்ள ஆட்களற்ற தீவுகளாகும். இவை சீன நிலப்பகுதியின் கிழக்கிலும் தாய்வானின் வடகிழக்கிலும் ஒகினாவா தீவின் மேற்கிலும் ரிக்யு தீவுகளின் தென்மேற்கு முனையின் வடக்கிலும் அமைந்துள்ளன.
தீவுகளின் அமைவிடம் (சிவப்பு சதுரத்தினுள்). | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பசிபிக் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 25°44′41.49″N 123°28′29.79″E / 25.7448583°N 123.4749417°E |
மொத்தத் தீவுகள் | 5 + 3 பாறைகள் |
முக்கிய தீவுகள் | யோட்சுரி-ஜிமா / டயாயு டாவ் தயிஷோ-ஜிமா / சிவீ யூ கூபா-ஜிமா / யுவாங்வை யூ கீடா-கோஜிமா / பெய் சியாடோ மினாமி-கோஜிமா / நான் சியாடோ |
நிர்வாகம் | |
Japan | |
City | Ishigaki, Okinawa |
1968ஆம் ஆண்டில் இத்தீவுகளைச் சுற்றியுள்ள கடலுக்கடியில் எண்ணெய் சேமிப்புகள் இருக்கலாம் என்ற ஆய்வறிக்கையின் பின்னர் இத்தீவுகளின் மீதான கவனம் கூடியது.[2] 1971ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து சப்பானிடமிருந்து கைப்பற்றியிருந்த ஐக்கிய அமெரிக்கா இவற்றை மீளவும் சப்பானிடம் வழங்கியபோது இத்தீவுகளின் மீதான சப்பானின் ஆளுமை உரிமையை சீன மக்கள் குடியரசும் சீனக் குடியரசும் எதிர்த்தன. சீனா இந்தத் தீவுகளை தாங்களே 14ஆம் நூற்றாண்டில் கண்டறிந்ததாகவும் உரிமை உடையவர்களாகவும் கோரியது. சப்பான் 1895 முதல் 1945இல் சரண் அடையும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஐக்கிய அமெரிக்கா 1945 முதல் 1972 வரை தனது கட்டில் வைத்திருந்தது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ WantChinaTimes.com (8 July 2012). "Former New Taipei councilor explains PRC flag controversy". WantChinaTimes.com. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 21 July 2012.
- ↑ Lee, Seokwoo. Territorial Disputes among Japan, China and Taiwan concerning the Senkaku Islands (Boundary & Territory Briefing Vol.3 No.7). IBRU. p. 10-11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1897643500.
For a long time following the entry into force of the San Francisco Peace Treaty China/Taiwan raised no objection to the fact that the Senkaku Islands were included in the area placed under US administration in accordance with the provisions of Article of the treaty, and USCAP No. 27. In fact, neither China nor Taiwan had taken up the question of sovereignty over the islands until the latter half of 1970 when evidence relating to the existence of oil resources deposited in the East China Sea surfaced. All this clearly indicates that China/Taiwan had not regarded the Senkaku Islands as a part of Taiwan. Thus, for Japan, none of the alleged historical, geographical and geological arguments set forth by China/Taiwan are acceptable as valid under international law to substantiate China's territorial claim over the Senkaku Islands.
- ↑ Lee, Seokwoo. (2002). Territorial Disputes Among Japan, China and Taiwan Concerning the Senkaku Islands, pp. 10–13., p. 10, கூகுள் புத்தகங்களில்
வெளி இணைப்புகள்
தொகு- Google maps, Senkaku Islands
- "Q&A China Japan island row," BBC News Asia-Pacific. September 24, 2010.
- Globalsecurity.org — "Senkaku/Diaoyutai Islands"; References, Links
- Inventory of Conflict and Environment (ICE), Diaoyu Islands Dispute பரணிடப்பட்டது 2010-11-18 at the வந்தவழி இயந்திரம்
- Waseda University — Hayashi Shihei. (1785). 三国通覧図説 (Sangoku Tsuran Zusetsu)